த்ரிஷாவின் திட்டம்!
த்ரிஷா, தனது செகண்ட் ரவுண்டில் கமல், விஜய், அஜித், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவருகிறார். கோலிவுட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தவர், மற்ற மொழி என பார்க்கையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் "விஷ்வம்பரா'’ படத்தில் நடித்துவந்தார். தற்போது திரி விக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இன்னொரு ஹீரோயின் நிதி அகர்வால். இந்தப் படம் மூலம் வெங்கடேஷுக்கு ஜோடியாக நான்காவது முறையாக நடிக்கிறார் த்ரிஷா. செகண்ட் ரவுண்டில் தமிழில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டது போல் தெலுங்கிலும் அது தொடரவேண்டும் என்பதே த்ரிஷா வின் திட்டமாம். அதில் முதற்கட்ட மாக சிரஞ்சீவி, வெங்கடேஷ் என பயணிக்கும் த்ரிஷா, மற்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.
பூஜா ஓ.கே!
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தொடர்ந்து பிஸியாக இருக்கும் தனுஷ், தனது லைனப்பில் நடிகராக "தேரே இஷ்க் மெய்ன்' இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, ‘"போர் தொழில்'’இயக்குநர் விக்னேஷ்ராஜா படத்தில் நடிக்கவுள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ‘"டிராகன்'’ படத்தில் நடித்த கயாடுலோஹர் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனையால் விலகிவிட்டார். எனவே அவருக்குப் பதில் பூஜா ஹெக்டே உள்ளே வந்துள்ளார். பூஜா ஹெக்டே, தற்போது விஜய்யின் ‘"ஜனநாயகன்'’, ராகவா லாரன்ஸின் ‘"காஞ்சனா 4'’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ரஜினியின் ‘"கூலி'’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.
கன்னடத்தில் என்ட்ரி!
தமிழ் மற்றும் தெலுங்கில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் அனிருத். ரசிகர்களைக் கவரும் வகையில் துள்ளலான இசையை கொடுத்து வருவதால் முன்னணி ஹீரோக்களும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் "கூலி', "ஜெயிலர் 2', "ஜனநாயகன்', "மதராஸி' உள்ளிட்ட படங்களுக்கும், தெலுங்கில் "கிங்டம்', "தி பாரடைஸ்' உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருபவர், அடுத்து "கே.ஜி.எஃப்' புகழ் யஷ் நடிக்கும் "டாக்சிக்'’ படத்தில் இணைந்ததன் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார். படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திட்டமிட்டுள்ளதால் இப்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
மக்கள் காவலன்!
"கெத்து' தினேஷை வைத்து ‘"வேட்டுவம்'’ படத்தை இயக்கிவரும் பா.ரஞ்சித் தனது நீலம் ஸ்டூடியோஸ் பேனரில் துருவ் விக்ரம் -மாரி செல்வ ராஜ் கூட்டணியின் ‘"பைசன்'’ மற்றும் "கெத்து' தினேஷ், கலையரசன் -அதியன் ஆதிரை கூட்டணியின் ‘"தண்டகாரண்யம்'’ ஆகிய படத்தை தயாரித்தும் வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘"குட்நைட்'’ மணிகண்டன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘"மக்கள் காவலன்'’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பா.ரஞ்சித் திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சந்தோஷ்குமார் இயக்கவுள்ளார். இப்படம் பா.ரஞ்சித்தின் படங்களில் இருக்கும் வழக்கமான சாதி ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்டோரின் அரசியல் ஆகிய அம்சங்களை அழுத்தமாகப் பேசும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ படத்தில் மணிகண்டன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில்... அதுபோல் இந்த கதாபாத்திரமும் அமையவுள்ளதாக பேசிக்கொள் கிறார்கள் கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில்.