சமந்தா யோசனை!
வெற்றிமாறன் -சிம்பு கூட் டணியில் "அரசன்'’என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியிலிருந்து தொடங்கவுள்ளது. "வட சென்னை'யை மையப்படுத்தி இப்படம் உருவாவதால் அந்தப் படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பல கேரக்டர் கள் இதிலும் வருகிறது. படத்தின் மற்றொரு ஹீரோயின் கேரக்டருக்கு முன்னணி நடிகைகள் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்து சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அதோடு, வேறு சில டாப் நடிகைகளிடமும் பேசிவருகிறார்களாம்.
தனுஷ் பரபரப்பு!
ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ், ஒவ்வொன்றாக படுவேகத்தில் முடித்து வருகிறார். முதலில் இந்தியில் "தேரே இஷ்க் மே' படத்தில் நடித்து முடித்த அவர், அடுத்து "போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வந்தார். இதையடுத்து அவர் கமிட்டாகியிருந்த "அமரன்' பட டைரக்டர் ராஜ் குமார் பெரியசாமி யின் இயக்கத்தில் நடிக்க தயாராகிவருகிறார். தனுஷின் 55வது படமாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நாயகியாக மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி யும் சுமுகமாக முடிய வில்லை. இப்போது பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளார் களாம். ஹீரோ யின் கமிட்டாக லேட்டானாலும் தன் னுடைய போர்ஷன்களை லேட் செய்யாமல் திட்ட மிட்டபடி முடிக்க வேண்டும் என இயக்குநருக்கு அறி வுறுத்தியுள்ளாராம் தனுஷ். அடுத்து மாரி செல்வராஜ் படம், அப்துல் கலாமின் பயோ பிக் என பிஸியாகவே பரபரக்கிறார் அவர்.
சாய்பல்லவி ஹேப்பி!
இதுவரை தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்திவந்த சாய்பல்லவி, அமீர்கான் தயாரிப்பில் அவரது மகன் ஜுனைத்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘"மேரே ரஹோ'’ படம் மூலம் பாலிவுட்ல் அறிமுகமாகிறார். படம் வரும் டிசம்பர் 12 ரிலீஸாகிறது. முதல் படமே இன்னும் வெளியாகாத நிலை யில், பெரிய பொருட்செலவில் தயாராகும்‘"ராமாயணா'’ படத்தில் சீதையாக நடிக்கிறார். அதை முடித்துவிட்டு அடுத்து ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் ஒன்றில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பையும் பெற்றுள்ளார். "நடிகையர் திலகம்', "கல்கி 2898 ஏடி'’உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஷ்வின், அடுத்ததாக நாயகியை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் சாய்பல்லவியை கமிட் செய்துள்ளார். குறுகிய காலத்திலேயே பல பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி யில் இருக்கிறார் சாய்பல்லவி.
பாசிட்டிவ் அதுல்யா!
முன்னணி நடிகை அந்தஸ்தை பெற ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் அதுல்யா ரவி, தீபாவளிக்கு வெளியாகவுள்ள "டீசல்'’ படத்தின் நல்ல ஓபனிங்கிற்காக காத்திருக்கிறார். இவரது முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு ஓபனிங் நன்றாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரி வித்துள்ளதாம். இதற்குக் காரண மாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. "பார்க்கிங்', "லப்பர் பந்து' வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் படம் ரிலீஸாவதும், படத்தில் இருந்து முன்னதாக வெளியாகி ஹிட்டடித்த ‘பீர்’ பாடலும் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேள்விப்பட்ட அதுல்யா, படத்திற்கு தொடர்ந்து பாசிட்டி வான விஷயங்கள் நடப்பதால், தனக்கு இப்படம் நல்லதொரு வெற்றிப் பாதையை அமைத்து கொடுக்கும் என்ற நம்பிக் கையோடு காத்திருக் கிறாராம்.
-கவிதாசன் ஜெ.