ஆக்ஷன் ராஷ்மிகா!

இந்தி மற்றும் தெலுங் கில் பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என விரும்பும் அவர், தற்போது நடித்து வரும் "மைசா'’என்ற தெலுங்கு படத்தில் ஆக்ஷன் மோடுக்கு மாறியுள்ளார். அதேபோல் இந்தியில் அவர் நடித்துவரும் "காக் டெய்ல் 2'’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப் படங்களைத் தொடர்ந்து அட்லி -அல்லு அர்ஜுன் படத்தில்  முதல் முறை யாக நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.  இந்த கதாபாத்திரம் முதலில் ஒரு ஆணாக வடிவமைக்கப்பட்டு பின்பு சில மாற்றங்கள் செய்து பெண்ணாக மாற்றப் பட்டுள்ளது. இதுவரை காதல், ரொமான்ஸ் என பார்த்த ராஷ்மிகாவை ஆக்ஷன் கலந்த நெகட்டிவ் ரோலில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். "புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகைகள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

டைரக்டர் நவ்யா!

மலையாள நடிகை நவ்யா நாயர் தமிழ்ப் படங்களிலும் நடித்து கவனம் பெற்றவர். "மாயக்கண்ணாடி', "ராமன் தேடிய சீதை' போற்ற படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத் தது. திருமணத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் குறைவான படங் களிலே நடித்து வந்தார். இப்போது மீண்டும் பழையபடி நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த சூழலில் அவர் புது அவதார மாக இயக்குநர் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த எண்ணம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்த தாம்... அதற்கான சூழல் அமையாததால் அமைதி யாகவே இருந்தாராம். ஆனால் இப்போது  கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுமூச்சாக கதை எழுதும் பணியில் இறங்குகிறார். இந்தப் படம் ஒரு பெண் ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது.

Advertisment

t1

கலக்கத்தில் வினோத்!

"ஜனநாயகன்'’ பட சென்சார் பிரச்சினையால் இயக்குநர் அ.வினோத், சற்று கலக்கமாக இருக்கிறார். காரணம் ஜனநாயகன் படத்தை தொடர்ந்து அவர் இயக்கவிருந்த தனுஷ் படமும் தள்ளிப்போகிறது. அதனால் தனுஷ் படத்தை தொடங்குவதற்கு முன் வேறொரு புதுப் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் டாப் ஹீரோவை வைத்து இயக்க பிளான் போட்ட அவர் கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இது கைகூடும் பட்சத்தில் ‘"தீரன் 2'’உருவாக வாய்ப்பிருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டுத்தான் தனுஷிடம் மீண்டும் பேசவுள்ளார். ஆனால் தனுஷ் கைவசம் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ் என அடுத்தடுத்து இயக்குநர்களை கமிட் செய்து வைத்திருப்பதால் அடுத்த ஆண்டு இறுதியில் தான் வினோத்துக்கு டேட் கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் தனுஷ் -வினோத் கூட்டணியில் உருவாகும் படம் 2028ல் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபீஷண வி.சே!

பாலிவுட்டில் "மாநகரம்' பட ரீமேக், "ஜவான்' படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி. இந்த முறை புராணக்கதை ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது ராமா யணத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ராவணனின் தம்பியான விபீ ஷணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள் ளார். கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் அனைத்து மொழி சினிமா மார்கெட்டை குறிவைத்து உரு வாகும் நிலையில்... தமிழ் சினிமாவை கவரும் வகையில் விஜய்சேதுபதியை புக் செய்துள்ளார் பட இயக்குநர் நிதேஷ் திவாரி.‘"ராமாயணா'’என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக  இப்படம் உரு வாகிறது. முதல் பாகம் இந்தாண்டு தீபா வளிக்கும் இரண்டாம் பாகம் அடுத் தாண்டு தீபாவளிக்கும் வெளியாக வுள்ளதாம்.           

Advertisment