சஞ்சய் டான்ஸ்!

நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘"சிக்மா'’ படம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பில் இருக்கிறது. இப்போது 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து, மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. கடைசியாக குத்துப்பாட்டு ஒன்றும் படமாக்கப் பட்டுள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு நாயகி கேத்ரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடியுள்ளார். இவரோடு பட நாயகன் சந்தீப் கிஷனும் நடமனாடியிருக்க கூடுதல் சிறப்பாக ஜேசன் சஞ்சயும் இதில் நடனம் போட்டுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக திரையில் தோன்றுகிறார் ஜேசன் சஞ்சய். முதல் முறையாக "வேட்டைக்காரன்' படத்தில் "நான் அடிச்சா தாங்க மாட்ட'’ பாடலில் அவரது தந்தை விஜய்யுடன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

Advertisment

பிடித்த கூட்டணி!

சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாக உருவாகியுள்ள "பராசக்தி' வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. சுதாகொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கான டப்பிங்கின்போது தனது காட்சிகளை பார்த்த சிவகார்த்திகேயன், தன்னுடைய 25வது படத்தை சிறப்பாக இயக்கி யுள்ளதாக சுதா கொங்கராவை பாராட்டியதோடு, மீண்டும் உங்கள் இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.  எனவே மீண்டும் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ‘"டான்'’ சிபி சக்ரவர்த்தி படம், வெங்கட் பிரபு படம் என அடுத்தடுத்த கமிட்மெண்ட் வைத்துள்ளதால் இந்தப்படம் 2027ஆம் ஆண்டு டேக் ஆஃப் ஆக வாய்ப்புள்ளது. இப்படத்தை ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது. 

Advertisment

கால்ஷீட் அட்ஜெஸ்ட்!

"கல்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனை வெளியேற்றிய தயாரிப்பு நிறுவனம் ஆலியாபட், சாய்பல்லவி, அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகைகளை அணுகி வந்தது. ஆனால் எதுவும் கை கூடவில்லை. அதனால் தற்போது பிரியங்கா சோப்ராவை அணுகி வருகிறது. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹா லிவுட்டில் இருந்து ராஜ மௌலியின் ‘"வாரணாசி'’ படம் மூலம் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதால் பட ஹைப்புக்கு இவர் பொருத்த மாக இருப்பார் என தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது. ஆனால் பிரியங்கா சோப்ரா ‘வாரணாசி’ படத்திற்கே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் வேற எந்த படத்திற்கும் கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தான் கேட்ட சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் தர சம்மதித்துள்ளதால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் பண்ணி கொடுக்க முடிவு செய்துள்ளார். 

tt1


டபுள் சந்தோஷம்!

தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழில் நடித்த லிங்கு சாமியின் ‘"தீ வாரியர்'’ வெங்கட் பிரபுவின் ‘"கஸ் டடி'’ ஆகிய படங் கள் தோல்வியை சந்தித்தது. இப் படங்கள் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் எடுக் கப்பட்டதாலும், நாயகர்கள் தெலுங்கு நாயகர்களாக இருந்ததாலும் தெலுங்கு பட மாகவே பார்க்கப் பட்டது. இதை யடுத்து அவர் நேரடியாக கமிட் டான முதல் படமான ரவிமோகனின் "சீனி'’படம், நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. ஆனால் அதற்கடுத்து அவர் கமிட்டான ‘"வா வாத்தி யார்'’ மற்றும் ‘"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'’ படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதில் "வா வாத்தியார்' படம் வரும் 12ஆம் தேதியும் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வரும் 18ஆம் தேதி யும் வெளியாகவுள்ளது. ஒரே மாதத்தில் தனது நேரடி தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளி யாகவுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் க்ரித்தி ஷெட்டி. அதேபோல் சீனி படமும் நல்ல படியாக வெளியாகும் என நம் பிக்கை தெரிவித்துள்ள அவர், படங்கள் வெளியானதும் தனக்கு வாய்ப்புகள் குவியும் எனவும் எதிர்பார்க்கிறாராம்.

Advertisment

-கவிதாசன் ஜெ.