Advertisment

டூரிங் டாக்கீஸ்! 10.01.26

tt

ஜாம்பி ஆக்ஷன்!

"லோகா'’ படத்தின் வெற்றியால் தென்னிந்திய திரையுலகி-ருந்து பாலிவுட்டுக்கு பறக்கிறார் கல்யாணி பிரயதர்ஷன். அங்கு ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகும் ‘பிரலே’(ல்ழ்ஹப்ஹஹ்) படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட்டில் பெரிதாக எடுக்கப்படாத ஜாம்பி ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் மகன் ஜெய்மேத்தா இயக்குகிறார். புது முயற்சியில் வெற்றியாக்க வேண்டும் என்ற முனைப்பில் பெரிய பட்ஜெட்டில் அதிக விஎஃபெக்ஸ் பணிகளுடன் படத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். அதனால்தான்  சூ

ஜாம்பி ஆக்ஷன்!

"லோகா'’ படத்தின் வெற்றியால் தென்னிந்திய திரையுலகி-ருந்து பாலிவுட்டுக்கு பறக்கிறார் கல்யாணி பிரயதர்ஷன். அங்கு ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகும் ‘பிரலே’(ல்ழ்ஹப்ஹஹ்) படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட்டில் பெரிதாக எடுக்கப்படாத ஜாம்பி ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் மகன் ஜெய்மேத்தா இயக்குகிறார். புது முயற்சியில் வெற்றியாக்க வேண்டும் என்ற முனைப்பில் பெரிய பட்ஜெட்டில் அதிக விஎஃபெக்ஸ் பணிகளுடன் படத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். அதனால்தான்  சூப்பர் பெண் ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து வெற்றியை ருசித்த கல்யாணியை இப்படத்திற்கு தேர்வு செய்துள்ளனராம். 

Advertisment

தீவிர யோசனை!

"பார்க்கிங்'’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இரண்டாவது படமாக சிம்புவை வைத்து இயக்கவிருந்தார். அது நடக்காமல் போக பின்பு விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதுவும் கைகூடாமல் போக ரஜினியிடம் சென்றார். இது கிட்டத்தட்ட இறுதிகட்டம் வரை சென்று கடைசி நேரத்தில் உறுதியாகவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன், முயற்சியை கைவிடாமல் தற்போது சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதைக்கு அவர் க்ரீன் சிக்னல் கொடுக்க மகிழிச்சியில்வுள் ளாராம். இந்தக் கதை ஏற்கனவே சிம்புவை வைத்து அவர் இயக்க வேண்டிய கதை எனி னும், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டுதான் கால்ஷீட் கிடைக்கும் எனவே அதுவரை வெயிட்பண்ண முடியுமா எனக்  கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். 

Advertisment

tt1

சல்மான் மகிழ்ச்சி!

சூர்யா, தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 45 வயதுடைய ஒரு ஆணுக்கும் 20 வயதுடைய பெண்ணுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களோடு சர்ப்ரைஸாக துல்கர் சல்மானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். "பராசக்தி' படத்தில் அதர்வா நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார் துல்கர். சில காரணங்களால் அது நடக்காமல் போக...  தற்போது சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியி-ருக்கிறாராம்.

நயன்தாராவுக்கு நோ!

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருந்தார் நயன்தாரா. இதற்காக ரூ.11 கோடி சம்பளம் கேட்டிருந்தாராம். ரூ.170 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவிருந்தது. ஆனால் தற்போது ஓ.டி.டி.யின் மார்க்கெட் காரணமாக படத்தை குறைவான பட்ஜெட்டில், பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாஸ் மசாலா கமர்ஷியல் பட மாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள் ளது. இதனால் நடிகர்களின் சம்பளத்தை யும் குறைக்குமாறு கேட்டுள்ளது. இதற்கு நயன்தாரா உடன்படாததால் அவரை வெளியேற்றியுள்ளதாகவும், அதனால் அவருக்கு பதில் குறைவான சம்பளத்தில் அவருக்கு இணையான இமேஜ் உள்ள வேறொரு நடிகையை  தேடி வருவதாக வும் தெரிவித்துள்ளது படக்குழு. இந்த லிஸ்டில் அனுஷ்கா ஷெட்டி, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கிறார்களாம்.

-கவிதாசன் ஜெ.

nkn100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe