டபுள் ட்ரீட்!
சிம்பு -வெற்றிமாறன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த மாதத்திற்கு படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. படம் வட சென்னை பட பேக்ட்ராபில் உருவாகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. லேட்டஸ்ட் தகவலின்படி படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதற்காக தனது உடல் அமைப்பை மாற்றவும் செய்திருக்கிறாராம். இதையடுத்து இப்படத்தில் ஏற்கனவே வட சென்னை பட கேரக்டர்கள் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோரோடு இயக்குநர் நெல்சனும் நடிப்பது தெரியவந்துள்ள நிலையில் புதிதாக ‘"குட் நைட்'’ மணிகண்டனும் இணைந்துள்ளாராம்.
உள்ளே... வெளியே!
அஜித்தும் ஆதிக்ரவிச்சந்திரனும் இரண்டாவது முறையாக இணையும் படம் தயாரிப்பாளர் சரியாக அமையாத சூழலில் இருக்கிறது. முதலில் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து பின்பு சில காரணங்களால் விலகிவிட்டது. இதையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் எதுவும் கன்ஃபார்ம் ஆகவில்லை. இதனால் தனது மாமனார்(பிரபு) வீட்டு தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்ஷனை வைத்து எடுக்க முயற்சிகள் எடுத்தார். அதுவும் இறுதியில் தோல்வியடைந்தது. இதையடுத்து படத்தை தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளே வந்தது. இவர் அஜித்தின் சமீபத்திய படங்களை தமிழகத்தில் வினியோகஸ்தம் செய்தவர். இப்போது அவரும் வெளியேறிவிட்டாராம். இதனால் தயாரிப்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அஜித் சம்பள விஷயத்தில் சில ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன் களை போட்டுள்ளதுதான் என பரவலாக பேசப்படுகிறது.
நம்பிக்கை நாயகி!
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் இரண்டு படங்களும் வெளியாகியுள்ளது. தமிழில் "ஸ்டார்' படம் மட்டும் தான் வெளியானது. இரண்டாவதாக நடித்த ‘"இதயம் முரளி'’ படம் இன்னும் வெளியாகவில்லை. படத்தின் தயா ரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியதால் படப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன் தற்போது அங்கு இரண்டாவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். முன்னணி நடிகரான நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘"சர்வம் மாயா'’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் இந்தாண்டு கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. குறுகிய காலத்தில் டாப் நடிகரோடு ஜோடி போட்டுவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன்.
பெரிய அறிவிப்பு!
சமந்தா தனது உடல்நல பிரச்சனை காரணமாக சமீப காலங்களில் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தாலும் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இப்போது இந்தியில் ‘ரக்த் பிரம்மாந்த்’ என்ற வெப் தொடரையும் தெலுங்கில் ‘"பங்காரம்' என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் தயாரிப்பில் முதல் படமான ‘"சுபம்'’ படத்தையும் கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து ஆக்டிவ்வாக இயங்கிவரும் சமந்தா, உடல்நலப் பிரச்சனையி-ருந்து இன்னும் தான் முழுமையாக மீண்டு வரவில்லை என கூறியுள்ளார். “நான் முன்பை விட ஆரோக்கியமாக இருக்கிறேன், இருப்பினும் நிறைய விஷயங்கள் நான் முன்பு பார்த்தது போல் இல்லை. நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது. அதற்கேற்றவாறு நானும் என்னை தயார்படுத்தி வருகிறேன். எனக்கான நேரம் எப்போது வரும் என எனக்குத் தெரியும். பெரிய அறிவிப்போடு விரைவில் வருவேன். அதற்கான பணியில்தான் இப்போது இருக்கிறேன்'' என்கிறார்.
-கவிதாசன் ஜெ.