Advertisment

டூரிங் டாக்கீஸ்! 08.11.25

tt


முதல் முறை!

தனுஷ் அடுத்து "அமரன்' பட டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தனுஷின் 55ஆவது படமாக கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.  கடந்த ஆண்டே பட பூஜை போடப்பட்டும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல்முறையாக தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்  தனுஷ் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார். இப்படமும் டைரக்டரின் முந்தைய படம் போலவே உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். அதாவது சமூகத்தில் முக்கிய பங்கை ஆற்றிய மனிதர்களை பற்றிப் பேசுகிறதாம். இப்போதே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரி


முதல் முறை!

தனுஷ் அடுத்து "அமரன்' பட டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தனுஷின் 55ஆவது படமாக கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.  கடந்த ஆண்டே பட பூஜை போடப்பட்டும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல்முறையாக தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்  தனுஷ் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார். இப்படமும் டைரக்டரின் முந்தைய படம் போலவே உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். அதாவது சமூகத்தில் முக்கிய பங்கை ஆற்றிய மனிதர்களை பற்றிப் பேசுகிறதாம். இப்போதே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது! 

Advertisment

tt1

மிகக் கடினம்!

இயக்குநர் லிங்குசாமி கடந்த மூன்று வருடங்களாகப் படம் எதுவும் இயக்கவில்லை. "பையா 2', மகாபாரதத்தை மையமாகக் கொண்டு பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் என இரண்டுக்கும் ஸ்கிரிட் லெவலில் எழுதி முடித்துள்ளாராம். இதற்கிடையே சிறிய பட்ஜெட்டில் ஒரு படமெடுக்க கதையை எழுதி முடித்துள்ளார். நாயகனாக இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்தன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். நாயகியாக இப்போது மார்க்கெட்டில் இருக்கும் ருக்மிணி வசந்தை அணுகியுள்ளார். இந்த முறை எதுவும் மிஸ் ஸாகக்கூடாது என ஒவ்வொரு நகர்விலும் மிகக்கவனமாக இருக்கிறார். இப்படம் தனது கம்-பேக்கிற்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி வருகிறார் லிங்குசாமி.

Advertisment

தீபாவளிக்கு ரிலீஸ்!

அஜித் -ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படம் தள்ளிக் கொண்டே போகிறது. அதாவது இம்மாதத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதற்காக நடிகர் நடிகை தேர்வையும் தீவிரமாக கையாண்டு ஸ்ரீலீலா, ஸ்வாசிகா ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் அஜித்தின் கார் ரேஸ் காரணமாக தற்போது படப்பிடிப்பை ஜனவரிக்கு தள்ளிவைத்துள்ளனர். அதற்கு முன்பாக பட அறிவிப்பை இம்மாத இறுதியில் டைட்டிலுடன் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கும்  இதற்கு முன்பு வெளியான "குட் பேட் அக்லி'’போல் ஆங்கிலத் தலைப்புதான் வைக்கப்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.

அதிரடி முடிவு

மிஷ்கின் -விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகிவரும் "ட்ரெயின்'’ திரைப்படம் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ’"பிசாசு 2'’ என்ற படத்தில் இணைந்த நிலையில், அனைத்துப் பணிகளும் முடிந்தும் வெளியா காமல் முடங்கிக் கிடக்கிறது. இதற்கு டிஜிட்டல் ரைட்ஸ் விற்காமல் இருப்பதே காரணம் என பரவலாகச் சொல்லப்பட்ட நிலையில்...  தற்போது அந்த பாதிப்பு "ட்ரெயின்' படத்திற்கும் வந்துள்ள தாம். படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையில் தொடர் இழுபறி நீடித்து வருவதால் படத் தயா ரிப்பாளர் தாணு அதிரடி யாக ஒரு முடிவை எடுக்க யோசித்து வருகிறார். அதாவது, படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்காமல் யூ டியூபில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம்.  இதற்கு உதாரணமாக அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான "சிதாரே ஜமீன்பர்' படம் டிஜிட்டல் ரைட்ஸ் விற்காததால் நேரடியாக யூடியூபில் கட்டணம் செலுத்திப் பார்ப்பது போல் வெளியிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டு கிறார். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் "ட்ரெய்ன்' படம் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

-கவிதாசன் ஜெ.

nkn081125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe