Advertisment

டூரிங் டாக்கீஸ்! 08.03.26

tt


5 கோடி சம்பளம்!

tt1

ரசிகர்களின் விருப்ப நாயகி பட்டியலில் இப்போதைக்கு டாப் இடத்தில் இருக்கிறார் ருக்மிணி வசந்த். தமிழில் இவர் நடித்த "ஏஸ்' மற்றும் "மதராஸி' பிளாக்பஸ்டர் வெற்றியை பெறவில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான "காந் தாரா சாப்டர் 1'’ பெரும் வெற்றி பெற்று இவரது மார்க்கெட்டை உயர்த்தியது. இப்போது யஷ் நடிக்கும் "டாக்சிக்',’ ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதுப்படம் என கைவசம் வைத்துள்ளதோடு, தனது சம்பளத் தையும் தற்போது உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.2 கோடி வாங்கியவர், இப்போது 5 கோடி கேட்கிறாராம். தனது மார்க்கெட்டை மேலும் பலப் படுத்தும் வகையில் பாலிவுட்டிலும் நடிக்க முடிவெடுத்து அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறாராம் ருக்மிணி.

Advertisment

ரெட்ரோ ஸ்டைல்!

ரஜினி -கமல் இணையும் புதி


5 கோடி சம்பளம்!

tt1

ரசிகர்களின் விருப்ப நாயகி பட்டியலில் இப்போதைக்கு டாப் இடத்தில் இருக்கிறார் ருக்மிணி வசந்த். தமிழில் இவர் நடித்த "ஏஸ்' மற்றும் "மதராஸி' பிளாக்பஸ்டர் வெற்றியை பெறவில்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான "காந் தாரா சாப்டர் 1'’ பெரும் வெற்றி பெற்று இவரது மார்க்கெட்டை உயர்த்தியது. இப்போது யஷ் நடிக்கும் "டாக்சிக்',’ ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதுப்படம் என கைவசம் வைத்துள்ளதோடு, தனது சம்பளத் தையும் தற்போது உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.2 கோடி வாங்கியவர், இப்போது 5 கோடி கேட்கிறாராம். தனது மார்க்கெட்டை மேலும் பலப் படுத்தும் வகையில் பாலிவுட்டிலும் நடிக்க முடிவெடுத்து அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறாராம் ருக்மிணி.

Advertisment

ரெட்ரோ ஸ்டைல்!

ரஜினி -கமல் இணையும் புதிய படம் மாஸ் ஆக்ஷன் ஜானரில் உருவாகிறது. படப்பிடிப்பு இந்தாண்டு இரண்டாம் பாதியில் தொடங்கு கிறது. "ஜெயிலர் 2'வை  முடித்துவிட்டு, முழு முச்சில் பட பணிகளை கவனிக்கவுள்ளார் நெல்சன். ஏற்கனவே சமீபத்தில் வெளியான புரோ மோவை எய்ட்டிஸ் காலகட்டத்தில் ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கிய நெல்சன் படம் முழுவதையும் அந்த ஸ்டைலிலே ஃபிலிம் கேமராவில் படமாக்கவுள்ளார். இதற்காக ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனுடன் திட்ட மிட்டிருக்கும் அவர், நடிகர் நடிகைகள் தேர்வை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக ஒரு முக்கியமான ரோலுக்கு நடிகை பிரியங்காமோகனை அணுகியுள்ளார். இவர் ஏற்கனவே நெல்சனின் "டாக்டர்'’ படம் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் இணையவுள்ளார். சமீபத்தில் ரஜினியின் 173வது படத்திற்கும் இவரது பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ரீ-என்ட்ரி!

வெற்றிமாறன் இயக்கும் ‘"அரசன்'’ படத்தில் நடித்துவரும் சிம்பு, அதை முடித்துவிட்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க திட்ட மிட்டிருந்தார். ஆனால் "அரசன்' படப்பிடிப்பு மெதுவாக நடந்துவருவதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.  ஃபேண்டஸி பின்னணியில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகும் அஷ்வத் மாரிமுத்து படத்திற்கு "ஐ'’ என ஆரம்பிக்கும் எழுத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகியாக மிருணாள் தாக்கூர் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஒரு முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங் பட இயக்குநர்) கூட்டணியில் உருவாகவிருந்த படத்தில் சந்தானம் ரீ- எண்ட்ரி கொடுக்கவிருந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டது. தற்போது அஷ்வத் மாரிமுத்து படத்தில் அது மீண்டும் கைகூடியுள்ளது. 

மீண்டும்... மீண்டும்!

tt2

"பராசக்தி' படம் முடிந்தவுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. அதனால் உடனடியாக குறுகிய தயாரிப்பில் ‘"தாய் கிழவி'’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக் கத்தில் "சேயோன்'’படத்தில் நடிக்கவுள்ளார். அத்தோடு,  சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவும் ஓ.கே. சொல்லியுள்ளாராம். அதற்கு முன்பாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

த்ரில்லர்!

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆன்ட்ஹில் சினிமா தயாரிப் பில் வெளியாகியுள்ள படம் ‘               "ஓ பட்டர்ஃப்ளை'. உறவுகளைப் பற்றி பேசியிருக்கும் இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத் துள்ளார். இப்படம் குறித்துப் பேசிய சிபி சந்திரன், "ரிலேஷன் ஷிப் என்றாலே த்ரில்லர்தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும்போது நமக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே யிருக்கும். "மர்டர்', "மிஸ்டரி' படங்களைவிட ரிலேசன்ஷிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றிப் பேசுகிறது''’என்கிறார்.

nkn070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe