இரண்டாவதும் கான்!

"ஜவான்'’ படம் மூலம் பாலிவுட்டில் காலடி வைத்த நயன்தாரா, அதன் பிறகு எந்த படத்திலும் அங்கு கமிட்டாக வில்லை. ஷாருக்கானுடன் நடித்தும் பெரிதாக வாய்ப்பு வரவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. அது தற்போது தீர்ந்துள்ளது. அவருக்கு மீண்டும் ஒரு கான் நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அந்த கான் சல்மான்கான் என்கிறது பாலிவுட் வட்டாரம். அவர் நடிக்கும் புது படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா  சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க, தில்ராஜு தயாரிக்கவுள்ளார்.  இயக்குநராக ‘"வாரிசு'’ பட இயக்குநர் வம்சி பைடிப் பள்ளி இயக்குகிறார்.  இந்த புது கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப் பை உருவாக்கியுள்ளது. பாலிவுட்டில் தனது இரண்டாவது படமும் கான் நடிகருடன் அமைந்ததால் பெரும் மகிழ்ச்சியில் நயன்தாரா இருக்கிறார்.

Advertisment

மீண்டும் நாயகி!

ஒருகாலத்தில் நாயகியாக வலம்வந்த பிரியாமணி, தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்தி ரத்திலும், சில படங்களில் லீட் ரோலிலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் நாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் பாபிகொல்லி இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இப் படத்தில் ஏற்கனவே கிரித்தி ஷெட்டி சிரஞ் சீவி மகள் கதாபாத்தி ரத்தில் கமிட்டாக இருந் தார். இசை ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் தனக்கு  ஹீரோ யின் வாய்ப்பு  கிடைக்கும் என நம்புகிறாராம் பிரியா மணி.

Advertisment

t1

புது இயக்குநர்!

"பார்க்கிங்', "லப்பர் பந்து', "டீசல்' என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு இமேஜை உரு வாக்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண். அந்த வகையில் இப்போது ‘"தாஷமக்கான்'’ எனும் படத்தில் ராப் பாடகர் வேடத்தில் நடிக்கிறாராம். இதையடுத்து திரைக்கதை எழுத்தாளர் தமிழ்பிரபா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. இப்படம் மூலம் தமிழ் பிரபா இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் பா.ரஞ்சித் பட்டறையில் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப் பிடத்தக்கது. "சார்பட்டா பரம்பரை', "ப்ளூ ஸ்டார்', "தங்கலான்' உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் "காந்தா', "சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

பிஸி நாயகன்!

சிவகார்த்திகேயன் லைனப்பில் அடிக்கடி மாற்றங்கள் நடந்து வருகிறது. "பராசக்தி' படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அவர் ரஜினி படத்தை இயக்க சென்றுவிட்டார். இதனால் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே புஷ்கர் காயத்ரி, "குட் நைட்' இயக்குநர் விநாயக் சந்திர சேகரன், "பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் பால கிருஷ்ணன் என இன்னும் சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இன்னொரு தமிழ் இயக்குநர் இயக்கத் தில் பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அப்படத்தின் இயக்குநர் "தாய் கிழவி'’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன். இவரிடம் அண்மையில் ஒரு கதை கேட்ட சிவகார்த்திகேயன், உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கிராமத்து பின்னணியில் குறுகிய தயாரிப்பில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட் டுள்ளார்களாம். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், ஒரே சமயத்தில் இந்தப் படத்திலும் நடிக்கவுள்ளாராம். 

Advertisment

ஆண்ட்ரியா வருத்தம்!

ஆண்ட்ரியா நடிப்பில் நீண்டகாலமாக ரிலீஸுக்கு தயாராகியும் வெளியாகாமல் இருக் கும் படம் "கா.' இதில் லீட் ரோலில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் சரிவை சந்தித்து வருவதால் அவர் நடிப்பில் வெளி யான "மாஸ்க்' படத்தை பெரிதும் நம்பி யிருந்தார். அதில் புதிதாக தயாரிப் பாளர் அவதாரமும் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இத னால் வருத்தத்திலிருக்கும் அவர், தற்போது ‘"கா'’ படத் தை பெரிதும் நம்பியிருக் கிறார். தனக்கு ஒரு வெற்றி தேவைப்படுவ தால் இப்படம் அதை பூர்த்தி செய்யும் என நம்புகிறாராம் ஆண்ட்ரியா.