தனுஷ் டிக்!
நடிகர் தனுஷ், கைவசம் அரைடஜன் படங்களை வைத்துள்ளதால் அதை ஒவ் வொன்றாக டிக் செய்துவருகிறார். அதன்படி போர்த்தொழில் பட இயக்குநர் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக அமரன் பட இயக்குநர் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இப்படத்தில் சிறு மாற்றம் நடந்துள்ளது. படத்தை தயாரிக்கவிருந்த கோபுரம் பிலிம்ஸ் வெளி யேறியுள்ளது. இதற்கு காரணம் படத்தினுள் மம்முட்டி வந்துள்ளதுதான். இவருடைய சம்பளத்தை சேர்த்து மொத்தம் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட எகிறியுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் வெளியேற தற்போது படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்க முடியுமா என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த தனுஷ் நினைத்தபடி படத்தை முடிக்க தயாரிப்பை, தானே கையிலெடுக்க முடிவெடுத்தார். ஆனால் திடீரென அமரன் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் உள்ளே வந்து படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இன்னும் சுமுகமான தீர்வு எட்டவில்லை. இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க வாய்ப் புள்ளது. அதனால் படக்குழு ஏற்கனவே திட்டமிட்டிருந்த முதற்கட்ட படப்பிடிப்பை இம் மாதத்திலிருந்து தொடங்க வுள்ளனர்.
வெயிட்டிங் லிஸ்ட்!
மதராஸி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த முருகதாஸ் அடுத்து சிம்புவை வைத்து படம் எடுக்க முயற்சி செய்து வருகிறார். இவர் ஏற்கனவே மதராஸி படத்திற்கு முன்பாகவே சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். அது சுமுகமாக முடியவில்லை. அதனால் தற்போது அவருக்கேற்ப ஒரு கதையை ரெடி பண்ணி, மீண்டும் அவரிடம் கதை சொல்ல முயற்சித்து வருகிறார். ஆனால் சிம்புவுக்கு வெற்றிமாறன் படம், அஷ்வத் மாரிமுத்து படம், தேசிங் பெரியசாமி படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட் இருப்பதால் முருகதாஸ் தற்போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார். இந்த கேப்பில் வேறொரு படத்தை இயக்கலாம் என முடிவெடுத்த முருகதாஸ், தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/tt1-2025-12-06-02-58-27.jpg)
மீண்டும் நாயகி!
ஒரு பாடல் நடிகையாக பாலிவுட்டில் பிஸியாகிவிட்டார் தமன்னா. இருப்பினும் தனக்கு வரும் நாயகி கதாபாத்திரத்தையும் விட்டுக் கொடுக்காமல் நடித்து வருகிறார். அதன்படி இந்தியில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளவர், தமிழில் ஒரு படம் கூட வைத்திருக்கவில்லை. ஆனால் தற்போது அதற்கான சூழல் வந்துள்ளது. சுந்தர் சி -விஷால் கூட்டணியில் உருவாகும் படத்தில் தமன்னா நாயகியாக கமிட்டாகியுள்ளார். இவருக்கு முன்பு கயாடு லோகர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, தற்போது தமன்னா நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமன்னா, தமிழில் கடைசியாக இதே சுந்தர் சி-யின் அரண்மனை நான்காம் பாகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை ஓவர்!
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் என்ற லிஸ்டில் நடிகை லட்சுமி மேனனும் ஒருவர். அப்படி "சுந்தர பாண்டியன்' மூலம் அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் நடிப்புக்கு விடுமுறை விட்டிருந்தார். பின்பு மீண்டும் நடிக்க வந்த அவர் முதலில் கவர்ந்தது போல் ரசிகர்களை கவரவில்லை. மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வழக்கில் சமீபத்தில் சிக்கிய தால் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். வழக்கு முடிந்து தற்போது படங்களில் நடிக்க தொடங்கி யுள்ளார். புதிதாக விதார்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘"இஎஸ்பி'’ எனும் தலைப்பில் உருவாகும் இப்படத்தை காம ராஜ் என்பவர் இயக்குகிறார்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/tt-2025-12-06-02-58-15.jpg)