ஹைப் வேண்டாம்!

"கூலி'’படம் எதிர்பார்த்த அளவு போகாததால், அதற்கு ஓவர்ஹைப்பும் ஒரு காரணம் என ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தை சுற்றிவர... இதைக்கேட்ட நெல்சன், ‘"ஜெயிலர் 2'’ படத்திற்கான ஹைப்பை இனிமேல் எதுவும் ஏற்ற விரும்பவில்லை என முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே படத்திற்கான ஹைப் போதுமான அளவு இருப்பதால் அதுவே படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்குமென சொல்லும் அவர், சத்தமில்லா மல் ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்டுகளை கமிட் செய்து வரு கிறார். எஸ்.ஜே.சூர்யாவை கமிட் செய்து, அவருக் கான போர்ஷன்களை தற்போது படமாக்கி வருகிறார். இதை  முடித்துவிட்டு யாரும் எதிர்பாராத விதமாக பாலிவுட் நடிகை வித்யா பாலனையும் நெல்சன் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். இவருக்கான படப் பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். மொத்த படப்பிடிப்பையும் டிசம்பரில் முடிக்க திட்டமிட்டுள்ள அவர், அடுத்த ஆண்டு கோடையில் பட ரிலீஸை முடிவு செய்துள்ளார்.

Advertisment

tt1

மிஸ்ஸான வாய்ப்பு!

திருமணத்துக்குப் பிறகு சிறிய கேப் விட்டு மீண்டும் நடிக்கவந்த நஸ்ரியா, இதுவரை தமிழில் தலை காட்டவில்லை. இருப்பினும் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவிருந்த படத்தில் கமிட்டாகியிருந்தார். ஆனால் படம் டிராப்பானதால் அவரது தமிழ் ரீ-என்ட்ரி தடைப்பட்டுப் போனது. இதையடுத்து "மெட்ராஸ் மர்டர்'’என்ற வெப் தொடரில் நடித்து வருவதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் அது குறித்த சரியான அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் அவர் மீண்டும் சூர்யா படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். சூர்யா அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜித்துமாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையில், அதில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார். சூர்யாவால் மி ஸ்ஸான வாய்ப்பு தற்போது அதே சூர்யாவால் கிடைத்துள்ளது. இதன்மூலம் மீண்டும் தமிழில் பெரிய திரையில்  நஸ்ரியா தோன்றவுள்ளார்.

tt2

பச்சைக் கொடி!

Advertisment

"சைக்கோ’ படத்திற்குப் பிறகு இன்னமும் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் கூட வெளி யாகவில்லை. நடிப்பில் பிஸியாக இருந்தாலும் "பிசாசு 2'’ மற்றும் "ட்ரெயின்'’என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "பிசாசு 2' அனைத்துப் பணிகளும் முடிந்து சில காரணங்களால் வெளியாக வில்லை. "ட்ரெயின்' ரிலீஸூக்கு தயா ராகி வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தை கமிட் செய்துள்ளார் மிஷ் கின். இந்தமுறை ஹீரோயின் ஓரி யண்ட் சப்ஜெக்டை கையில் எடுத்துள் ளார். இதற்காக அவர் ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய ஆண்ட் ரியா, ஸ்ருதிஹாசன், நித்யா மேனன், பூர்ணா உள்ளிட்ட நடிகைகளை அணுக...  எதுவுமே கைகூடவில்லை. இறுதியாக கீர்த்தி சுரேஷை கமிட் செய்துள்ளார். படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் மிஷ்கினையே நடிக்க சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்  மிஸ்கின். 

அதிக எதிர்பார்ப்பு!

சூரி, தனது இமேஜை படத்துக்கு படம் உயர்த்திக்கொண்டிருப்பதால் அவரது அடுத்தடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது "மண்டாடி'’படத்தில் கடலில் படகோட்டும் வீரராக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக ‘"இன்று நேற்று நாளை', "அயலான்'’உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார், இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். இப்படமும் இயக்குநரின் முந்தைய படங்களைப் போல், டெக்னிக்கலாகவும் கதை வடிவிலும் வித்தியாசமான ஒரு கதைக் களத்தை வைத்து உருவாகிறது. இதனால் இந்த கதை தனது இமேஜை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும், தனக்கு ஒரு புது அடையாளத்தை கொடுக்கும் என்றும் சூரி நம்புகிறார். இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

-கவிதாசன் ஜெ.