இழுபறி ஓவர்!

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க கதாநாயகி தேர்வில் இழுபறி நீடித்துவந்தது. முதலில் "ஜெயிலர்' பட நடிகை மிர்னாமேனன் லிஸ்டில் இருந்தார். ஆனால் அவர் நடிக்க முடியாமல்போக, பின்பு "கூலி' பட நடிகை ரச்சிதாராம் உள்ளே வந்தார். பின்பு அவரும் சில காரணங்களால் வெளி யேற, தற்போது பாலிவுட் நடிகை வாமிகா கபி கமிட்டாகி யுள்ளார். இவர் தமிழில் செல்வ ராகவனின் மனைவி கீதாஞ் சலி இயக்கிய ‘"மாலை நேரத்து மயக்கம்'’ மூலம் அறிமுகமாகியிருந்தார். அடுத்து எஸ்.ஜே.சூர்யா வுடன் "இறவாக் காலம்' படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து ‘"மாடர்ன் லவ் சென்னை'’ வெப் சீரிஸில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய "நினைவோ ஒரு பறவை'’ போர்ஷனில் லீட் ரோலில் நடித்திருந்தார். இப் போது கைவசம் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ‘"ஜீனி'’ படத்தை வைத் துள்ளார். 

Advertisment

வெற்றி நிச்சயம்!

"தி கோட்' படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருந்த மீனாட்சி சௌத்ரி, விக்ரமுடன் ஒரு படத்தை கமிட் செய்திருந்தார். இப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்க, சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. ஏற்கனவே கோட் படத்தில் தனது கேரக்டருக்கு வரவேற்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருந்த மீனாட்சி சௌத்ரி, இப்படமும் டிராப் ஆனதால் மேலும் அப்செட் ஆனார். இந்த சூழலில் விக்ரம் படம் வேறொரு இயக்குநரான போடி ராஜ்குமார் என்கிற அறிமுக இயக்குநருடன் டேக் ஆப் ஆகி உள்ளது. இதனால் ஏற்கனவே மீனாட்சி சவுத்ரி ஒப்புக்கொண்ட அக்ரீமெண்ட் அப்படியே இருக்க, அதனடிப்படையில் இப்படத்தில் நடிக்கவுள்ளார். ட்ராப்பான படம் வேறொரு கதை மூலம் மீண்டும் தொடங்கியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மீனாட்சி சௌத்ரி. 

Advertisment

tt1

ப்ரீத்தி உற்சாகம்!

தொடக்கம் சரியாக இருந்தாலும் அடுத்தடுத்து அது தொடரவில்லையே என சற்று கலக்கத்தில் இருக்கிறார் இளம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. அதாவது "அயோத்தி' படம் மூலம் கவனம் ஈர்த்த அவர் அடுத்தடுத்து நடித்த "எலக்சன்', "கிஸ்', "பல்டி' போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறாததால் தற்போது எஸ்.ஜே. சூர்யாவுடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘"கில்லர்'’ படத்தை பெரி தும் நம்பியிருக்கிறார். அதேவேளையில், தனது முந்தைய படங்கள் சரியாக போகாததால், சறுக்கல்களைக் கண்டு துவண்டு போகாமல் உற்சாகமாக அடுத்த படத்தை கமிட் செய்துள்ளார். விஷ்ணு விஷாலின் தம்பியான ருத்ரா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். 

ரசிகர்கள் வருத்தம்!

சூர்யா -ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகும் "கருப்பு'’படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸுக்கு குறி வைக்கப்பட்டது. ஆனால் சில காரணங் களால் வெளியாகாமல் போனது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனவரி 23ஆம்      தேதி படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், அதே மாதமான ஜனவரி        யில் விஜய்யின் "ஜனநாயகன்'  படமும் சிவகார்த்திகேயனின் "பராசக்தி' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் அதன் வரவேற்பு படத்தைப் பாதிக் குமா என்ற கோணத்தில் படக்குழு யோசித்து வருகிறது. அதனால் அந்த இரண்டு படங்களின் ரிசல்ட்டை பொறுத்து ரிலீஸ் டேட் பைனல் செய்ய உள்ளார்கள். ஒருவேளை இரண்டு படத்திற்கும் எதிர்பார்த்ததை விட வரவேற்பு இருந்தால் படத்தைத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட பிளான் செய்துள்ளார்கள். தொடர்ந்து படம் தள்ளிப்போவதால் சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Advertisment

-கவிதாசன் ஜெ.