Advertisment

டூரிங் டாக்கீஸ்! 05.07.25

tt

 


நியூமராலஜி நம்பிக்கை!

தமிழில்  விஜய்யுடன் "தி கோட்'’ படத்தில் நடித்திருந்தாலும் பெரிய பட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்  மீனாட்சி சௌத்ரி. இதனால் தெலுங்கு பக்கம் போனவர், அங்கு பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருந்தாலும் உச்ச நடிகை அந்தஸ்தை பெறவேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்துவருகிறதாம். அதன் ஒரு முயற்சியாக நியூமராலஜிபடி தனது பெயரில் ஒரு எழுத்தை கூடுதலாக இணைத்துள்ளார். அதாவது, தனது பெயரில் முதல் வார்த்தையான 'Meenakshi’ என்பதில் கூடுதலாக ஒரு ஹ-வை சேர்த்து Meenaakshi’ என மாற்றியுள்ளார். இந்த மாற்றத்தால் இனி நமக்கு நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறார். இது சாத்தியமா என யாராவது கேள்வி கேட்டால், ஏற்கனவே சினிமாவுக்காக பெயர் மாற்றிய ரஜினிகாந்த் தொடங்கி நயன்தாரா வரை உச்ச அந்தஸ்தை அடைந்த பட்டியலை பதிலாக காண்பிக் கிறாராம்.
 
"5' சென்டிமெண்ட்!

Advertisment

இந்தியன் 2', "கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து ஷங்கரின் படங்கள் ப்ளாப் ஆனதால் அடுத்து யாரை இயக்குவார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கைவசம் "இந்தியன் 3'-ஐ வைத்திருந்தாலும் அதைத்தொடங்க தயாரிப்பு நிறுவனம் தயங்குகிறதாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமை சந் தித்து மனம் விட்டு நிறைய விஷயங்களை பேசியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத் தில் பேச்சு அடிபடுகிறது. மேலும் இருவரும் முதலில் இணைந்த ‘"அந்நியன்'’ படம் 2005ல் வெளியானது என்றும் அடுத்து இணைந்த ‘"ஐ'’ படம் 2015ல் வெளியானதும் என்றும் இப்போது இருவரின் சந்திப்பு பத்து ஆண்டுகள் கழித்து 2025ல் நடந்துள்ளதால் அந்த "5' சென்டிமெண்ட் மீண்டும் ஒர்க்அவுட் ஆகும் என்று வினோத ஒற்றுமையை சொல்கின்றனர்.

வாரிசு வந்தாச்சு!

விஜய்சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் "பீனிக்ஸ்'’ படம்  ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல்அரசு இயக்க, அவரது மனைவி ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை சாம் சி.எஸ்.  படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, “"2019ல் எனக்கு அனல்அரசு ஒரு கதை சொன்னார், ஆனால் அப்போது அது பண்ண முடியாமல் போனது. பிறகு "சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும்?' என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை''’என்றார்.

tt1

அஞ்சலி வருத்தம்!

Advertisment

இயக்குநர் ராமின் செல்ல நாயகியான அஞ்சலி, அவர் இயக்கிய ‘"தங்க மீன்கள்'’ படத்தை தவிர அனைத்து படங் களிலும் இடம்பெற்றிருந்தார். தற்போது ராம் இயக்கியுள்ள "பறந்து போ'’படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய அஞ்சலி, "சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். கற்றது தமிழ் ஆனந்தி கதாபாத்திரத்துக்கு பிறகு இந்த படத்தில் வரும் வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். எனக்காக இந்த கதாபாத்திரத்தை எழுதிய ராம் சாருக்கு நன்றி. ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் பறந்து போ'’ என்றார். இப்படம் ஜூலை 4 அன்று வெளியாகவுள்ளது. இதை நினைத்து சந்தோஷமாக இருக்கும் அஞ்சலிக்கு கொஞ்சம் வருத்த மும் உள்ளதாம், அதற்குக் கார ணம்... இந்தப் படத்திற்கு முன்பு ராம் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட "ஏழு  கடல் ஏழு மலை'’ படம் ரிலீஸுக்கு ரெடியாகியும் இன்னும் வெளி யாகாததே காரணமாம். 

 

 

nkn050725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe