லிப்லாக் ஓ.கே!
விஜய் தேவரகொண்டாவும் கீர்த்திசுரேஷும் ‘"ரவுடி ஜனார்தன்'’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டானார்கள். முன்னதாகவே இது கமிட்டான நிலையில் கடந்த மே மாதம் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு பின்பு ஜூனுக்கு தள்ளி இப்போதுவரை இழுபறியாக இருந்து, ஒருவழியாக விரைவில் தொடங் கப்படவுள்ளது. இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கமிட்டானதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி இருப்பது தற்போது வெளியாகியுள் ளது. அதாவது கீர்த்தி சுரேஷிற்கு முன்பாக இந்த ரோலில் நடிக்க வேண்டியது ருக்மிணி வசந்த். ஆனால் படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருப்பதால் ரெட் சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால் கீர்த்தி சுரேஷ், லிப் லாக் சீன் பிரச்சனை இல்லை என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கி
லிப்லாக் ஓ.கே!
விஜய் தேவரகொண்டாவும் கீர்த்திசுரேஷும் ‘"ரவுடி ஜனார்தன்'’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டானார்கள். முன்னதாகவே இது கமிட்டான நிலையில் கடந்த மே மாதம் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு பின்பு ஜூனுக்கு தள்ளி இப்போதுவரை இழுபறியாக இருந்து, ஒருவழியாக விரைவில் தொடங் கப்படவுள்ளது. இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கமிட்டானதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி இருப்பது தற்போது வெளியாகியுள் ளது. அதாவது கீர்த்தி சுரேஷிற்கு முன்பாக இந்த ரோலில் நடிக்க வேண்டியது ருக்மிணி வசந்த். ஆனால் படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருப்பதால் ரெட் சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால் கீர்த்தி சுரேஷ், லிப் லாக் சீன் பிரச்சனை இல்லை என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். அவரிடம் இதுவரை லிப் லாக் சீனில் நீங்கள் நடித்ததில்லையே எனக் கேட்டால், கதைக்கு தேவையென்றால் நடிப்பேன் என பதிலடி தரு கிறாராம்.
புதிய அவதாரம்!
நடிகையாக வளர்ந்துவரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது அதிரடியாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள் ளார். ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரது சகோதரி பூஜா சரத்குமாரோடு இணைந்து தயாரித்தவர், முதல் படமாக "சரஸ்வதி' என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இப் படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் இயக்கி அதில் லீட் ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதுவரை நடிகையாக நாயகி, வில்லி, குணச்சித்திரம் மற்றும் கேமியோ ரோல்களில் நடித்துள்ள தால் இயக்கத்திலும் தயாரிப்பிலும் ஒரு ரவுண்டு வலம் வருவோம் என்ற முடிவோடு இருக்கிறார்.
பவானி நம்பிக்கை!
"விடுதலை' படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த பவானிஸ்ரீ, அடுத்து "நண்பன் ஒருவன் வந்த பிறகு'’படத்தில் நடித்திருந்தார். ஆனால் அது கவனம் பெறாமல் போய்விட்டது. பின்பு வெளியான "விடுதலை 2' படத்திலும் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. கவனம் ஈர்த்தும் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகாமல் இருந்த அவர், நிதானமாக ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சசிகுமார் நடிக்கும் புது படத்தில் நடிக்கிறார். "யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்க, இவரோடு சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். அதோடு இப்படம் தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பாதை அமைத்துக் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
வெற்றி உறுதி!
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தற்போது கவனம் செலுத்திவரும் மீனாட்சி சௌத்ரி, முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகமானது பாலிவுட் படம் மூலம்தான். ‘"அப்ஸ்டார்ட்ஸ்'’ என்ற தலைப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனால் இந்தப் படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் அவர் போகவில்லை. முழுக்க முழுக்க தென்னிந்தியா பக்கமே வந்துவிட்டார். இப்போது இங்கு அவருக் கென ஒரு இமேஜ் உருவான நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் போயிருக்கிறார். அங்கு மிகவும் பிரபலமான ‘"ஃபோர்ஸ்'’ படத்தின் மூன்றாம் பாகத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பவர்ஃபுல்லான ஆக்ஷன் ரோலில் அவர் நடிக் கிறார். அதனால் தற்போது அதற்காக தீவிர பயிற்சி பெற்று வருகிறார். நாயகியாக நடிப்பதால் இப்படம் தான் அவரது பாலிவுட் அறிமுகப் படமாக பார்க்கப்படுகிறது. முதல் படத்தில் நடந்தது இந்த படத்தில் நடக்காது, அதாவது நிச்சயம் வெற்றி யைப் பெறுவேன் என்ற ஒரு குறிக்கோளோடு பணியாற்றிவருகிறார்.