அவதாரம்!
சேரன் இயக்கத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் உருவாகுவதாக 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்பு நாயகியாக கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் கமிட்டானார். ஆரம்பகட்ட வேலைகள் பரபரவென நடந்துவந்தது. பின்பு படம் கைவிடப்பட்டதாக தகவல் வந்தது. இதனை மறுத்த சேரன் கடந்த ஆண்டிடி விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம் என தெரிவித்திருந்தார். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்துவந்தது. இதைக் கவனித்த கிச்சா சுதீப், இனி சரிப்பட்டு வராது, நாமே களத்திடி இறங்கிவிடலாம் என அவரே கதை எழுதி இயக்க முடிவெடுத் துள்ளார். இதற்காக பெங்களூருவில் ஆஃபீஸ் போட்டு தனது உதவி இயக்குநர் டீமுடன் திரைக்கதை எழுதும் பணியில் இருக்கிறார். 2006ஆம் ஆண்டு சேரனின் ‘"ஆட்டோகிராஃப்'’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற பெயரில் சுதீப் கன்னடத்தில் ரீமேக் செய்து இயக்கி நடித்திருந்தார். இப்படம்தான் கிச்சா சுதீப் இயக்கிய முதல் படம். இதைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி நடித்த சுதீப், 2014-க்குப் பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt_119.jpg)
சம்யுக்தாவின் யுக்தி!
தமிழிலும் அவ்வப்போது கவனம் செலுத்திவந்த மலையாள நடிகையான சம்யுக்தா, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் பிஸியான சம்யுக்தா, தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார். ‘"ரெமோ'’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் "பென்ஸ்'’படத்தில் இப்போது இணைந்துள்ளார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுத, அவரது எல்.சி.யு. பாணியில் உருவாகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்தது. ஆனால் நாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருந்தது. காரணம் சம்யுக்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது சுமூகமாக முடியவில்லை. பின்பு அது வெற்றிகரமாக முடிய தற்போது சம்யுக்தா கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். தெலுங்கு பக்கம் போனாலும் அப்பப்போ தமிழிலும் நடித்து தனது இருப்பிடத்தை தக்கவைக்க சம்யுக்தா விரும்புகிறார்.
மீண்டும் மணிரத்னம் படம்!
சிம்பு, "தக் லைஃப்' படத்தை தொடர்ந்து, 49வது படத்தில் நடிக்க விருந்தார். படத்தின் பணிகள் இம்மாத தொடக்கத்தில் பூஜையுடன் தொடங் கியது. சிம்பு -சந்தானம் காம்போ ரீ-யுனியன். மேலும் நாயகியாக "டிராகன்' படப் புகழ் கயாடு லோஹர் இணைந்ததால் கூடுதல் கவனம் பெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருந்த சமயத்தில் படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என நினைத்த சிம்பு, மீண்டும் மணிரத் னத்துடன் கைகோர்த்து விட்டார். அவரது இயக் கத்தில் ஒரு படம் நடிப்ப தாக ஏற்கனவே ஓ.கே. சொல்லியிருந்த சிம்பு, தனது 49வது படத்திற்காக ஒதுக்கியிருந்த தேதிகளை இப் போது மணிரத்னம் படத்திற்கு ஒதுக்கிவிட்டார். சிம்புவிற்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் கமிட்டாகியுள்ளார்.
அதே கூட்டணி... வேற கம்பெனி!
பாண்டிராஜ் -விஜய் சேதுபதி கூட்டணியில் ‘"தலைவன் தலைவி'’ படம் உருவாகி வருகிறது. "ரக்கட் லவ் ஸ்டோரி' என்ற டேக் லைனுடன் உருவாகும் இப்படம், பாண்டிராஜின் வழக்கமான குடும்ப கலாட்டாவுடன் உருவாகிறது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ரிலீஸ் தேதி பிக்ஸ் செய்யும் முன்பே டிஜிட்டல் ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்றுள்ளது. இதனைக் கவனித்த லைகா நிறுவனம், விஜய் சேதுபதி -பாண்டிராஜ் இருவரையும் தங்களது நிறுவனத்துக்கு ஒரு படம்பண் ணச் சொல்லி அணுகி, கலகலப்பு ஜான ரில் பண்ணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு இருவரும் ஓ.கே. சொல்லியுள்ளனர்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/tt-t.jpg)