Advertisment

டூரிங் டாக்கீஸ்! 04.02.26

tt


இருவர் ஓ.கே!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் "அரசன்'’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் ஒரு லிஸ்ட் வைத்துள்ளார். இதில் தேசிங் பெரிய சாமி படம் எந்த நகர்வும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த படமாக அறிவிக்கப்பட்ட அஸ்வத் மாரிமுத்து படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதாவது பட நாயகியையும் இசையமைப்பாளரையும் படக்குழு இறுதி செய்திருக்கிறது. நாயகியாக மிருணாள் தாகூர், இசையமைப்பாளராக அனிருத். இந்த படத்தின் மூலம் மிருணாள் தாகூர் நேரடி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அதேபோல் அனிருத், அரசன் படத்திற்கு பிறகு


இருவர் ஓ.கே!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் "அரசன்'’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் ஒரு லிஸ்ட் வைத்துள்ளார். இதில் தேசிங் பெரிய சாமி படம் எந்த நகர்வும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த படமாக அறிவிக்கப்பட்ட அஸ்வத் மாரிமுத்து படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதாவது பட நாயகியையும் இசையமைப்பாளரையும் படக்குழு இறுதி செய்திருக்கிறது. நாயகியாக மிருணாள் தாகூர், இசையமைப்பாளராக அனிருத். இந்த படத்தின் மூலம் மிருணாள் தாகூர் நேரடி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அதேபோல் அனிருத், அரசன் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க காதல் ஃபேண்டஸி ஜானரில் உருவாகிறது.

Advertisment

கைகூடிய கனவு!

"வேள்பாரி' நாவலை திரைப் படமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ஷங்கர். நாயகர்களாக சூர்யா, ரன்வீர்சிங் கிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அது கைகூடவில்லை. பிறகு, தயாரிப்பாளர்களாக பல் வேறு முன்னணி நிறுவனங்களை அணுகினார். அவர்களும் பெரிய பட்ஜெட் என்பதால் தயக்கம் காட்டினார்கள். ஆனால் இப்போது பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான "பென்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. இதனால் பெருமூச்சுவிட்ட ஷங்கர் தற்போது  விக்ரம் மற்றும் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். படப்பிடிப்பை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிட் டுள்ளார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இப்படம் கைகூடியுள்ளதால் தனது கனவு படம் நனவாகிறது என்ற மகிழ்ச்சியிலிருக்கிறார் ஷங் கர். முன்னதாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம்தான் ரன்வீர் சிங்கை வைத்து ஷங்கர் இயக்கத் தில் "அந்நியன்' பட ரீமேக்கை தயாரிக்க முன்வந்து, பின்பு சில காரணங்களால் கைவிட்டது.

Advertisment

tt1

நிறைவேறும் ஆசை!

டோலிவுட், கோலிவுட்டை தாண்டி கடந்த ஆண்டு மலை யாளத்திலும் கால் பதித்த வளர்ந்து வரும் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன், இப்போது பாலிவுட்டுக் கும் பறக்கவுள்ளார். அங்கு ஆரியன்கான் நடிக்கும் புதுப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தனது பாலிவுட் கனவும் பலித்துள்ளதாக படு குஷியிலிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சாண்டல்வுட்டிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, அதற்கான கதை விவாதத்தையும் தற்போது நடத்திவருகிறார். இப்படி தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து பான் இந்தியா ஹீரோயினாக வலம் வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம். முழுமையாக தன் ஆசை நிறைவேறும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறாராம் ப்ரீத்தி முகுந்தன்.

பச்சைக் கொடி!

அல்லு அர்ஜனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் சூப்பர் ஹீரோ சப்ஜெக் டில் ஃபேண்டஸி கலந்த ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது. பல்வேறு மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்ப பான் இந்தியா அளவில் மார்க்கெட் உள்ள நடிகையாக பட நாயகி இருக்கவேண்டும் என படக்குழு  எதிர்பார்க்கிறது. அதற்காக பல்வேறு முன்னணி நடிகைகளையும் அணுகியுள்ளது. ஆனால் அவர் கள் வைக்கும் சில கோரிக்கை காரணமாக எதுவும் உறுதி யாகாமல் இழுபறியே நீடித்தது. அதாவது நடிகர்களுக்கு இணையான சம்பளம், 8மணி நேர வேலை உள்ளிட்ட இன்னும் சில கோரிக்கைகள் அதில் அடங்குவதாக திரை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. தற்போது, பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், படக்குழுவின் எதிர் பார்ப்புக்கு பச்சை கொடி காட்ட... இந்திய அளவில் பிரபலமாக இருப்ப தால் ஷ்ரத்தா கபூரை கமிட் செய்துள்ள தாம் படக்குழு. 

nkn040226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe