க்ரீன் சிக்னல்!

சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கினாலும் படங்களை கமிட் செய்வதில் பழைய வேகம் இல்லாமல் இருக்கிறார். இதனால் அவரை அணுக வரும் படக்குழுவினர் வேறு ஹீரோயின்களைத் தேடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் சமந்தா நடிக்கவிருந்த ஒரு புது படத்தில், சமந்தாவிற்கு பதில் பிரியா பவானி சங்கரிடம் பேச... பிரியா பவானி சங்கரும் படக்குழுவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். சமந்தா நடிக்கவிருந்த ரோலில், தான் நடிக்கவுள்ளதால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விரைவில் பெற்றுவிடலாம் என்றும் அவர் எண்ணுகிறாராம்.

Advertisment

இமேஜ் டேமேஜ்!

ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் படங் களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் "கூலி' படத்தை அடுத்து ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்கவிருந்த நிலையில்...  ரஜினிக்கு கதை பிடிக்காததால் அதி-ருந்து வெளியேறினார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து கதை கூறி, ஓ.கே.யும் வாங்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகிறது. "கூலி' படத்தால் டேமேஜ் ஆன தனது இமேஜை மீட்டெடுக்க மற்றுமொரு பெரிய ஹீரோ அவருக்கு தேவைப்படுகிறாராம். அதனால் பெரிய ஹீரோ படத்தை முடித்து ஹிட் கொடுத்துவிட்டு, அதன் பிறகு "கைதி 2' படத்தை ஆரம்பிக்கவுள்ளாராம்.

Advertisment

tt1

இணையும் ஸ்டார்கள்!

இந்திய சினிமா... மல்டி ஸ்டாரர், பான் இந்தியா என  நகர்வதால், அதை நோக்கியே பெரும்பாலானோர் பயணிக்கின்றனர். அந்த வகையில் "ஜெயிலர் 2' படத்தில் பல ஸ்டார்கள் இணைந்து வருகின்றனர். இதுவரை எஸ்.ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன்,  சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, ‘காதல் சொல்ல வந்தேன்’ நடிகை மேகனா ராஜ் ஆகியோர் இணைந்துள்ள நிலையில்... தற்போது விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்து கோவாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சிறப்புத்  தோற்றத்தில் நடித்து வருகிறாராம். ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக "பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 ஜூனில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாம் .

மிகுந்த வருத்தம்!

நடிகை ராய்லட்சுமிக்கு வட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. தமிழில் "சிண்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்திருந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.  லெஜண்ட் சரவணா நடித்த ‘"தி லெஜண்ட்’' படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.  சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான  "ஜனதா பார்'’ என்ற படம் வெளியானது. தெலுங்குப் படமான இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படமும் மக்களை சரியாகச்  சென்றடையவில்லை. இப்படத்தில் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளார்கள். முக்கியமான விஷயத்தை பேசியும் படத்திற்கு முக்கியத்துவம் கிடைக்காததால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் ராய்லட்சுமி. இதனால் மீண்டும் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் ஒரு பாடலுக்கு நடனமாட முடிவெடுத்து,  அதற்காக வாய்ப்புகளைத் தேடி அலைகிறாராம்.            

Advertisment

-கவிதாசன் ஜெ.