Advertisment

டூரிங் டாக்கீஸ்! 03.09.25

tt

அவதார மோகன்!

சமீபகாலமாக அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் ரவிமோகன், சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவை பிரமாண்டமாக நடத்திமுடித்தார். இதில் ஏற்கனவே அவர் சொல்லியிருந்த இயக்குநர் அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் ஒரு ஆல்பம் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளதாக சர்ப்ரைஸ் கொடுத்தார். இதன்மூலம் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ள அவர், தற்போது ஏற்கனவே அவர் எடுத்த வில்லன் அவதாரத்தை தொடர்கிறார். சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘"பராசக்தி'’ படத்தில் வில்லன் ரோலில் நடித்துவரும் ரவிமோகன், இப்போது லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘"பென்ஸ்'’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை "ரெமோ', "சுல்தான்' படங்களை இயக்கிய ப

அவதார மோகன்!

சமீபகாலமாக அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் ரவிமோகன், சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவை பிரமாண்டமாக நடத்திமுடித்தார். இதில் ஏற்கனவே அவர் சொல்லியிருந்த இயக்குநர் அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் ஒரு ஆல்பம் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளதாக சர்ப்ரைஸ் கொடுத்தார். இதன்மூலம் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ள அவர், தற்போது ஏற்கனவே அவர் எடுத்த வில்லன் அவதாரத்தை தொடர்கிறார். சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘"பராசக்தி'’ படத்தில் வில்லன் ரோலில் நடித்துவரும் ரவிமோகன், இப்போது லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘"பென்ஸ்'’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை "ரெமோ', "சுல்தான்' படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ஏற்கனவே நிவின்பாலி வில்லனாக நடித்து வருகிறார். 

Advertisment

ஹீரோயின் ஓ.கே!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் நிலை யில்... அப்படத்திற்கான பணி களில் தற்போது இறங்கி யுள்ளார். படத்திற்காக ஏற்கனவே தற்காப்புக் கலை கற்று வந்த லோகேஷ், இப்போது நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வரு கிறது. இதில் லோகேஷுக்கு ஜோடியாக பல ஹீரோயின்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது கேரள நடிகை மிர்னா மேனன் கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் "ஜெயிலர்' படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். ஏற் கனவே‘"பர்த்மார்க்'’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் வந்த சுவடே இல்லாமல்போனது. இப்போது "ஜெயிலர் 2' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம் பரில் முடியவுள்ளது. இதைமுடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment

tt1

புது கெட்டப்!

தொடர் ஏறுமுகத்தில் இருக் கும் ராஷ்மிகா மந்தனா, கைவசம் "தி கேர்ள் பிரண்ட்', ‘"மைசா', "தமா'’என வரிசையாக படங்களை வைத்துள்ளார். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக வும், அதேசமயம் கதையின் நாயகி யாகவும் நடிக்க விரும்பும் ராஷ்மிகா... தற்போது இரண்டையும் தவிர்த்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்தி ரத்தில் நடிக்க முன்வந்துள்ளார். அந்த வகையில் ராகவாலாரன்ஸ் இயக்கி நடிக்கும் "காஞ்சனா 4'’படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்தி ரத்தில் நடிக்கவுள்ளார். அதாவது படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் பேய் கதாபாத்திரமாக வருகிறார். இது சம்பந்தமான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் புதுச்சேரியில் நடக்கவுள் ளது. அங்கு ஒருமாதம் வரை கேப் விடாமல் படப்பிடிப்பு தொடர்கிறது. இந்த படத்தில் புதுவிதமான தோற்றத் தில் ராஷ்மிகாவை பார்க்கலாம் என திரை வட்டாரம் சொல்கிறது. படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வெற்றிப் பாதை!

உடல் பருமனால் பட வாய்ப்பை இழந்துவந்த அனுஷ்கா, அவ்வப்போது சில படங்கள் நடித்து வந்தாலும் அவை பெரிதாக அவ ருக்கு கை கொடுக்கவில் லை. பின்பு பழைய படி உடல் எடை யை குறைத்து 2023ஆம் ஆண்டு வெளியான "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுவும் அவருக்கு தொடர் வாய்ப்பை பெற்றுத்தர வில்லை. இதனால் யோசித்த அனுஷ்கா தன்னுடைய முந்தைய கால வெற்றிக்கு லீட் ரோலில் ஆக்ஷனில் மிரட்டிய படங்கள் கை கொடுத்ததால், அதே மாதிரியான கதையைத் தேடினார். அப்படி அவருக்கு அமைந்த "காதி'’படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி யுள்ளது. வரும் 5ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள இப்படத்தை அனுஷ்கா மலைபோல் நம்பியிருக்கிறார்.  மேலும் இப்படத்தில் இதுவரை நடித்திராத ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாகச் சொல்லும் அவர், லீட் ரோல் ஆக்ஷன் சென்ட்டிமெண்ட் இந்தப் படம் மூலம் ஒர்க்-அவுட்டாகி தன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பிக்கையில் இருக்கிறார்.

-கவிதாசன் ஜெ.

nkn030925
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe