டீலக்ஸ் கூட்டணி!

"ஆரண்ய காண்டம்', "சூப்பர் டீலக்ஸ்' படங்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இந்த இரண்டு படங்களுக்கு இடையிலே 8 வருட கேப் எடுத்துக்கொண்ட அவர், இடையில் ‘"மாடர்ன் லவ் சென்னை'’என்ற வெப் தொடரில் ‘"நினைவோ ஒரு பறவை'’ என்ற பகுதியை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து ‘"குட் நைட்'’ மணிகண்டனை வைத்து ஒரு படம் இயக்க முயற்சி செய்துவந்தார். ஆனால் அது டேக் ஆஃப் ஆகவில்லை. இப்போது மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதமும் பெற்றுள்ளார். படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது. மீண்டும் "சூப்பர் டீலக்ஸ்' கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. "சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய்சேதுபதிக்கு முதல் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

Advertisment

டபுள் டிஜிட்!

"நேஷனல் க்ரஷ்'  ராஷ்மிகா மந்தனா, இந்த ஆண்டு ‘"ஜாவா', "சிக்கந்தர்', ‘"குபேரா', "‘தம்மா'’, ‘"தி கேர்ள் ஃப்ரண்ட்'’ என ஐந்து படங்களில் நடித்துள்ளார். இதில் "தி கேர்ள் ஃப்ரண்ட்'’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற, இதுவரை சிங்கிள் டிஜிட்டில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர், தற்போது டபுள் டிஜிட்டில் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் கொடுக்க தயாராகயிருக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ராஷ்மிகா தனக்கான மார்க்கெட் வேல்யூவை  வைத்துள்ளதே அதற்குக் காரணமாம். இவர் கைவசம் தற்போது ஹிந்தியில் ‘"காக்டெய்ல் 2', தெலுங்கில் "மைசா'’போன்ற படங்களை வைத்துள்ளார். 

Advertisment

tt1

கூட்டணி உறுதி!

"விக்ரம்' படம் முடிந்த பிறகு நிறைய இயக்குநர்களை கமிட் செய்து வைத்திருந்தார் கமல்ஹாசன். அந்த லிஸ்டில் மகேஷ் நாராயணன், அ.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் என பிரபல இயக்குநர்கள் அடங்குவார்கள். இந்த இயக்குநர்கள் கமலுக்கான கதையை தொடர்ந்து மெருகேற்றி வந்தனர். இந்த சூழலில் கமல் -வெற்றிமாறன் கூட்டணியில் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டுமென ஒரு முன்னணி தயாரிப்பாளர் முயற்சி செய்து அதற்காக கமலையும் வெற்றிமாறனையும் சந்திக்க வைத்துள்ளார். இந்த சந்திப்பில் இருவரும் கதை குறித்து விவாதித்துள்ளனர். படத்தின் பணிகள் 2027ஆம் ஆண்டு படம் தொடங்கப்பட்டு 2028ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ‘"அரசன்'’ படத்தை இயக்கிவருகிறார். அதேபோல் கமல்ஹாசன் அன்பறிவ் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

கூடுதல் சம்பளம்?

"பராசக்தி'’ படத்திற்குப் பிறகு "டான்'’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்   தில் நடிக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதன் முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இருவரும் அமெரிக்கா சென்று வி.எஃப்.எக்ஸ். பணிகளை கவனித்து திரும்பியிருந்தனர். ஏற்கனவே நாயகியாக நடிக்க கல்யாணி பிரிய தர்ஷன் மற்றும் கயாடு லோஹரிடம் பேச்சு வார்த்தை நடந்தது. தொடர்ந்து ஒரு முக்கிய மான ரோலுக்கு இசை யமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆன்டனியை தற் போது படக்குழுவினர் அணுகி யுள்ளனர். அவரும் சம்மதம் சொல்லி கொஞ்சம் கூடுதலாக சம்பளம் கேட்டாராம். ஆனால் விஜய் ஆன்டனி கேட்ட சம்பளத் துக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நோ சொல்லிவிட்டதாம். இதனால் வேறொரு பிரபல ஹீரோவை படக் குழுவினர் அணுகிவருகிறார்களாம்!

Advertisment

 -கவிதாசன் ஜெ.