குவியும் வாய்ப்புகள்!
தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்திருக்கிறார் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். ஆனால் அவர் அறிமுகமான ‘"ஏஸ்'’ படம் வந்த சுவடே தெரியவில்லை. இருப் பினும் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இப்போதைக்கு சிவகார்த்தி கேயன் நடிக்கும் ‘"மதராஸி'’ படத்தில் நடித்துவரும் அவர், அடுத்ததாக மணிரத்னம் இயக் கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இப் போது விக்ரம் படத்தில் நாயகி யாக நடிக்க ஒப்பந்தமாகியுள் ளார். "96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத
குவியும் வாய்ப்புகள்!
தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்திருக்கிறார் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். ஆனால் அவர் அறிமுகமான ‘"ஏஸ்'’ படம் வந்த சுவடே தெரியவில்லை. இருப் பினும் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இப்போதைக்கு சிவகார்த்தி கேயன் நடிக்கும் ‘"மதராஸி'’ படத்தில் நடித்துவரும் அவர், அடுத்ததாக மணிரத்னம் இயக் கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இப் போது விக்ரம் படத்தில் நாயகி யாக நடிக்க ஒப்பந்தமாகியுள் ளார். "96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தில்தான் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மும்முரம்!
அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ மீண்டும் இணையவுள்ள படம் அஜித்தின் 64வது படமாக உருவாகும் நிலையில், தயாரிப்பாளர் யாரென்று இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடித்தது. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ரோமி யோ பிக்சர்ஸ் பேனரில் ராகுல் தயாரிக்கிறார். இதனால் ஆரம்ப கட்ட வேலைகளை வேகப் படுத்திய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் நடிகைகள் தேர்வில் மும் முரமாக இருக்கிறார். ஏற்கனவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சீனியர் நடிகர் மோகன்லால், நாயகி கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார். எதுவும் இன்னும் சுமூகமாக முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தற் போது மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற் காக ‘"லப்பர் பந்து'’ புகழ் ஸ்வாசிகாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
அடுத்தடுத்த கட்டம்!
மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன், சமீபத்தில் தனது வருங்கால கணவரை அறிவித்தார். ‘பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளர் கௌதமை கரம் பிடிக்கவுள்ளார். இதுவரை நாயகியாக மட்டுமே நடித்துவந்த அவர், இப்போது லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு சென்றுள்ளார். எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள ‘"றெக்கை முளைத்தேன்'’ படத்தில் போலீஸ் அதிகாரி யாக மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். இவருக்கு இப்படத்தில் மாஸ் ஹீரோக்களுக்கு இருக்கும் பில்டப் ஷாட்டுகள் இருக்கிறது. மேலும் சில ஆக்ஷன் காட்சிகளும் இருக்கிறதாம். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
அப்பா -மகன்!
தெலுங்கில் நானி பேனரில் ராம்ஜகதீஷ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘"கோர்ட்.'’பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள் ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம், போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் முறை யையும் அச்சட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து எடுக் கப்பட்டிருந்தது. தமிழ் ரீமேக்கின் உரிமையை நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன் பெற் றுள்ளாராம். படத் தில் பிரியதர்ஷி கதா பாத்திரத்தில் பிரசாந் தும், ஹர்ஷ் ரோஷன் கதாபாத்திரத்தில் தயா ரிப்பாளர் கதிரேசனின் மகன் கிரித்திக்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத் தில் தேவயானி மகள் பிரி யங்காவும் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. மேலும், படத்தில் வரும் சாய் குமார் கதாபாத்திரத்தில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே நடித்து படத்தையும் இயக்கவுள்ளார்.