கீர்த்திக்கு பாராட்டு!
தெலுங்கில் வெளிவந்த "உப்பென்னா' படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமான கீர்த்தி ஷெட்டி, தமிழில் "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி', "வா வாத்தியார்', "ஜீனி' என தொடர்ந்து நடித்துவருகிறார். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர், ""கோவையின் கலாச்சாரமும், பாரம்பரியமும், இங்குள்ள மக்கள் பேசும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. நான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறேன், அதற்கு தமிழ் மக்கள் ஆதரவு தருவீர் கள் என நம்புகிறேன்' எனப் பேச... அவரது பேச்சு வைர லாகி... ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தயாரிப்பாளராகும் டைரக்டர்!
"ஜனநாயகன்'’ பட பணிகளில் வினோத் பிஸியாக இருந்தாலும் தயாரிப்பு நிறு வனம் தொடங்கும் ஐடியாவை சில வருடங் களுக்கு முன்னதாகவே பிளான் செய்து, "ஜனநாயகன்' படத்திற்கு எதிர்பர்ப்புகள் இருப்பதால் விரைவில் அறிவிப்புடன் அவர் தயாரிக்கும் முதல் பட அப்டேட்டையும் தெரிவிக்கவுள்ளார். முதல் படத்தை ‘"குற்றம் கடிதல்', "மகளிர் மட்டும்'’ மற்றும் "சுழல்'’ வெப் தொடர் போன்றவற்றை இயக்கிய பிரம்மா இயக்கவுள்ளார். சின்ன பட்ஜெட்டில் படம் உருவாகிறது.
ஆக்ஷன் கார்த்தி
நானி நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளி யான "ஹிட்'’தெலுங்கு படத்தின் மூன்றாம் பாகமான "ஹிட் 3'’படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித் திருந்தார். விரைவில் அடுத்த பாகமான ‘"ஹிட் 4'’ படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்தி படத்தில் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அடுத்து ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி கமிட்டாகியுள்ளார். விரைவில் காரைக்காலில் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதில் ஆக்ஷன் சம்பந்தப் பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இந்த ஷெட்யூலில் நானி கலந்துகொள்ளவில்லை என சொல்கிறார்கள்.
புது ஒப்பந்தம்!
கதையின் நாயகனாக தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் சூரி, இப்போது ‘"மண்டாடி'’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கைவசம் வைத்துள்ளார் சூரி. இப்படம் அனைத்து பணிகளும் நிறைவடைந்தும் சில காரணங்களால் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்நிலையில் சூரி, புதிதாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். படத்தை மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கவுள்ளார். இவர் ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஈ.மா.யூ’, ‘ஜல்லிக்கட்டு’ போன்ற படங்களை இயக்கி அங்கு முக்கிய இயக்குநராக இருக்கிறார். சமீபத்தில் மோகன்லாலை வைத்து ‘"மலைக்கோட்டை வாலிபன்'’ படத்தை இயக்கியிருந்தார்.
கனவு நனவானது!
தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். 'MRIZANA -A Caged Bird' என்னும் தலைப்பில், புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை இலங்கையைச் சேர்ந்த பிரபல புரொடக்ஷன் மேனேஜர் மற்றும் இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கி யுள்ளார். உண்மைச் சம்ப வத்தின் பின்னணியில் உருவாகியுள்ளதாக இப்படம் குறித்து வரலட்சுமி பேசுகையில், ""அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன் ஸுடன் இணைந்து, அவருடன் ஹாலி வுட்டில் அறிமுக மாவது எனது கனவு நனவான தருணம். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக் கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத் தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எனக்கு பெருமை. சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்ப வான்களுடன் பணியாற்று வது மிகுந்த மகிழ்ச்சி'' என்றார்.
-கவிதாசன் ஜெ.