இரண்டாவது வாய்ப்பு!
ரஜினி -நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் ‘"ஜெயிலர் 2'’ படத்தில் தற்போது இரண்டு புதிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பிரபல நடிகை வித்யாபாலன். இதில் மிதுன்சக்ரவர்த்தி மெயின் வில்லனாக நடிக்கிறார். அவருக்கு மகளாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்கள் சம்பந்தமான காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை முடித்துவிட்டு அடுத்து கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஷெட்யூல் நீண்டுள்ளது. ஏற்கனவே டிசம்பரில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது பிப்ரவரி வரை நீண்டுள்ளது. படம் ரிலீஸ் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்ததுபோல் ஜூனில் என்று ஃபைனல் செய்யப்பட்டுள்ளது. இப்படம் மூலம் மிதுன் ச
இரண்டாவது வாய்ப்பு!
ரஜினி -நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் ‘"ஜெயிலர் 2'’ படத்தில் தற்போது இரண்டு புதிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பிரபல நடிகை வித்யாபாலன். இதில் மிதுன்சக்ரவர்த்தி மெயின் வில்லனாக நடிக்கிறார். அவருக்கு மகளாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்கள் சம்பந்தமான காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை முடித்துவிட்டு அடுத்து கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஷெட்யூல் நீண்டுள்ளது. ஏற்கனவே டிசம்பரில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது பிப்ரவரி வரை நீண்டுள்ளது. படம் ரிலீஸ் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்ததுபோல் ஜூனில் என்று ஃபைனல் செய்யப்பட்டுள்ளது. இப்படம் மூலம் மிதுன் சக்ரவர்த்தியும் வித்யா பாலனும் தங்களது இரண்டாவது தமிழ் படத்தில் நடிக்கின்றனர். முன்னதாக மிதுன்சக்கரவர்த்தி ‘"ஈரம்'’ ஆதி நடித்த ‘"யாகாவாராயினும் நா காக்க'’ படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். அதேபோல் வித்யாபாலன், அஜித் நடித்த ‘"நேர்கொண்ட பார்வை'’ படம் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
நம்பிக்கை நாயகி!
"நம்ம வீட்டு பிள்ளை', "ஜப்பான்' போன்ற படங்களில் நாயகியாக நடித்த அனு இமானுவேல், ஒரு ரவுண்ட் வருவார் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் மட்டும் ‘"தி கேர்ள் ஃப்ரெண்ட்'’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் அனு இமானுவேல். நாயகியாக நடித்துவிட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு தனது கரியர் வந்துவிட்டதே என சற்று கலக்கத்தில் இருக்கும் அவர், இப்படத்திற்குப் பிறகு மீண்டும் நாயகி வாய்ப்பை பெறுவேன் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருக்கிறார்.
தெலுங்குக்கு குறி!
"தோழா' பட தெலுங்கு வெர்ஷன், நானி நடித்த ஹிட் 3 போன்ற படங்கள் மூலம் தெலுங்கில் தலை காண்பித்த கார்த்தி தற்போது மீண்டும் தலை காண்பிக்கவுள்ளார். சிரஞ்சீவி லிபாபி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்தியை கமிட் செய்துள்ளது படக்குழு. இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்த கார்த்தி முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஹிட் 4 படத்தில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்பு வருவதால் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த இது சரியான நேரம் என தொடர்ந்து தெலுங்கு டைரக்டர்களிடமும் கதை கேட்டுவருகிறார்.
பாலிவுட் பாய்ச்சல்!
படத்துக்கு படம் தனது இமேஜையும் மார்க்கெட்டையும் உயர்த்திவரும் சிவகார்த்திகேயன், தற்போது அடுத்த பாய்ச்சலாக பாலிவுட்டுக்கு செல்ல இருக்கிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு மேற்கொண்ட சிவகார்த்திகேயன், அவருடன் இணையும் படம் குறித்து பேசியுள்ளார். ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் சிவகார்த்தி கேயனை பாலிவுட்டில் பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
சீனியர் நாயகி!
ஒன்றரை வருடங்களுக்கு மேல் எந்த படங்களும் வெளியாகாத சூழலிலும், அடுத்தடுத்த படங்களை கமிட்செய்து வருகிறார் நயன்தாரா. குறிப்பாக மலையாளத்தில் மம்முட்டி -மோகன்லால் இணைந்து நடிக்கும் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் என சீனியர் நடிகர்களுடன் பயணித்து வரும் அவர், தற்போது மேலும் ஒரு சீனியர் நடிகருடன் நடிக்க கமிட்டாகியுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பிரபல மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். ‘"சிம்ஹா', ‘"ஜெய் சிம்ஹா'’ மற்றும் "ஸ்ரீ ராம ராஜ்ஜியம்'’ படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக பாலகிருஷ்ணா வுடன் நடிக்கவுள்ளார்.
-கவிதாசன் ஜெ.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us