குறையாத வாய்ப்பு!

கவர்ச்சியால் கவனம் ஈர்த்த யாஷிகா ஆனந்த், தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தாலும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. சந்தானம் நடித்த ‘"டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'’ படத்தில் நடித்த அவர், தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ‘"டாஸ்'’ என்ற தலைப்பில் உரு வாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் தேஜாஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சகுபாண்டியன் இயக்கும் இப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. படப் பிடிப்பை 25 நாட்களுக்குள் கோவில்பட்டி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்க திட்ட மிட்டுள்ளனர். லீட் ரோலில் நடிப்பதால் யாஷிகா ஆனந்த் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். 

Advertisment

ஓ.டி.டி. நம்பிக்கை!

செலக்டிவான படங்களில் மட்டும் நடித்துவரும் பிரியங்கா மோகன், தற்போது கவினுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி யுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே           ஒரு வெப் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடரில் இவரது கதாபாத்திரம்தான் முதன்மை யானதாம். இவரை சுற்றித்தான் ஒட்டு மொத்த கதையும் பயணிக்கிறதாம். இத்தொடரை ‘"நித்தம் ஒரு வானம்'’ பட இயக்குநர் ரா.கார்த்திக் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதால் ஒரே நேரத்தில் கவின் படத்திலும் இந்த தொடரிலும் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக ஓ.டி.டி. பக்கம், சென்றுள்ள பிரியங்கா, அடுத்து பாலிவுட் பட வாய்ப் பையும் எதிர்பார்க்கிறாராம்.

Advertisment

tt1

நிறைவேறிய கனவு!

"அர்ஜூன் ரெட்டி'’ பட நடிகை ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘"100% காதல்'’ மற்றும் ஜீவாவிற்கு ஜோடியாக "கொரில்லா'’ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தொடந்து வாய்ப்பில்லாததால், தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் சென்றவர், தற்போது தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘"இட்லி கடை'’ மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள் ளார். இதில்  தனுஷை காதலிக்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்றும், அதனால்தான் இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் பரவாயில்லை என நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார். 

அனுபவ நடிகை!

அட்லீ தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருந்தது. அதன் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால்  படத்துக்கு ஹீரோயின்தான் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனால் முதலில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அதேசமயம் ஹீரோயின் தேடுதல் வேட்டையையும் தொடர்கின்றனர். ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் நடித்த ஹீரோயினையே அணுகலாமா அல்லது புதுமுக நடிகைகளை அணுகலாமா என்ற யோசனையில் இருக்கிறதாம் படக்குழு. காரணம் ஹீரோயின் கதாபாத்திரம் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதாம். இது குறித்த அட்லீயிடம் இயக்குநர் டீம் முறையிட, "யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் கால்ஷீட் வாங்கித் தருகிறேன்' என்றும், புதுமுக ஹீரோயின் வேண்டாம் எனவும் சொல்லிவிட்டாராம். அதனால் அனுபவமுள்ள நடிகையின் பட்டியலை தற்போது படக்குழுவினர் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

Advertisment

-கவிதாசன் ஜெ.