Advertisment

டூரிங் டாக்கீஸ்! 10.08.24

ss

மமிதா குஷி!

"பிரேமலு' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷின் "ரெபல்'’ மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். அப்படம் வந்த சுவடே தெரியாததால், அப்செட்டில் இருந்தார் மமிதா பைஜு. இதனால் நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த அவர், ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதையடுத்து அதர்வாவுடன் நடிக்க ஒரு படத்திற்கு ஓ.கே. சொல்லியிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் பெரிய ஹீரோ படம் வரவில்லை என்ற வருத்தம் மமிதாவிற்கு இருக்கிறது. அதைப் போக்கும் வகையில் அவருக்கு விஜய் பட வாய்ப்பு தற்போது வந்துள்ளது. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் குஷியில் இருக்கும் மமிதா, இப்போதிலிருந்

மமிதா குஷி!

"பிரேமலு' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷின் "ரெபல்'’ மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். அப்படம் வந்த சுவடே தெரியாததால், அப்செட்டில் இருந்தார் மமிதா பைஜு. இதனால் நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த அவர், ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதையடுத்து அதர்வாவுடன் நடிக்க ஒரு படத்திற்கு ஓ.கே. சொல்லியிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் பெரிய ஹீரோ படம் வரவில்லை என்ற வருத்தம் மமிதாவிற்கு இருக்கிறது. அதைப் போக்கும் வகையில் அவருக்கு விஜய் பட வாய்ப்பு தற்போது வந்துள்ளது. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் குஷியில் இருக்கும் மமிதா, இப்போதிலிருந்தே விஜய்யுடன் நடிப்பது குறித்து நினைத்து பூரிப்படைந்து வருகிறார். மேலும் பட ரிலீஸுக்குப் பிறகு தமிழிலும் தனது மார்க்கெட் எகிறும் என நம்பிக்கையில் உள்ளார்.

Advertisment

tt

பிரபாஸ் 25

தான் நடித்த படங்கள் சமீபகாலமாக படுதோல்வி யடைந்து வருவதால், மிகுந்த மன வேதனையில் இருக்கும் பிரபாஸ், தனது 25வது படத்திற்கும் அது நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமுடன் இருக்கிறார். இதனால் கதைத் தேர்விற்கு சமமாக ஹீரோயின் தேர்விலும் ஆர்வம் காட்டுகிறார். அவரது 25வது படத்தை "அனிமல்' பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க வுள்ளதையடுத்து ‘"ஸ்பிரிட்'’ என்ற தலைப்பில் இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் ஹீரோயின்களாக மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் என மூன்று பெயர்கள் அடிபட்டது. மூன்று பேரிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இதனால் தன்னுடன் நடித்து ஹிட் கொடுத்துள்ள நடிகைகளை தேர்வு செய்யச் சொல்லி இயக்குநருக்கு பரிந்துரைத்த பிரபாஸ், முதற்கட்டமாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகிய பெயர்களைக் கொடுத்துள்ளார். இதில் த்ரிஷாவிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பிரபாஸ் -த்ரிஷா இருவரும் ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஜோம்பி நம்பிக்கை!

நாயை முதன்மை கதாபாத்திரமாக வைத்தும், ஜோம்பீஸை கதைக்களமாக வைத்தும், தமிழில் முதல் முயற்சியாக எடுத்து கவனம் பெற்றவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். கடைசியாக ஆர்யாவை வைத்து "கேப்டன்' படத்தை அவர் இயக்கிய நிலையில், படத்தின் தோல்வியால் அடுத்த படம் எடுக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் புதிய முயற்சி எதுவும் எடுக்காமல் ஏற்கனவே எடுத்த ஜோம்பி ஜானரை கையில் எடுத்துள்ளார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவியையே ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் ஹீரோயி னாக முதல் பாகத்தில் நடித்த லஷ்மி மேனன், இதில் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக வேறொரு வளர்ந்துவரும் ஹீரோயினை தேடி வருகிறார். படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு படப் பிடிப்பை தொடங்கி, அதே ஆண்டு இறுதியில் வெளி யிடத் திட்ட மிடப்பட்டுள்ளது. இப்படம் வெளி யானால் "மிருதன் 2' என்ற பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்சீரிஸ் ஆர்வம்!

இந்தியில் "ஃபார்ஸி'’ சீரிஸ் மூலம், வெப் சீரிஸில் ஆர்வம்காட்டத் தொடங்கிய விஜய் சேதுபதி, தமிழில் "கடைசி விவசாயி' மணிகண்டன் இயக் கத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருந்தார். இதன் படப்பிடிப்பு மதுரையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் சில மாதங்கள் கழித்து தொடரவில்லை. கைவிடப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சூழலில் தற்போது மீண்டும் ஒரு வெப்சீரிஸில் நடிக்க கமிட்டாகி யுள்ளார் விஜய்சேதுபதி. இதற்கு ‘"முத்து என்கிற காட்டான்'’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் "குட்நைட்' மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளார்.

கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஒரு ஜானரில் இந்த சீரிஸ் உருவாகிறது. படப்பிடிப்பும் விரைவில் தொடங்க வுள்ளது. திரைப்படங்களை பொறுத்தவரை வெற்றிமாறனின் "விடுதலை -2' படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. மேலும் "காந்தி காந்தி டாக்ஸ்' என்ற மவுனப் படத்தை கைவசம் வைத்துள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn100824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe