Advertisment

யாரால் யாருக்கு டார்ச்சர்? -சிக்கலான கிராமப் பெண் உதவியாளர் விவகாரம்!

cc

ரு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை சிக்கலா என்று மலைக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்துள்ளன.

Advertisment

17 வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர் ராஜேஸ்வரி. 2011-ல் அவர், விருதுநகர் மாவட்டம் -சாத்தூர் தாலுகா -சின்னத்தம்பியா புரத்தில் கிராம உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார். 2014-ல், இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதாக ராஜேஸ் வரி மீது சாத்தூர் தாசில்தாரிடம் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்கள் என்ற பெயரில் ஐந்து முறைக்கு மேல் இடமாற்றம் செய்யப் பட்டு வெவ்வேறு இடங்களில் ராஜேஸ்வரி பணி புரிய நேரிட்டது. 2018-ல் கிராம உதவியாளர் பதவியி லிருந்து அவர் நிரந்தரமாக விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

tt

ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கில், 2018-ல்

ரு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை சிக்கலா என்று மலைக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்துள்ளன.

Advertisment

17 வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர் ராஜேஸ்வரி. 2011-ல் அவர், விருதுநகர் மாவட்டம் -சாத்தூர் தாலுகா -சின்னத்தம்பியா புரத்தில் கிராம உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார். 2014-ல், இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதாக ராஜேஸ் வரி மீது சாத்தூர் தாசில்தாரிடம் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்கள் என்ற பெயரில் ஐந்து முறைக்கு மேல் இடமாற்றம் செய்யப் பட்டு வெவ்வேறு இடங்களில் ராஜேஸ்வரி பணி புரிய நேரிட்டது. 2018-ல் கிராம உதவியாளர் பதவியி லிருந்து அவர் நிரந்தரமாக விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

tt

ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கில், 2018-ல் உயர் நீதிமன் றம் பிறப்பித்துள்ள உத்தரவில் ‘குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸ் வரியை நிரந்தரமாகப் பணியிலிருந்து விடுவிக்க, வெம்பக் கோட்டை தாசில்தார் பிறப்பித்த உத்தரவு விசித்திரமாக உள்ளது. இது அநீதியானது, தன்னிச்சையானது மட்டுமல்ல, சேவை சட்டத்தின் விதிகளுக் கும் எதிரானது. அதனால், ராஜேஸ்வரி மீது குற்றம்சாட்டப் பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இரண்டு வார காலத்திற்குள் கிடைக் கக்கூடிய காலியிடத் தில், ராஜேஸ்வரி பணிபுரிவதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, சாத்தூர் தாலுகா -பனையடி பட்டி -அச்சங்குளத் தில் ராஜேஸ்வரியால் கிராம உதவியாளர் பணியில் சேரமுடிந்தது.

மீண்டும் பணியாற்ற உயர் நீதி மன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்தாலும், இடமாற்றங்கள் ராஜேஸ்வரியைத் துரத்தியபடியே இருந்தன. இதனைக் கண்டித்து, கடந்த 2021-ல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் அவர் ஈடுபட, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைக் குண்டுக்கட்டாக சூலக்கரை காவல்நிலை யத்துக்குக் கொண்டு சென்றதெல்லாம் நடந்தது.

"பாலியல் ரீதியாக தன்னை டார்ச்சர் செய்துவருகிறார்' என கிராம நிர்வாக அலு வலர் தாழம்பூராஜா மீது ராஜேஸ்வரி நம்மிடம் குற்றம்சாட் டிய நிலையில், அவரைத் தொடர்பு கொண்டோம்.

"அந்தம்மாவ பத்தி எல்லாருக்கும் தெரியும். என்கிட்ட முன்னாடி வொர்க் பண்ணாங்க. இப்ப இல்ல. அவங்க பாலியல் ரீதியா கொஞ்சம் தொந்தரவு பண்ணிட்டு இருந்தாங்க. ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும், என்கிட்ட பாலியல் ரீதியா அணுகினாங்க. நான் அப்படிப்பட்ட ஆளு கிடையாதுன்னு சொன்னேன். எனக்கு நிறைய தடவை போன் பண்ணாங்க. என்னைப் பத்தி விசாரிச்சு பாருங்க. நான் எந்த பெண்ணு கிட்டயும் தப்பா பேசினது கிடையாது. ஆர்.டி.ஓ.கிட்ட நான் கம்ப்ளைன்ட் கொடுத் தேன். நடவடிக்கை இல்ல. ஆபீஸ்ல யாரையும் எந்த வேலையும் பண்ண விடாம எல்லாரையும் டார்ச்சர் பண்ணு வாங்க. ஆர்.டி.ஓ., தாசில்தார்னு எல்லார் கிட்டயும் சண்டை. கலெக்டர்கிட்டயும் சண்டை போட்டிருக் காங்க. இப்ப கங்கர்செவல்பட்டிங்கிற கிராமத்துல அவங் களுக்கு வேலை. ஆனா, அவங்க அந்த கிராமத்துக்கு போறதில்ல''’என தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

வெம்பக் கோட்டை தாசில்தார் ரெங்கநாதனிடம் பேசினோம். "அந்த ஊருல அந்தம்மா இருந்தா மக்களே அடிச்சிருவாங்க. அவங்கள காப்பாத்துற துக்காக டிரான்ஸ்பர் போட்டேன். யாருகிட்டயும் வம்பி ழுக்கிறாங்க. டிரான்ஸ் பர் பண்ணுனா போகமாட்டேங் கிறாங்க. வில்லேஜ்ல வேலையும் பார்க்க மாட்டேங்கிறாங்க. ஒருநாள் என்னோட சேம்பர்ல உள்ள உட்கார்ந்து பூட்டிட்டாங்க. ஆர்.டி.ஓ. சேம்பர ஒருநாள் பூட்டிட் டாங்க. புகார் தர்றாங்க. ஆனா, விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்க. வாக்குமூலம் தரமாட் டேங்கிறாங்க. சொன்ன தையே சொல்லிட்டு இருக்காங்க. கொஞ்சம் சைக்கோ மாதிரி இருக்கு. அவங்கள ஒரு வேலையும் வாங்க முடியல. வெறும் சம்பளம்தான் கொடுக்க முடியுது''.என்று வேதனைப்பட்டார்.

ராஜேஸ்வரியோ, "நான் நேர்மையானவ. பொய் சொல்லமாட் டேன். என்னை கெட்டவள்னு விளம்பரப்படுத்தி வீதில நடக்க முடியாம பண்ணிட்டாங்க''’என்று அழ... "என்னதான் நடக்கிறது?''’ என வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டோம்.

"தலையாரி ராஜேஸ்வரி ஆரம்பத் துல நல்லாத்தான் இருந்தாங்க. அவங்கள இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது வருவாய்த்துறையில இருக்கவங்கதான். அந்தம்மா வி.ஏ.ஓ. ஒருத்தருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பின விவகாரம், வருவாய்த்துறையினர் வாட்ஸ்-அப் குரூப்ல முன்னாடி ஓடிட்டு இருந்துச்சு. வி.ஏ.ஓ.வோ, தாசில் தாரோ யாரும் லஞ்சம் வாங்கினா ராஜேஸ் வரிக்கு பிடிக்காது. அந்த இடத்துலயே கத்திக் கூப்பாடு போட்ருவாங்க. இந்தம்மாவ தங்க ளோடு வேலைக்கு வச்சிக்கிட்டா சரி வராதுன்னுதான வி.ஏ.ஓ.க்கள் நினைப் பாங்க. அதனாலதான், எல்லாரும் ஒண்ணு சேர்ந்து விரட்டுறாங்க. கவுன்சிலிங் கொடுத்தா அந்தம்மா சரியாயிரு வாங்க''”என்றார் அக்கறையுடன்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கிராம உதவியாளர் ராஜேஸ்வரி விவகாரத்தை மனித நேயத்தோடு அணுகி தீர்வு காணவேண்டும்.

nkn270822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe