டாப் அப் மோசடி! -சர்ச்சையில் மெட்ரோ ரயில் ஒப்பந்த ஊழியர்கள்!

ss

ரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிக்கெட் காண்ட்ராக்ட் எடுத்த இரு நிறுவனங்களின் ஊழியர்கள், டிக்கெட் டாப் அப் பணத்தில் கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக தகவல்கள் கசியத் தொ டங்கியிருக்கிறது. இதுகுறித்து கடந்த வருடமே புகார் வந்திருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அதைச் சரிபார்க்காமல் கோட்டை விட்டிருந்திருக்கிறார்கள்.

mm

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை சைபர் க்ரைம் போலீஸ், மெட்ரோவிலிருந்து வந்த புகாரையடுத்து ஏமாற்ற

ரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிக்கெட் காண்ட்ராக்ட் எடுத்த இரு நிறுவனங்களின் ஊழியர்கள், டிக்கெட் டாப் அப் பணத்தில் கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக தகவல்கள் கசியத் தொ டங்கியிருக்கிறது. இதுகுறித்து கடந்த வருடமே புகார் வந்திருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அதைச் சரிபார்க்காமல் கோட்டை விட்டிருந்திருக்கிறார்கள்.

mm

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை சைபர் க்ரைம் போலீஸ், மெட்ரோவிலிருந்து வந்த புகாரையடுத்து ஏமாற்று மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றவியல் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கி யுள்ளதாகத் தெரிகிறது. விசாரணையின் பின்பாக கூடுதல் விவரங்கள் தெரியவரும். இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக முறையான நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்கிறது சி.எம்.ஆர்.எல்.

சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் டிக்கெட் வழங்கும் ஒப்பந்தம் மும்பை, பெங்க ளூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு விடப்பட்டுள் ளது. இதில் மொத்தமுள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு நிறுவனத்துக்கு 20 நிலையங்களும் மற்றொரு நிறுவனத்துக்கு 21 ரயில் நிலையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தியாகராஜா கல்லூரி ரயில்வே நிலைய டிக்கெட் கணக்கை அந்த நிலையத்தின் ஆபரேட்டர் சி.எம்.ஆர்.எல் நிறு வனத்துக்கு ஒப்படைத்த நிலையில், அதை பரிசோதித்த போது சில டாப் அப் கார்டுகளின் டாப் அப் விவரங்கள் விடுபட்டிருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். இப்படியாகத்தான் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு உஷாராகியுள்ளது மெட்ரா ரயில் நிர்வாகம்.

அதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களின் டிக்கெட் விற்பனைப் பிரிவின் சி.சி.டி.வி காட்சி களைப் பரிசோதித்தபோது, டிக்கெட் கார்டுகளை டாப்அப் செய்யும்போது தேவையின்றி கணினி யை பலமுறை அணைத்து ஆன் செய்வதைக் கவனித்திருக்கின்றனர். இப்படிச் செய்வதால், அந்த நிலையத்தில் டாப் அப் செய்யும் விவரங்கள் மெட்ரோ நிர்வாகத்தின் சென்ட்ரல் கம்ப்யூட்ட ரில் பதிவாகாமல் தடுக்குமாம். இதுபோன்று பல ஒப்பந்த ஊழியர்கள் தேவையின்றி கம்ப்யூட்டரை பூட் செய்வதை, மெட்ரோ நிர்வாகம் மெல்லக் கண்காணித்து உறுதிசெய்திருக்கிறது.

தற்போதைக்கு சென்னை மெட்ரோ நிர்வாகக் கணக்கின்படி 2023 டிசம்பர் முதல் 2024 டிசம்பர் வரை ஏமாற்றப்பட்ட தொகை 60 லட்சமாம். விசாரணையின் ஆரம்பகட்ட நிலையில் மும்பை ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த 13 பேரும், பெங்களூரு ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல டூரிஸ்ட்களுக்கான 24 மணி நேர கார்டுகளிலும், சம்பந்தப்பட்டவர்கள் கார்டை 24 மணி நேரத்துக்கு முன்பே ஒப்படைக்கும்போது, அடுத்தவர்களுக்கு அதே கார்டை ஒதுக்கி மோசடி செய்துள்ளதாகவும் தகவல் கசிகிறது.

-சூர்யன்

nkn180125
இதையும் படியுங்கள்
Subscribe