தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப் பட்ட பட்டுக் கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் வருவதால் அ.தி.மு.க.வினரே இந்த சீட் வேண்டாம் என்று தான் த.மா.கா.விடம் தள்ளிவிட்டிருக்கின்றனர்.
கஜா புயலால் தாக்கப்பட்ட தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிவாரணம் இன்னும் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். தார்ப்பாயால் போர்த்தியும், தென்னை மட்டைகளைக் கூரைகளாக போட்டும் குடியிருக்கிறார்கள். தென்னந்தோப்புகளை இழந்த மாடிவீட்டு ஏழைகள் அடுத்து செய்வதறியாது திணறுகிறார்கள்.
தஞ்சை த.மா.கா. "மயிலாடுதுறையைக் கொடுங்கள்' என்று கேட்ட வாசனுக்கு தஞ்சையைத் தள்ளிவிட்டது அ.தி.மு.க. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட வாசன் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். இப்போது அவர்களுடனே வாக்குக் கேட்க வேண்டிய நிலையில் வாடுகிறார். மீத்தேன், ஹைட்ரோகார்பன், மணல்திருட்டு, வறண்ட ஆறுகள், தொழில்துறை பாதிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு பதில் சொல்
தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப் பட்ட பட்டுக் கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் வருவதால் அ.தி.மு.க.வினரே இந்த சீட் வேண்டாம் என்று தான் த.மா.கா.விடம் தள்ளிவிட்டிருக்கின்றனர்.
கஜா புயலால் தாக்கப்பட்ட தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிவாரணம் இன்னும் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். தார்ப்பாயால் போர்த்தியும், தென்னை மட்டைகளைக் கூரைகளாக போட்டும் குடியிருக்கிறார்கள். தென்னந்தோப்புகளை இழந்த மாடிவீட்டு ஏழைகள் அடுத்து செய்வதறியாது திணறுகிறார்கள்.
தஞ்சை த.மா.கா. "மயிலாடுதுறையைக் கொடுங்கள்' என்று கேட்ட வாசனுக்கு தஞ்சையைத் தள்ளிவிட்டது அ.தி.மு.க. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட வாசன் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார். இப்போது அவர்களுடனே வாக்குக் கேட்க வேண்டிய நிலையில் வாடுகிறார். மீத்தேன், ஹைட்ரோகார்பன், மணல்திருட்டு, வறண்ட ஆறுகள், தொழில்துறை பாதிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அ.தி.மு.க.வினரே பதற்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் த.மா.கா. என்ன பாடுபடப்போகிறதோ? சாமானிய மக்கள் தரைக்கடை போட்டு தஞ்சாவூர் பொம்மை விற்கவே அ.தி.மு.க.வினர் தடை செய்துவிட்டார்கள். ஆளாளுக்கு ஒரு பிரச்சினையோடு மக்கள் காத்திருக்கும் நிலையில் த.மா.கா.விடம் சீட்டை தள்ளிவிட்டு அ.தி.மு.க. தப்பித்திருக்கிறது.
இந்நிலை யில்தான் பட்டுக் கோட்டை மாஜி எம்.எல்.ஏ. என்.ஆர். ரெங்கராஜன் தம்பி என்.ஆர். நடராஜனை த.மா.கா. வேட் பாளராக வாசன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வைத்தி லிங்கம் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் வாக்குக் கேட்டு போகிற இடங்களில் மக்கள் தடுத்தால் சமாளித்துக்கொண்டு வந்துவிடவேண்டும், பிரச்சனை செய்யக்கூடாது என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு வைத்தி லிங்கம் அட்வைஸ் செய்தார். எப்படியோ தஞ்சைத் தொகுதியில் நம்ம வேட்பாளர் இல்லை என்று அ.தி.மு.க.வினர் உற்சாகமாக இருந்ததை காண முடிந்தது.
தி.மு.க.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கோஷ்டிப் பூசல்களால் தி.மு.க. தஞ்சை தொகுதியை இழக்க நேர்ந்தது. ஆனால், இந்தமுறை தஞ்சையைத் தக்க வைப்போம் என்றுதான் பழனிமாணிக்கத்துக்கே மீண்டும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். 17 ஆவது மக்களவையில் 6 ஆவது முறையாக இடம்பெறுவார் என்று தி.மு.க.வினர் உறுதியாக இருக்கிறார்கள். ஆனாலும் பழைய கோஷ்டி பூசல்கள் கொஞ்சம் கொஞ்சம் தலைதூக்கத்தான் செய்கிறது. டி.ஆர்.பாலு, மகேஷ் கிருஷ்ணசாமிக்கு சீட் வாங்கி கொடுக்கத்தான் முயன்றார். ஸ்டாலினோ, "நிறைய செலவு இருக்கு. பழனிமாணிக்கமே நிற்கட்டும். எல்லோரும் இணைந்து வேலைசெய்து அவருடைய வெற்றியை உறுதிசெய்யணும்' என்று சொல்லிவிட்டார். தி.மு.க.வின் வெற்றி அவசியம் என்பதால் இந்தமுறை தலைமைக்கு பணிந்து அனைவரும் வேலை செய்வார்கள் என்று நம்புகிறார்கள்.
இந்நிலையில்தான் திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாலை தஞ்சையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திலகர் திடலில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஸ்டாலின் உற்சாகமடைந்தார். ஆனாலும் சங்கம் ஹோட்டலில் அனைவரையும் அழைத்துப் பேசிய ஸ்டாலின், "இந்தமுறை நம்ம வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். உள்ளடி வேலை செய்தால் நல்லா இருக்காது'’என்று எச்சரித்துச் சென்றிருக்கிறார்.
அ.ம.மு.க.
அ.ம.மு.க.வில் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி முருகேசனை மக்களவை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். இவர் நத்தம் விசுவநாதனுக்கு ரொம்ப நெருக்கமானவர். தனது யுனிவர்சிட்டிக்கு அனுமதி வாங்க டெல்லிக்கு பணத்துடன் சென்று திரும்பியபோது விமான நிலையத்தில் பிடிபட்டார் முருகேசன். பழனிமாணிக்கம்தான் இதற்கு காரணம் என்ற கோபத்தில் கடந்தமுறையே பழனிமாணிக்கத் துக்கு எதிராக போட்டியிட அ.தி.மு.க.வில் சீட் கேட்டார். பழனிமாணிக்கத்திற்கு எதிராக களமிறங்குவதால் சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது அ.ம.மு.க.வில் முருகேசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை கட்டவில்லை என்று பத்திரிகைகளில் படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டவர் முருகேசன். அதுமட்டுமின்றி அனுமதியே வாங்காமல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், நர்சிங் பயிற்சி நிறுவனங்களை நடத்தி மாணவர்களை படாதபாடு படுத்தியவர். ஒவ்வொரு தேர்வு நேரத்திலும் சாலை மறியல் செய்தும் நீதிமன்றம் சென்றும் அனுமதி வாங்கித்தான் மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை தொகுதியின் எல்லா கிராமத்திலும் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பணத்தை நம்பி களத்தில் இறங்கும் இவர், 25 ஆம் தேதிக்கு பிறகே பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இந்தச் சூழலில்தான் சசிகலா கணவர் நடராஜனின் நினைவு நாள் நிகழ்ச்சி தமிழரசி மண்டபத்தில் நடந்தது. அதில் தினகரன் மற்றும் வெங்கடேசன், நடராஜன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சசிகலா உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை. மிதமான வேகத்தில் உள்ள தஞ்சைக் களத்தில் அரசியல் கட்சியினர் மெல்ல ஓடத்தொடங்கியிருக்கிறார்கள்.
-இரா.பகத்சிங்