Advertisment

டி.எம். கிருஷ்ணா விவகாரம்! உண்மை யார் பக்கம்? -போட்டுடைக்கும் தமிழகம்!

ss

தேர்தல் பரபரப்புகளுக்கு நடுவே, டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி "சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு மும்பையைச் சேர்ந்த கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரமும் பரபரப்பாகியிருக்கிறது.

Advertisment

டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது வழங்கினால், மும்பை சகோதரிகளுக்கு ஏன் வலிக்கவேண்டும்?

Advertisment

ss

இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ள டி.எம்.கிருஷ்ணா பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். அடிப்படையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரானாலும், சாதிமத வேறுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர் கிருஷ்ணா. அதிலும் இசை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் சொந்தமானதில்லை என்று சொல்லிவருவதோடு, எந்த சாதியினரும் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்ற கருத் துடையவர். பட்டியலின மக்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் சேரி, குப்பங்களிலும் போய் இசைநிகழ்ச்சிகளை நடத்திவருபவர். முக்கியமாக, பிராமண சமூகத்தில் பலரும் வெறுக்கும் பெரியார

தேர்தல் பரபரப்புகளுக்கு நடுவே, டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி "சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு மும்பையைச் சேர்ந்த கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரமும் பரபரப்பாகியிருக்கிறது.

Advertisment

டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது வழங்கினால், மும்பை சகோதரிகளுக்கு ஏன் வலிக்கவேண்டும்?

Advertisment

ss

இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ள டி.எம்.கிருஷ்ணா பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். அடிப்படையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரானாலும், சாதிமத வேறுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர் கிருஷ்ணா. அதிலும் இசை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் சொந்தமானதில்லை என்று சொல்லிவருவதோடு, எந்த சாதியினரும் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்ற கருத் துடையவர். பட்டியலின மக்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் சேரி, குப்பங்களிலும் போய் இசைநிகழ்ச்சிகளை நடத்திவருபவர். முக்கியமாக, பிராமண சமூகத்தில் பலரும் வெறுக்கும் பெரியாரின் கருத்துகளை ஆதரிப்பவர். கர்நாடக இசைக்கருவியான மிருதங்கம் பசுவின் தோலில் தயாரிக்கப்படுகிறது என தனது செபாஸ்டின் அண்ட் சன்ஸ் நூலில் விவரமாகப் பதிவுசெய்துள்ளார்.

ரஞ்சனி, காயத்ரியின் பிரதான குற்றச்சாட்டு, கர்நாடக இசை மரபுக்கு கிருஷ்ணா பெரும் தீங்கு இழைத்துவிட் டார். அதன் பாரம்பரியத்தையும் தியாகையர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற முன்னோடிகளை யும் அவமதித்துவிட்டார். கர்நாடக இசையின் ஆன்மீக அம்சத்துக்கு சேதம் விளைவித்துவிட் டார் என்பதுதான். இவ்வருடம் டிசம்பரில் டி.எம். கிருஷ்ணா தலைமையில் நடக்க விருக்கும் இசைக்கச்சேரி யை கர்நாடக இசைப் பிரபலங்கள் புறக்கணிக்க வேண்டுமெனத் தெரிவித் துள்ளனர். சந்தடிச்சாக்கில் கிருஷ்ணாவுடன் சேர்த்து, பெண் களை பெரியார் இழிவுபடுத்திய தாகவும், குறிப்பிட்ட சமூ கத்தை அழிக்க நினைத்த பாஸிஸ்டாகவும் இவர்கள் விமர் சனத்தை முன்வைக்கின்றனர்.

இதற்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் மத்தி யில் ஓரளவு ஆதரவு எழுந் துள்ளது. அதேசமயம் தமி ழகத்தில் டி.எம்.கிருஷ்ணா வுக்கு வலுவான ஆதரவு எழுந்துள்ளதோடு, ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளின் விமர்சனத்துக்கும் வலுவான பதிலடிகளும் சமூக ஊட கங்களில் கிளம்பிவருகின்றன.

இதற்கெதிராக வரிந்து கட்டும் சமூகநீதி கண் காணிப்புக்குழு தலைவரான சுப.வீ. அவர்கள், "இசை மூவராக தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளையே பிராமண சமூகத்தவர்கள் குறிப்பிடுவர். அவர்களைவிட காலத்தா லும் இசை ஞானத்தாலும் மூத்தவர்கள் தமிழிசை மூவர் களான முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை. இவர்களுக்கு சீர்காழியில் மணிமண்டபம் கட்டியவர் கலைஞர். 1917-லேயே கருணாமிர்தசாகரம் இசை நூலை இயற்றியவர் ஆபிரகாம் பண்டிதர்.

ss

1930-ல் ஈரோட்டில் நடந்த 2-வது மாநில சுய மரியாதை மாநாட்டில் முழுக்க தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்ட இசை அரங்கை நடத்தினார் பெரியார். இதற்கு எதிர்வினை தெரிவித்த செம்மங்குடி சீனிவாச ஐயர், ‘இசையில் ஜனநாயகப் போக்கைக் கொண்டுவருவது தீங்கு விளைவிக்கக்கூடியது'’ என அறிக்கைவிட்டார். அதேபோல அண்ணாமலை அரசரும், ஆர்.கே. சண்முகநாதனும் தமிழ்நாட்டில் தமிழ் இசைக் கல்லூரியை முதன்முதலாகத் தொடங்கினர். அதற்காக அவர்களுக்கு பெரியார் நன்றி தெரிவித்தார். பெரியார்மேல் அவர்கள் ஏன் இத்தனை கோபம் கொள்கிறார்கள் என்பது இப்போது தெரிந்திருக்கும்'' என சூட்சுமத்தை விளக்குகிறார்.

தமிழக காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன், "தமிழ்நாட்டில் இசையைப் பிரபலப்படுத்தியது குறிப்பிட்ட ஒரு சமூகம் என்ற பொதுநம்பிக்கை நிலவுகிறது.

தியாகையர், முத்துசாமி தீட்சிதருக்கு அப்புறம் தமிழ் இசைப்பாடல்களில் மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆபிரகாம் பண்டிதர். அவர் ஒரு கிறித்துவ நாடார். அவர் எழுதிய புத்தகமான கருணாமிர்தசாகரம் மதிப்புமிக்க இசை ஆய்வு நூலாகும்.

திருவையாறில் தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. அதனைக் கட்டியதும் மேல்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 1905-06-ல் அவரது இரு சீடர்கள் அவரது இறந்த திதியில் ஒரு சமாதியைக் கட்டி, அன்னதானம் நடத்தி, கச்சேரி நடத்திவந்தார்கள். அப்போது அங்கே கோவிலும் கிடையாது. தியாகராஜர் சிலையும் கிடை யாது.

ss

1925-ல் கர்நாடக இசை, அதிலும் குறிப் பாக தியாகராயர் கீர்த்தனைகளைப் பாடி, பணம் சம்பாதித்த பெங்களூர் நாகரத்னம்மா, அதற்குப் பிரதிபலனாக தியாகையருக்கு ஏதாவது செய்யவேண்டுமென திருவையாறில் நிலம் வாங்கி கோவில் கட்டி, சிலை வைத்தார். அந்த அம்மா கட்டின கோவிலில் அவரையே பாடக்கூடாதென வைதீகம் எதிர்த்தது. வழக்கு நடந்தது. பார்த்தார், நாகரத்னம்மா. தனியாக கச்சேரி நடத்த ஆரம்பித்தார். பிறரின் கச்சேரிகளைவிட நாகரத்னம்மாவின் கச்சேரி பிரபலமாகி பெயர்பெற்றது. பின்பு வைதீகத்தினர் இறங்கிவந்து நாகரத்னம்மாவைப் பாடவைத்தார்கள். இதுதான் வரலாறு''’என உண்மைகளைப் போட்டுடைக்கிறார்.

"இசைத்துறையைச் சார்ந்த இரண்டு பெண்களை முன்னிறுத்தி, இந்தச் சூழலில் இதைப் பொதுத்தளத்தில் விவாதிக்கச் செய்து, இதன் பின்னணியிலிருந்து இயங்குவோரையும், தந்தை பெரியார்மீது அவர்கள் அவதூறு பரப்புவதையும், அவரை இழிவுசெய்வதையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது''”என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

-மணி

nkn300324
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe