வேலூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றாவது மண்டலக் குழு தலைவரான தி.மு.க.வை சேர்ந்த புஷ்பலதா, "எங்கள் பகுதியில் தெரு விளக்கு கள் சரியாக எரியவில்லை, சிலஇடங்களில் தெரு விளக்கே இல்லை, பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடிய வில்லை'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு பதிலளித்த மேயர் சுஜாதா, "நீங்கள் ஆளுங் கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறீர்கள். சென்ற கூட்டத்தில் உங்களுடைய மண்டலக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்தீர்கள்'' எனக்கூறியதும், "நான் எது பேசினாலும் எதிராகவே பேசுவதாகக் கூறுகிறீர்கள். நான் கூட்டத்தி லிருந்து வெளியேறுகிறேன்'' எனக் கோபமாக கூறினார் புஷ்பலதா. அப்போது துணைமேயர் சுனில் குமார்,

vvvv

"ஆளுங்கட்சி உறுப்பினர் வெளி நடப்பு செய்யக் கூடாது'' எனக் கூறியதால் அமர்ந்துவிட்டார்.

பத்தாவது வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க. ரமேஷ் பேசும்போது, "என் வார்டில் அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை'' எனக் குற்றம்சாட்டியதும் தி.மு.க. கவுன்சிலர்கள் அவரருகே சென்று வாக்குவாதம் செய்தனர். தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவசரமாக மன்றக்கூட்டம் முடிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி கவுன்சிலரும், மண்டலக்குழு தலைவருமான புஷ்பலதாவை தொடர்புகொண்ட போது நமது லைனை எடுக்கவில்லை. அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் கூறுகையில், "மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு சரிசெய்ய 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்கள், இன்னமும் லைட் போடவில்லை. பாதாளசாக்கடை திட்டத்துக்காகவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக சாலைகளைத் தோண்டி பைப் புதைத்தார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்னும் 40 சதவிகிதப் பணிகள் நடக் காமல் உள்ளது. சேதமடைந்த கழிவுநீர், மழைநீர்க் கால்வாய்களைச் சரிசெய்யவும் நிதி ஒதுக்கமாட்டேன் என்கிறார். இந்த பிரச்சனைகள் அனைத்து வார்டுகளிலும் உள்ளது. மன்றக் கூட்டத்தில் பேசினால், தி.மு.க. கவுன்சிலர்கள் தடுக் கிறார்கள்'' என்றார் புலம்பலாக.

dd

ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, "ஒவ்வொரு மன்றக் கூட்டத்தின்போதும் மண்டலக்குழுத் தலைவரான புஷ்பலதா, மேயர் மீது குற்றச்சாட்டு வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு காரணம், மேயர் பதவிக்கு புஷ்பலதாவை அமைச்சர் துரைமுருகன் முன்னிறுத்தினார். வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. -மாநகர செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ. இருவரும் கூட்டு சேர்ந்து, கார்த்தியின் தீவிர ஆதரவாளரான சுஜாதாவை மேயராக்கினார்கள். காட்பாடி பகுதியிலிருந்து துரைமுருகனின் ஆதரவாளர் சுனில்குமார் துணைமேயராக்கப்பட்டார். . புஷ்பலதா மண்டலக்குழு தலைவராக்கப்பட்டார்.

தனக்கு கிடைக்கவேண்டிய மேயர் பதவியை கிடைக்கவிடாமல் செய்த கார்த்தியின் செயல்பாடுகளால் உருவான கடுப்பையே மேயர் சுஜாதா மீது ஒவ்வொரு கூட்டத்தின்போதும் புஷ்பலதா காட்டுகிறார்'' என்றனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் சுஜாதாவிடம் கேட்டபோது, "குற்றச்சாட்டு வைக்கும் அ.தி.மு.க. கவுன்சிலரின் வார்டில் 3 கோடி ரூபாய்க்கான பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. பொதுநிதி என்பது மக்களிடம் இருந்து வரும் வரி வருவாயிலிருந்து ஒதுக்குவது. அந்த நிதி, மின்கட்டணம் கட்டவே சரியாக இருக்கிறது. குடிநீர் வடிகால் வாரியம், கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு என்.ஓ.சி. தர மறுக்கிறார்கள். இப்படி பல சிக்கல்கள் உள்ளன. அதனால் பணிகள் தாமதமாகிறது. மண்டலக்குழு தலைவர் மேயர் பதவிக்கு போட்டியிட்டார், அவருக்கு கிடைக்கவில்லை எனக்கு கிடைத்ததால் அந்த கோபத்தில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். மாநக ராட்சிக்குள் 3 தொகுதிகள் வருகின்றன. அதனால் வேலூர் எம்.எல்.ஏ., அணைக்கட்டு எம்.எல்.ஏ., காட்பாடி எம்.எல்.ஏ.வான அமைச்சரிடம் தேவைகளைக் கேட்டு செய்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏற்கெனவே கவுன்சிலர்கள் சண்டை போட்டே இரண்டு கமிஷனர்கள் மாறிவிட்டார்கள். அதிகாரிகள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களை இன்னும் எப்படி விரட்டி வேலை வாங்க முடியும்'' என்றார்.

நெல்லை, கடலூர் மாநகராட்சிகளில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் நிற்பதுபோல் வேலூர் மாநகராட்சி மாறாமல் இருந்தால் சரி.

Advertisment