நாடாளுமன்றத் தேர்தலுடன் அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கான சட்ட மன்றத் இடைத்தேர்தலில் பூந்தமல்லி தனித்தொகுதியும் அடக்கமென்பதால் தங்களின் சீட்டை உறுதிசெய்ய சிபாரிசு, கனத்த பெட்டி சகிதமாக தேனீக்கள் போல சுறுசுறுப் பாகியுள்ளனர் அரசியல் பிரமுகர்கள். பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி, திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது.

தமிழகத்தின் ஈசானிய மூலையில் அமைந்துள்ள திருவள்ளூர் 12 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போடுவது மறைந்த முதல்வர் ஜெ. வழக்கம். தே.மு.தி.க.வும் அதே சென்டிமெண்டைப் பின்பற்றியது. இன்னும் சில கட்சிகளும் ரகசியமாக வந்து வேண்டிவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கும் என்கிறார்கள் பிள்ளையார் பெருமை பேசும் தொகுதிக் காரர்கள்.

ponnamalee

இத்தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமின்றி 2009 நாடாளு மன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றவர் அ.தி. மு.க.வைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால். குறைந்த கட்டணத்தில் மருத் துவம் பார்த்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர், தனது ஆரம்பகட்ட எளிமை யால் ஜெ. மனதிலும் அழுத்த மான இடம் பிடித்தார். ஆனால் இரண்டாம்முறை ஜெயித்தபிறகு தொகுதி மக்கள் இவரைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது என்கிறார் கள்.

மக்களை மட்டுமில்லை, கட்சிக்காரர்களையும் கண்டுகொள்வதில்லை என தொகுதியில் இவர் புகழ் பாடுகிறார்கள். முதல் முறை தோல்வி, அடுத்த இரண்டுமுறை வெற்றி பெற்ற இவர் நான்காவது வாய்ப்புக்காக அடிபோட்டுக்கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வாத்தி யார் சம்பத் பேசப்படுகிறார். தொகுதியில் நன்கு அறியப் பட்ட அரசு வழக்கறிஞரும் அ.தி.மு.க. மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான சௌந்தர்ராஜனுக்கு வேட் பாளர் வாய்ப்பு கிடைக்கலா மெனவும் எதிர்பார்ப்பு நிலவு கிறது.

தி.மு.க. தரப்பில் இரண்டு முறை எம்.பி. ஆன கிருஷ்ண சாமி மேலிடத்தில் வேட்பாளர் வாய்ப்புக்கு காய்நகர்த்தி வரு கிறார். இளைஞரான தமிழன் பிரசன்னா பெயர் பலமாக அடிபடுகிறது. வடக்கு மா.செ. பொன்னேரி கதிரவன் தன் பங்குக்கு காய்நகர்த்துகிறார். கடந்த 2009-ல் தோல்வியடைந்த காயத்ரிஸ்ரீதரன் இன்னொரு வாய்ப்புக்காக தீவிரம்காட்டி வருகிறார். வழக்கறிஞரான புழல் விஜயலட்சுமியும் பெரிய பாளையத்தை அடுத்த ஆரணி அன்புவாணனும் கழக வேட் பாளர் ரேஸில் உள்ளனர்.

டி.டி.வி. தினகரன் கூடாரமான அ.ம.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏழுமலை ஆயத்த நிலை யிலிருக்க, யாருக்கு எந்தத் தொகுதி என்று முடிவாகாத தால் பி.ஜே.பி.யில் மாணிக் கம் திருவள்ளூர் தொகுதி மேல் பிரியம் காட்டிவரு கின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்கும் பட்சத்தில் பூந்தமல்லி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பாரிவாக்கம் வைத்தியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் இருவரும் கச்சை கட்ட ஆயத்தமாகி வருகின்றனர். தி.மு.க. தரப்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட வழக்கறிஞர் பரந்தாமன் தலைமையின் நம்பிக்கை பெற்றவர். பாரிவாக்கம் தணிகா சலமும் ரேசில் உள்ளார். டி.டி.வி. ஆதரவாளரான கந்தன், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூவை ஜெகதீஷ், புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி பலரும் பலம்காட்ட ஆயத்த மாக உள்ளனர்.

டபுள் டக்கர் தேர்தல் களமென்பதால், கட்சிகளின் கவனிப்பு பலமாக இருக்கு மென நம்பி மக்களும் சில கணக்குகளோடு உள்ளதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.

-அரவிந்த்