"கட்சி விதிகளை மீறிச் செயல்படுறார், அவர் சொல்றதை அப்படியே கேட்கறீங்க, கட்சி விதிகளுக்கு என்ன மரியாதை?' என சீற்றத்தோடு அ.தி.மு.க. தலைமையை நோக்கி கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளனர் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒ.செ.வாக இருந்தவர் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். 6 மாதங் களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் வகித்த ஒ.செ. பதவிக்கு கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பப்பட்டனர். மா.செ. முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணியிடம் விண்ணப்பித்து காத்துக்கொண்டி ருந்தனர். கடந்த டிசம்பர் கடைசி வாரம், திருப்பத்தூர் 32-ஆவது வார்டு நகர்மன்ற கவுன்சிலரும், மாவட்ட இளைஞர் பாசறையின் முன்னாள் செயலாளருமான டி.டி.சங்கரை பரிந்துரைசெய்து, அவரை கந்திலி ஒ.செ. பதவியில் அமரச்செய்துவிட்டார் வீரமணி.
இது மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க. வினரை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. அறிவிப்பு வந்ததுமே கந்திலியில் ர
"கட்சி விதிகளை மீறிச் செயல்படுறார், அவர் சொல்றதை அப்படியே கேட்கறீங்க, கட்சி விதிகளுக்கு என்ன மரியாதை?' என சீற்றத்தோடு அ.தி.மு.க. தலைமையை நோக்கி கேள்வியெழுப்பி கடிதம் எழுதியுள்ளனர் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒ.செ.வாக இருந்தவர் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். 6 மாதங் களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் வகித்த ஒ.செ. பதவிக்கு கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பப்பட்டனர். மா.செ. முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணியிடம் விண்ணப்பித்து காத்துக்கொண்டி ருந்தனர். கடந்த டிசம்பர் கடைசி வாரம், திருப்பத்தூர் 32-ஆவது வார்டு நகர்மன்ற கவுன்சிலரும், மாவட்ட இளைஞர் பாசறையின் முன்னாள் செயலாளருமான டி.டி.சங்கரை பரிந்துரைசெய்து, அவரை கந்திலி ஒ.செ. பதவியில் அமரச்செய்துவிட்டார் வீரமணி.
இது மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க. வினரை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. அறிவிப்பு வந்ததுமே கந்திலியில் ரகசியக் கூட்டம்போட்டு வீரமணிக்கு எதிராக போராட்டம் நடத்த ஆலோசித்தனர். பின்னர் அதனைக் கைவிட்டு கந்திலி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான அ.தி.மு.க. நிர்வாகிகள், மா.செ.விடம் நியாயம் கேட்பது என முடிவுசெய்து ஜோலார்பேட்டையிலுள்ள வீரமணி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். கட்சியினர் வரும் தகவல்தெரிந்து வீட்டிலிருந்து வாணியம் பாடியிலுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார் வீரமணி.
வீட்டுக்கு முன் இறங்கிய நிர்வாகிகளிடம், அவர் வீட்டில் இல்லை கட்சி அலுவலகத்தில் உள்ளார் என்றுள்ளனர். அங்கிருந்து அப்ப டியே வாணியம்பாடி சென்றுள்ளனர். வாணியம் பாடிக்கு வருகிறார்கள் எனத் தகவல் வந்ததும், கட்சி அலுவலகத்திலிருந்து திருப்பத்தூரிலுள்ள தனது நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுவிட் டார் வீரமணி. கட்சி நிர்வாகிகள் ஹோட்டலை யும் முற்றுகையிட்டனர். சங்கரை எதனடிப் படையில் நியமிச்சீங்க எனக் கேள்வியெழுப் பினர். என் முடிவை கேள்வி கேட்கற வேலை வச்சிக்காதீங்க என அவர்களை எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பானவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி கடிதம் அனுப்பினர். அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி கந்திலி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள் மீண்டும் வீரமணியைச் சந்தித்தனர். "சங்கரை நியமிச்சாச்சு, அவருக்கு நீங்க ஒத்துழைப்பு தந்து கட்சி வேலை செய்ங்க, அவரை மாத்தறதுக்கு கொஞ்ச கால அவகாசம் தாங்க'' எனச் சொல்லியனுப்பியுள்ளார். ஆனா லும் கந்திலி அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி யிலும், முன்னாள் அமைச்சர்மீது கோபத்திலும் உள்ளனர்.
இதுகுறித்து முக்கிய நிர்வாகி கள் சிலரிடம் நாம் பேசிய போது, “"எங் கள் கட்சி மட்டுமல்ல தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒருவரை கட்சிப் பதவியில் நியமிப்பதாக இருந்தால், அவர்கள் எந்தப் பகுதியில் குடியிருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் ஒன்றிய பதவியோ, மாநகர-நகர பதவியோ வழங்குவார்கள், அதுதான் விதி. நகரத்தில் குடியிருப்பவர்களை ஒன்றியப் பொறுப்பிலும், ஒன்றியத்தில் இருப்பவர்களை நகர பொறுப்பிலும் நியமிக்கமுடியாது. கந்திலி ஒன்றியத்தில் ஒரு நிர்வாகியை நியமிக்கவேண் டும் என்றால் அந்த ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களிலிருந்துதான் ஒருவரை நியமித் திருக்க வேண்டும். ஆனால் கந்திலி ஒ.செ.வாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர், திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்தவர், நகராட்சி கவுன்சிலராக இருக்கிறார். அவரை கந்திலி ஒ.செ.வாக எப்படி ஏற்றுக்கொள்வது?
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கட்சி முக்கியஸ்தர்களாக கந்திலி ஒன்றியக்குழு முன்னாள் சேர்மன், சிட்டிங் ஒ.து.செ. முருகன், எம்.ஜி.ஆர் மன்ற ஒ.செ. லலிதா மகால் பெருமாள், ஒன்றியப் பொருளாளர் கேசவன், மறைந்த எம்.எல்.ஏ.வின் சகோதரர் தயாகரன், ஒப்பந்ததாரர் ஆறுமுகம் என 10 பேர் ஒ.செ. பதவி கேட்டனர். இவர்களில் யாராவது ஒருவருக்கு அந்தப் பதவியை தந்திருக்கலாம். அப்படி செய்யாமல் நகரத்தில் இருப்பவரைக் கொண்டுவந்து ஒ.செ.வாக்கியது, அவர் வீரமணியின் பினாமி என்பதால் மட்டுமே. அவருக்கு இந்த ஒன்றியம் குறித்து என்ன தெரியும்?''’என கேள்வியெழுப்பினார்கள்.
இதுகுறித்து கருத்தறிய மா.செ. வீரமணி யை தொடர்புகொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை. அவரது ஆதரவாளர்களோ, "கட்சிக்கு செலவு செய்ய அங்கே சரியான நபர்கள் இல்லை, அதனால் சங்கர் நியமிக்கப்பட்டார்'' என்கிறார்கள்.
கட்சியின் சீனியர்களோ, "கட்சிக்கு பொதுச்செயலாளர் நான்தான், அதிகாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது என இ.பி.எஸ். சொல்லலாம். ஆனால் அவரை டம்மியாக பொம்மைபோல் வைத்துக்கொண்டு ஆட்டி வைக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, வீரமணி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர் போன்றவர்கள். இவர்களைப் பார்த்து இ.பி.எஸ். பயப்படுகிறார். அதனால் கட்சியில் அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்கமுடிவதில்லை. அதற்கு இந்த பதவி நியமனமே சாட்சி. வீரமணியை மீறி மாவட் டத்தில் பொ.செ.வால் எதுவும் செய்யமுடியாது எனத் தெரிகிறது. இதனால்தான் இரும்புக் கோட்டையாக இருந்த கட்சி கலகலத்துப் போயுள்ளது''’என்கிறார்கள் கவலையாக.