Advertisment

96 வயதிலும் சளைக்காத போராளி! மூத்த தோழர் நல்லகண்ணு பிறந்த நாள் எழுச்சி!

nn

மிழக அரசியல் களத்தில் சலிப்பின்றி மக்கள் பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்து சமரசமின்றிப் போராடி வரும், அப்பழுக்கில்லாத தலைவர்களைத் தேடிச் சென்றால் ஓரிருவரே எஞ்சுவர். அத்தகைய தொரு தன்னிகரில்லா தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு. அவரது 96-வது பிறந்த தினம் தியாகராயநகரிலுள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.

Advertisment

nalakannu

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 26, 1925-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 15-ஆம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டார்.

Advertisment

செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, குடும்பப் பெருமையைப் பேணிக்கொண்டு சொத்தைக் காபந்து பண்ணுவதற்குப் பதில், அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, சிறை, காவலர் அடக்குமுறை, பட்டினிப் போராட்டம் என தன் முழுவாழ்வையும் செலவிட்டுவருகிறார்.

காலனி இந்தியாவில் உணவுப் பஞ்சம் கோலோச்சிக் கொண்டிருந்த சூழலில், செல்வந்தர்களும் பதுக்கல் வியாபாரிகளும

மிழக அரசியல் களத்தில் சலிப்பின்றி மக்கள் பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்து சமரசமின்றிப் போராடி வரும், அப்பழுக்கில்லாத தலைவர்களைத் தேடிச் சென்றால் ஓரிருவரே எஞ்சுவர். அத்தகைய தொரு தன்னிகரில்லா தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு. அவரது 96-வது பிறந்த தினம் தியாகராயநகரிலுள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.

Advertisment

nalakannu

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 26, 1925-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 15-ஆம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டார்.

Advertisment

செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, குடும்பப் பெருமையைப் பேணிக்கொண்டு சொத்தைக் காபந்து பண்ணுவதற்குப் பதில், அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, சிறை, காவலர் அடக்குமுறை, பட்டினிப் போராட்டம் என தன் முழுவாழ்வையும் செலவிட்டுவருகிறார்.

காலனி இந்தியாவில் உணவுப் பஞ்சம் கோலோச்சிக் கொண்டிருந்த சூழலில், செல்வந்தர்களும் பதுக்கல் வியாபாரிகளும் அரிசி மூட்டையைப் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயன்றுகொண்டிருந்த நிலையில், அதுகுறித்து தகவல் கொடுத்து அந்தப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்க காரணமாக அமைந்தார்.

நெல்லைச் சதி வழக்கில் பாலதண்டாயுதம் அவர்களுடன், தோழர் நல்லகண்ணுவும் கைதுசெய்யப்பட்டு, போலீசின் கடும் சித்ரவதையை எதிர்கொண்டு, ஏழாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். பின் சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கும், அப்போதைய தமிழக முதல்வருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக நல்லகண்ணு விடுதலையானார்.

ff

நித்தம் ஒரு போராட்டம், எப்போது சிறை செல்வார் என்று தெரியாத ஒருவருக்கு பெண் தர யாருக்கும் தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் தோழர் நல்லகண்ணுவுக்கு, சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமி தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து வைத்தார். தோழரின் போராட்ட வாழ்வில் ரஞ்சிதம் அம்மையார் உற்ற துணையாக இருந்து, தன் ஆயுட்காலம் வரை அவரது லட்சியப் பாதையில் தடைவராமலும் வேகம்குறையாமலும் பார்த்துக்கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் செயல்பட்டு மாநிலமெங்கும் கட்சியை வளர்க்க தீவிர முனைப்புக் காட்டினார். பஞ்சாலைப் போராட்டம், தொழிலாளர் போராட்டம் முதல் தாமிரபரணி யாற்றில் மணல் அள்ளும் திருடர்களை கைதுசெய்யக் கோரி சமீப ஆண்டுகளில் நடத்திய போராட்டம் வரை தன் முழுவாழ்வையும் போராட்டக் களத்திலேயே கழித்தவர். இத்தகைய தியாகத் தலைவருக்கு, நோட்டுகளால் தீர்மானிக் கப்படும் ஓட்டுகளைக் கொண்ட தேர்தல் களம் சாதகமாக அமையவில்லை. சட்டமன்றத் தேர்தலின்போது, அம்பாசமுத்திரத்தில் இருமுறையும், கோவையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒருமுறையும் போட்டியிட்ட அவருக்கு வெற்றியை மக்கள் தரவில்லை.

வெற்றி-தோல்வி பற்றிக் கவலைப்படாமல் சளைக்காமல் போராடும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, சகயோகி புரஸ்கார் விருது, அம்பேத்கார் விருது, காந்தி விருது, ஜீவா விருது என தன் பொதுவாழ்க்கைச் செயல்பாடுகளுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அரசியல் தலைவரையும் தயக்கமின்றி விமர்சிக்கும் சாமானிய மனிதன்கூட, நல்லகண்ணுவை விமர்சிக்கும்போது ஐயாபோல் அரசியல் தலைவர் கிடையாது எனச் சொல்வதே அவர் சம்பாதித்த மாபெரும் விருதாகும்.

பணம், என்றும் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் அரசியல் போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டு வரும் நல்லகண்ணுவின் 80 பிறந்தநாளின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதிதிரட்டி அவருக்கு ஒரு கோடி ரூபாயும் காரும் அவருக்குப் பரிசளித்தது. அவரோ இரண்டையும் கட்சிக்கே திருப்பியளித்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருதளித்தபோது கொடுத்த 1 லட்ச ரூபாயில் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய அமைப்புகளுக்கும் வழங்கிய நிகழ்வுகள் அதையே உறுதிப்படுத்துகின்றன.

நல்லகண்ணுவின் 96-வது பிறந்ததினத்தை யொட்டி கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.டி.கே. தங்கமணி நினைவுதின விழாவும், நல்ல கண்ணுவின் பிறந்த தின விழாவும் நடைபெற்றது. நல்லகண்ணுவுக்கு தோழர்கள் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் தம் வாழ்த்தைத் தெரிவித்தனர்.

தோழர் நல்லகண்ணு பேசும்போது, ""சமீபகாலமாக இந்தியாவில் பேச்சுரிமை, மனித உரிமை மறுக்கப்படுகிறது. வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங் கள் ஒடுக்கப்படுகின்றன. அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுதந்திரத்தைப் பெற போராடியதுபோல், சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' எனக் கூறினார்.

நேரில் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ""தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை, தியாகம், நேர்மை இவற்றின் இலக்கணம். அரசியல் கடலின் கலங்கரை விளக்கம்''’என டுவிட்டரிலும் வாழ்த்துத் தெரிவித்தார். ஆளுங்கட்சியிலிருந்தும் தோழருக்கு வாழ்த்துகள் வந்தன.

தியாகத்தைத் தனக்கும் தன் குடும்பத்துக்கும் அதன் பலன்களை கட்சிக்கும் பொதுமக்களுக்கும் பகிர்ந்துகொண்ட தோழர் நல்லகண்ணு, இன்னும் பல்லாண்டுகள் இருந்து கட்சிக்கும் தமிழகத்துக்கும் உரிய பங்களிப்பை ஆற்றவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம்!

-க.சுப்பிரமணியன்

nkn301220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe