Advertisment

இது ஏகலைவன் காலம்! -காலை உணவுத்திட்ட விழாவில் முதல்வர்!

dd

ந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் திருக் குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கியிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்க விழா, தருமபுரம் ஆதீன பவளவிழா, நாகை நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பவிழா என மூன்று விழாக்களில் கலந்துகொள் வதற்காக 3 நாள் பயணமாக டெல்டா மாவட்டத்திற்கு வந்தி ருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

ff

ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலையில் தருமபுரம் ஆதீன பவள விழா நிகழ்ச்சியில் பேசிய ஆதீனம், "இக்கல்லூரியின் வெள்ளிவிழாவிற்கு கலைஞர் வந்தார், பொன்விழாவிற்கு பேராசிரியர் அன்பழகனும், கோ.சி.மணியும் வந்தனர், பவள விழாவிற்கு இன்றைய முதல்வர் தளபதி வந்துள்ளார், நூற்றாண் டுக்கு, அவரது பிள்ளை வருவார். எப்போதெல்லாம் விழாக்காலம் வருகிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க

ந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் திருக் குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கியிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்க விழா, தருமபுரம் ஆதீன பவளவிழா, நாகை நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பவிழா என மூன்று விழாக்களில் கலந்துகொள் வதற்காக 3 நாள் பயணமாக டெல்டா மாவட்டத்திற்கு வந்தி ருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

ff

ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலையில் தருமபுரம் ஆதீன பவள விழா நிகழ்ச்சியில் பேசிய ஆதீனம், "இக்கல்லூரியின் வெள்ளிவிழாவிற்கு கலைஞர் வந்தார், பொன்விழாவிற்கு பேராசிரியர் அன்பழகனும், கோ.சி.மணியும் வந்தனர், பவள விழாவிற்கு இன்றைய முதல்வர் தளபதி வந்துள்ளார், நூற்றாண் டுக்கு, அவரது பிள்ளை வருவார். எப்போதெல்லாம் விழாக்காலம் வருகிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். இது ஆன்மீக ஆட்சி'' என்றார். சிறப்புரையாற்றிய முதல்வர், "இது அனைவருக்குமான ஆட்சி, நாட் டுக்கும், நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் தங்களது பங் களிப்பை அளிக்க வேண்டும். உங் களது கோரிக்கைகளைத் தெரி வியுங்கள். அதனை நிறைவேற்றித் தருகிறோம். இது எனது அரசல்ல, நமது அரசு'' என கூறினார்.

மறுநாள் 25ஆம் தேதி, காலையில், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றார். சரியாக காலை 8 மணிக்கு கலைஞர் படித்த பள்ளியான திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். இருபுறமும் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள், தேசிய மாணவர் படை யினர் நின்று வரவேற்பளித்தனர். பள்ளிக்கு உள்ளே சென்றதுமே சமையல் அறைக்குள் சென்று உணவுகளை பார்த்துவிட்டு பள்ளி சிறுவர் சிறுமிகளுடன் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்தபடி உணவு சாப்பிட்டார். முதல்வர் தன்னருகே அமர்ந்திருந்த சிறுவர், சிறுமிகளுடன் மழலையாகவே மாறி ஜாலியாக உரையாடியது பலரையும் ரசிக்கவைத்தது.

Advertisment

ff

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அந்த காலத்தில் அரசர் குலத்தவர் மட்டுமே கற்றுக் கொள்ளலாம் என்றிருந்த வில்வித்தையை வேடர் குலத்தை சேர்ந்த ஏகலைவன் கற்றுக் கொண்டதைப் பார்த்து கட்டை விரலை காணிக்கையாக கேட் கின்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள் தான் இருந்தார்கள். சமூக நீதி நிலை நாட்டப்படும் இந்த காலத்தில் யாராவது கட்டை விரலை காணிக்கையாகக் கேட்டால் அவர்களுடைய பட்டை உரியும் என்று எச்சரித்தவர் இந்த மண் ணின் மைந்தர் நம்முடைய தலை வர் கலைஞர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்த சமூகநீதிப் பாதையில், அனைத்து அறிவையும் அனைத்து சமூகத் தவருக்கும் தருகின்ற ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக் கிறோம். இந்த சூழலிலும் தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில், நீட் என்ற பெயரில் தடுப்புச் சுவர் போடுகின்ற துரோக ஆச்சாரியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏகலைவன் தன்னுடைய கட்டை விரலை காணிக்கையாகக் கொடுத்ததெல்லாம் அந்த காலம், அந்த காலம் மலையேறிவிட்டது. இது கலைஞர் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய காலம். இது ஏகலைவன் காலம். அனைவருக் கும் அனைத்தும் கிடைக்கும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற திராவிடவியல் கோட்பாடு கோலோச்சும் காலம். எத்தனையோ திட்டங்களை நான் கொண்டு வந்திருக்கிறேன். அதையெல்லாம்விட இந்தத் திட்டத்திற்கு கையெழுத்திடும் பொழுது அடைந்த மகிழ்ச்சி அளவற்றது'' என்றார்.

அங்கிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் பிறந்த இல்லத்திற்கு சென்று அங்குள்ள கலைஞர், முரசொலி மாறன் உள்ளிட்டோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்த வருகை பதிவேட்டில், "தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளையில், அவர் படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சி. நன்றி' என்று எழுதிவிட்டுக் கிளம்பினார்.

"காலை வேளையில் குடும் பத்தில் உள்ள தாய் தந்தையர் வேலை தேடி ஓடும் பொழுது அவர்களால் உரிய நேரத்தில் உணவு செய்து கொடுக்கமுடியாத எத்தனையோ குடும்பங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. அவசர, அவசரமாக பல மாணவ -மாணவிகள் காலை உணவு அருந்தாமல் பசியோடு பள்ளிக் குச் செல்வதையும் காண முடி கின்றது. வயிற்றுப்பசி இருக்கும் பொழுது நிச்சயமாக ஆசிரியர் கள் நடத்துகின்ற பாடத்தை உள்வாங்கிடமுடியாது. இத்த கைய நிலையைப் போக்க வேண் டும் என்று தாயுள்ளத்தோடு முடிவெடுத்த நமது முதல்வர், அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் துவக்கியிருப்பது மாணவ -மாணவிகளை மட்டுமின்றி பெற்றோர்களையும் மனம்குளிர செய்கிறது'' என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வேதாரண்யம் பாரிபாலன். பசி யாற்றி கல்வி புகட்டும் தமிழ்நாடு... இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு!

-க.செல்வகுமார்

nkn300823
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe