"லோ தலைவரே, விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு நீடித்திருக்கிறது.''

"விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக இலங்கை அரசே அறிவித்தும் கூட, இல்லாத புலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்திருக்கிறதே?''

rr

"ஆமாங்க தலைவரே, இது ஒன்றிய அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் தமிழர்களுக்கு எதிரான வன்மம்னு தமிழ் உணர்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தத் தடையை நீட்டிப்பதற்காகவே, விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பிற்கு ஆட்களைச் சேர்த்து வருவதாகவும், முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஆயுதங்களைத் திரட்டுகிறார்கள் என்றும், சில சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்புகிற வேலையையும் ஒன்றிய அரசு முன்னதாகவே செய்தது என்றும் கூறுகிறார்கள். மேலும். என்.ஐ.ஏ. சோதனைகளையும் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தியது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் மீது அது ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அந்த ரெய்டுகளில் புலிகள் இருப்பதற்கான எந்தத் தடயமும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பூச்சாண்டி காட்டுகிறது டெல்லி என்கிறார்கள்.''

Advertisment

"அதைவிடப்பா, மோடியின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் சிலர் மட்டும் அவரால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்களே?''

"மூன்றாவது முறையாக உ.பி.யில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. இதற்காக அவர் மனுத் தாக்கல் செய்த நிகழ்வில், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி களின் தலைவர்கள் அனை வரையும் அவர் அழைத்திருந்தார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தவிர, கூட்டணியில் உள்ள வட இந்தியத் தலைவர் கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர். உடல் நிலையைக் காரணம் காட்டி நிதிஷ் வரவில்லை. அதே சமயம், தமிழகத்தில் உள்ள தங்கள் கூட்டணி சார்பில் பா.ம.க., த.மா.கா., இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே மோடியிடம் இருந்து அழைப்பு வந்ததாம். மோடியைப் பெரிதும் தூக்கிப்பிடிக்கும் தினகரன், ஓ.பி.எஸ்., ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு ஏனோ அழைப்பு இல்லையாம். அழைப்பு விடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன், தேவநாதன் யாதவ் ஆகியோர் மட்டும் இங்கிருந்து மோடியின் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தங்களை மோடி ஏன் அழைக்கவில்லை என, ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்டவர்கள் குழம்பிக் கொண்டேயிருக்கிறார்களாம்.''”

"வசதியானவர்களுக்காக எடப்பாடி கட்சி நடத்துகிறார் என்கிற பிரச்சாரம், அ.தி.மு.க.வில் வலுத்துவருகிறதே?''”

Advertisment

rr

"மதுரையில் தன் மகன் ராஜ்சத்யனுக்கு சீட் கேட்டுக் கொண்டிருந்தாராம், மாஜி மேயரான ராஜன்செல்லப்பா. மேலும் தேர்தல் செலவுக்கும் கட்சி நிதியை வழங்குங்கள். நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம் என்றும் எடப்பாடியிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் எடப் பாடியோ, அவரை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, ’"எனக்கு சீட் கொடுங்கள்' என சூட்கேஸ் சகிதம் சென்ற, டாக்டர் சரவணனுக்கு சீட்டை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார். இது ராஜன் செல்லப்பா தரப்பை அப்செட் ஆக்கிவிட்டதாம். அ.தி.மு.க.வை சாமான்யர்களின் கட்சியாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடத்திவந்தார்கள். அவர்கள் ஏழைகளைக் கூட மக்கள் பிரதிநிதிகளாக்கி அழகுபார்த்தார்கள். அவர்கள் கடைப்பிடித்த ஃபார்முலாவை தூக்கி எறிந்துவிட்டு, கட்சியை பணக்காரர்களுக்காக எடப்பாடி நடத்திவருகிறார். அவரது வேட்பாளர் தேர்வே தவறானது என்கிற பிரச்சாரத்தை ராஜன் செல்லப்பா தரப்பு அ.தி.மு.க.வில் கையில் எடுத்திருக்கிறது. இதை வைத்து எடப்பாடிக்கு எதிராக ஒரு சூறாவளி, அ.தி.மு.க.வில் தற்போது உருவாகி வருகிறது.''”

"ஜெ.’வாழ்ந்த போயஸ் கார்டனை எடப்பாடி கோட்டை விட்டுவிட்டதாக, அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அண்மையில் மறைந்த விஜயகாந்த்தின் நினைவிடத்தை தே.மு.தி.க. தலைமை சிறந்தமுறையில் பராமரித்துவருகிறது. இதனால் தினமும் ஏராளமான பேர், அங்குவந்து அஞ்சலிசெய்தவண்ணம் இருக்கிறார்கள். அண்மையில் விஜயகாந்துக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பத்ம விருதைக் கூட, அவர் நினை விடத்தில் வைத்து தே.மு.தி.க. பிரேமலதா வணங்கி னார். இப்படி விஜயகாந்தின் நினைவிடத்தை, கட்சிக்கான முக்கிய சென்டிமெண்ட் ஸ்பாட்டாக அவர் ஆக்கியிருக்கிறார். இதேபோல் ஜெ.’வசித்த போயஸ்கார்டன் பங்களாவை, அ.தி.மு.க.வினரின் மரியாதைக்குரிய இடமாகப் பாதுகாக்க வேண்டிய எடப்பாடி, அதை தீபாவிடமிருந்து பெறுவதற்குக் கொஞ்சமும் முயற்சிக்கவில்லை என்கிற கோபம், அ.தி.மு.க.வில் உள்ள ஜெ. விசுவாசிகள் மத்தியில் அதிகமாக இருக்கிறதாம். இதையறிந்த எடப்பாடி, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், போயஸ்கார்டனை வாங்கி, நினைவிடமாய் ஆக்கலாமா? என்கிற யோசனையில் இருக்கிறாராம்.''

"நயினாரின் 4 கோடி விவகாரம் தற்போது சூடுபிடித்திருக்கிறதே?''”

rar

"தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. நயினார் நாகேந்திரனின் 4 கோடி ரூபாய், பறக்கும் படை யினரிடம் பிடிபட்டு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கினை தற்போது தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து நக்கீரனில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரைகள் விசாரணை டீமுக்கு பெரும் உதவியாக இருந்ததாம். அதாவது, ஏப்ரல் 13-16 இதழில் "நெல்லையில் பதட்டம்' என்ற தலைப்பில் நம் நக்கீரனில் எழுதப்பட்ட கட்டுரை யில், போலீசில் சிக்கிய நயினாரின் ஆட்கள் மூவரும் நெல்லை எக்ஸ்பிரஸில் பயணிக்க, தனது எம்.எல்.ஏ. சிலிப் மூலம் எமர்ஜென்சி கோட்டாவில் டிக் கெட்டை கன்ஃபார்ம் பண்ணிக் கொடுத்திருக்கிறார் நயினார் என்கிற தகவல் பதிவாகி இருந்தது. இது விசாரணை டீமுக்கு பெரும் துருப்பாக அமைந்ததாம். இதற்கிடையே தமிழக பா.ஜ.க.வின் அந்த நிர்வாகி, இந்த விவகாரத்தில் இருந்து உங்களை மீட்கிறேன் என்றபடி, நயினாரோடு மும்பையில் சுற்றிக்கொண்டு இருக் கிறாராம்.''”

"காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா, சமீபத்தில் இந்தியர்களின் நிற வேற்றுமை குறித்து சொன்ன கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. அதாவது பல்வேறு நிறங்களில், பல்வேறு இனங்களில், எங்கள் மக்கள் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக மகிழ்வாக வாழ்ந்து வருகிறோம் என்ற ரீதியில் அவர் சிலவற்றைச் சொன்னார். அவரது இந்தப் பேச்சு நாட்டின் முக்கியமான தலைவர்களை ஏளனப்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர்கள் எதிர்க்கருத்தைப் பரப்பினர். இதைத் தொடர்ந்து, அவரது அந்தக் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என டெல்லியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இந்த நேரத்தில் , தனது பதவியில் இருந்து சாம் பிட்ராடோ விலகி இருக்கிறார். ஆனாலும், விடாமல் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இதைப் பெரிதுபடுத்தியபடியிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த விவகாரத்தை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமாகவும், பத்திரிகையாளர்கள் சந்திப்புமாக நடத்ததும் பொறுப்பை, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவர் சக்ரவர்த்தியிடம் கொடுத்தது.''”

"ஆமாம்பா, பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழகம் முழுவதுமுள்ள பாஜகவின் கோட்டப் பொறுப்பாளர்கள், அவரவர்கள் பொறுப்பிலுள்ள மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட் டத்தை முன்னெடுக்க வேண்டும் என சக்கரவர்த்தி வலியுறுத்தியிருந்தார். அதேபோல் ஆர்ப்பாட்டங்கள் சமீபத்தில் நடந்தன. அதேசமயம் சென்னை கோட்டப்பொறுப்பாளர் கரு.நாகராஜனிடம், "சென்னையில் ஆர்ப்பாட்டம் வேண்டாம்; ப்ரஸ்மீட்டாக நடத்துங்கள்' என சக்கரவர்த்தி சொல்லியிருந்தார். ஆனால், கரு.நாகராஜனோ, ’தமிழகத்திலேயே பிரமாண்டமான ஆர்ப்பாட்டமாக நடத்திக்காட்டுகிறேன்’ என்று களமிறங்கினார். ஆனால் அவர் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் வெறும் 60 பேர் மட்டுமே கலந்து கொண்டிருக் கிறார்கள். அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் வைத்தது போலீஸ். இதையறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள், ’இப்படி ஒரு ஆளில்லாப் போராட்டம் தேவையா?’ என்று சாட, இதன்பிறகு எங்கெங்கோ போன் போட்டு ஒரு 200 பேரை அந்த மண்டபத் துக்கு வரவழைத்து சீன் காட்டியிருக்கிறார் நாக ராஜன். எனினும், நாக ராஜன் மீதான புகாராக இதை மேலே கொண்டு போயிருக்கிறார்களாம் பா.ஜ.க. நிர்வாகிகள்.''”

"கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபரான சஜீவன், வெளி நாட்டுக்குத் தப்பிவிட்டா ராமே?''”

"’உண்மைதாங்க தலைவரே, கடந்த 22 ஆம் தேதி கூடலூர் வனப்பகுதியில் இருக்கும் சில்வர் கிளவுட் என்கிற அவரது எஸ்டேட்டில், ஒரு கடமான் மற்றும் ஒரு காட்டெருமை வேட்டை யாடப்பட்ட சம்பவம் வனத்துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. இதற்குப் பயன்பட்ட நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருக் கின்றன. இந்த விவகாரத்தில் அவர் எஸ்டேட்டில் வேலைபார்த்தவர்கள் மீதும், சஜீவன் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை காவல்துறை மற்றும் வனத்துறையினர் மூலம் அறிந்த சஜீவன், கூடலூரில் இருந்து அப்படியே துபாய்க்கு எஸ்கேப் ஆகிவிட்டாராம். கொடநாடு விசாரணை டீமினர், இந்த சஜீவன் மூலம்தான், அந்த வழக்கில் சில அழுத்தமான திருப்புமுனை களைக் கண்டறிந்தார்களாம். இந்த நிலையில் சஜீவன் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றதை அறிந்த முதல்வர் அலுவலகம், கோபத்தில் இருக்கிறதாம். அவர் தப்பிச்செல்லக் காரணமாக இருந்தவர்கள் யார் யாரென்ற விசாரணை, இப்போது வேக மெடுத்திருக்கிறதாம்.''”

dd

"சபரீசனின் பென் அமைப்பு, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மீண்டும் ஒரு சர்வே எடுத் திருக்கிறதே?''”

"முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் ’ பென்’ அமைப்பு, தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கான களப்பணிகளை மேற்கொண்டது. எங்கெங்கே தி.மு.க.வில் கோஷ்டிப்பூசல்கள் இருக்கின்றன என்பதையும் ஸ்டாலின் கவனத்துக்கு அது கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து, பிரச்சினை உள்ள பகுதிகளுக்கு சபரீசனையே அனுப்பினார் ஸ்டாலின். அங்கெல்லாம் விசிட்டடித்த சபரீசன் அங்குள்ள தி.மு.க. நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் என அனைவரிடமும் விவாதித்தார். 40 தொகுதி களையும் ஜெயிக்க வேண்டும் என தலைவர் விரும்புகிறார். நீங்கள் இப்படி இருந்தால் எப்படி என்றெல்லாம் அவர்களிடம் பேசி, சமாதானத்தையும் ஏற்படுத்தினார். இதன்பிறகு தி.மு.க. நிர்வாகிகளின் களப்பணி வேகமெடுத்தது. கட்சித் தலைமைக்கும் அதனை தெரிவித்தார் சபரீசன். வாக்கு எண்ணிக்கைக்கான நாட்கள் நெருங்கிவரும் இந்த நேரத்தில், தேர்தல் முடிவுகள் குறித்து மீண்டும் ஒரு சர்வேயை சபரீசன், தன் பென் அமைப்பு மூலம் நடத்தியிருக்கிறார்.''”

“"அந்த சர்வே முடிவு என் னங்கிறது பற்றி நான் சொல்றேன்.''

"அண்மையில் சபரீசனின் பென் அமைப்பு எடுத்த சர்வே ரிப்போர்ட்டில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் 32-ல் திமுக அபாரமாக வெற்றி பெறும் எனவும், மீதமுள்ள 7 தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும், இறுதியில் தி.மு.க.வே வெற்றி பெறும் என்றும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறதாம். இது முதல்வரை ரொம்பவே மகிழ்ச்சிப்படுத்தி யிருக்கிறது.''”

_____________

இறுதிச் சுற்று!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைமைச் செயலகத்திற்கு வியாழக்கிழமை (16-5-2024) வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக எழுந்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கோட்டைக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட வாரியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்பட்டிருப்பதையும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் விவரித்தனர். இறுதியில் பேசிய முதல்வர், "தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் சின்ன அளவில் கூட இருக்கக்கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டும்'' என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

-இளையர்