நெல்லை பாராளுமன்றத் தொகுதியை தனக்கு அல்லது தனது மைந்தன் நயினார் பாலாஜிக்கு கேட்டு பா.ஜ.க.வின் முன்னாள் பார்வையாளரான முரளீதரராவ் மூலமாக மூவ் செய்துவரும் நயினார் நாகேந்திரன் (பண்ணை யார்), கட்சியின் அறிவிப்பை முந்திக்கொண்டு, தன்னுடைய ஹோட்டலின் ஒரு பகுதியில் பா.ஜ.க.விற்கான பாராளுமன்றத் தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, பா.ஜ.க.வின் நெல்லை வேட்பாளராகத் தன்னை பில்டப் செய்துகொண்டு வாக்கு சேகரித்தது, பரபரப்பையும், புகைச்சலை யும் ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரன், தனக்குத்தானே வேட்பாளராக அறிவித்ததுமே நெல்லையின் மெஜாரிட்டியான பிள்ளைமார் சமூகத்தின் சார்பில், பண்ணையாருக்கு சீட் தரக்கூடாதென்று அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. அதேபோல, நெல்லை பா.ஜ.க. என்றால் நயினார் நாகேந்திர னைத் தவிர வேறு யாருமில்லையா? எனக்கேட்டு, நெல்லை மாவட்ட பா.ஜ.க. முக்கிய புள்ளிகள், பா.ஜ.க. தலைமைக்கு எதிர்ப்பைப் பதிவுசெய் துள்ளனர். கூடுதல் அதிர்ச்சியாக, பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்த சரத்குமாரும் நெல்லையை குறிவைத்திருப்பது பண்ணையாருக்கு உள்ளுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இவற்றோடு, கூட்டணியிலிருக்கும் ஜி.கே.வாசன், தனது கட்சிக்காகக் கேட்டிருக்கும் தொகுதிகளில், நெல் லையும் முக்கியமானதாக உள்ளதாம். நெல்லையில் தனது கட்சியின் மாநில செயலாளரான என்.டி.சார்லஸை வேட்பாளராக்க முயற்சிக்கிறார். இதற்காக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் பேசி, கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாம். இந்தத் தகவல் நயி னார் நாகேந்திரனின் காதுக்கு போக, அவருக்கு உள்ளுக்குள் ஜூரமே வந்துவிட்டதாம்!
இத்தனை எதிர்ப்புகள் தனக்கு பாதகமாக அணிவகுப்பதால், இதை எப்படி எதிர்கொள்வ தென யோசித்த பண்ணையார், எனக்கு சீட் கிடைக்காவிட்டால் முக்கியப் புள்ளிகள் மூலமாக தி.மு.க.வில் இணைந்துவிடுவேன் என்ற மிரட்டல் அரசியல் ரூட்டை எடுத் திருக்கிறாராம். கட்சியில் தனது விருப்பத்தை நிறைவேற்ற, தனியாளாக இறங்கியடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக நெல்லை டவுண் சொக்கட்டான் தோப்பு, தென்பத்து ஆகிய பஞ்சாயத்துகளில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை, மார்ச் 14ஆம் தேதி திறந்துவைத்த நயினார் நாகேந்திரன், யாரும் எதிர்பாராத வகையில் தனியாளாக தேர்தல் பிரச்சாரத்திலும் இறங்கி, மக்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி கும்பிடு போட்டு அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்திருக்கிறார்.
தேர்தல் அறிவிப்பு வரவில்லை... கூட்டணி முடிவாகவில்லை... வேட்பாளர் அறிவிப்பு மில்லை... அதற்குள் நான் தான் வேட்பாள ரென்று பிரச்சாரத்தில் இறங்கியது அப்பகுதி மக்களையும், கூட்டணிக் கட்சியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது! பந்திக்கு முந்தச் சொல்வாங்க... பிரச்சாரத்துக்கும் முந்திட்டாரே தனியொருவன்!
-ராம்குமார்
படங்கள்: ப.இராம்குமார்