ள்ளக்குறிச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவர் அப்பகுதியில் நாட்டு மருந்துக் கடை வைத்து பிரபலமானவர். அவரது இளைய மகன் வேலவன். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ஓகளூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணைக் காதலித்து, 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வேலவனின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததால் வீட்டைவிட்டு இரு வரும் வெளியேற்றப் பட்டனர்.

Advertisment

இருவருக்கும் முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில ஆண்டுகளில் அந்த குழந்தைக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு 20 லட்சம் வரை செலவு செய்தும் குழந்தையைக் காப்பாற்ற முடிய வில்லை. கடனில் சிக்கித் தவித்த நிலையில் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அடுத்த பேரிடியாக வேலவன் விபத்தில் சிக்கினார். கடனிலிருந்து மீளவும் கணவர், குழந்தைகளை காப்பாற்றவும் பாரதி துபாய்க்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

ff

சில ஆண்டுகள் அங்கே வேலை செய்துகொண்டிருந்த போது ஊருக்கு வந்துவிட்டு மீண் டும் துபாய்க்கு செல்லும்போது மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த கைக்குழந்தையோடு மீண்டும் அரபு நாட்டிற்கு சென்று வீட்டு வேலையைத் தொடர்ந்தார் பாரதி. இந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பாரதியை கொரோனா தாக்கி யது. அவருடன் வேலை பார்த்த தோழிகள் ரெஜினா, வசந்தி இருவரும் அங்குள்ள மருத்துவ மனையில் பாரதியை சிகிச்சைக்குச் சேர்த் தும் பலனின்றி 2021 மே 10-ல் உயிரிழந்தார்.

துடித்துப்போன அவரது தோழிகள் இரு வரும், ஒன்பது மாத குழந்தை தேவனேஷை, கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தனர். விமான போக்குவரத்து இல்லாததால் குழந்தை தேவனேஷை தமிழகம் கொண்டுவருவதற்கு வழியில்லாமல் இருந்தது. அரபு நாட்டில் வேலை செய்துகொண்டி ருந்த மீரான், நாசர், முகமது கான் போன்ற சமூக ஆர் வலர்கள் தகவலறிந்து உதவிசெய்ய முன்வந்தனர். தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடிக் கவனம் செலுத்தி அந்த குழந்தையை தமிழகம் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி குழந்தை தமிழகம் வந்தது.

Advertisment

ff

அப்போது தமிழக அரசு, கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள ஆளும் கட்சி அரசியல் பிரமுகர் கள், வி.ஐ.பி.கள், குழந்தையின் தந்தை வேலவனைத் தொடர்பு கொண்டு "எதற்கும் கவலைப்பட வேண்டாம் குழந்தைகளை வளர்ப்பதற்கும் அவர்களைப் பாதுகாக்கும் உங்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்வோம்'' என்று வாக்குறுதி கொடுத்தார்கள். வேலவனும் நம்பிக்கையோடு தன் குழந்தை களை வீட்டுக்கு அழைத்துவந்தார்.

அரசு சார்பில் 3 லட்ச ரூபாய் உதவித் தொகையை குழந்தைகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தது. ஆனால் அந்தத் தொகை போதுமானதாக இல்லை. வாக்குறுதியும், நம்பிக்கையும் கொடுத்த முக்கிய பிரமுகர்கள் யாரும் அதன்பின் உதவ முன்வராததால் மிகுந்த சிரமத்திலிருக்கும் வேலவனை நாம் சந்தித்தோம்...

Advertisment

வேலவன் நம்மிடம், "என் முகம் தெரியாதவர்கள் கூட என் குழந்தைகள், என்னுடைய நிலையைப் பார்த்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர். பிறகு யாரும் கண்டுகொள்ளவில்லை. 9 மாத குழந்தை யாக இங்கு வந்த குழந்தைக்கு தற்போது இரண்டு வயது. மனைவி இல்லாததால் பிள்ளைகளை பராமரிப்பது முழுநேர வேலையாக உள்ளது. உழைத்துச் சம்பாதிக்க மனமிருந்தும் செல்லமுடியவில்லை. விபத்தில் சிக்கிய தால் கடுமையான வேலையும் செய்யமுடியவில்லை. குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரும் கை விட்டுவிட்டனர். காதல் திருமணத்துக்குப் பின் என் குடும்ப ஆதரவு முற்றிலும் நின்றுபோனது. குழந்தை பிறந்த பிறகு எனது மாமியார், குழந்தை பராமரிப்புக்கு மிகவும் உதவியாக வந்தார். குழந்தை எங்களிடம் வந்த 15 நாளில் மாமியாரும் இறந்துபோனார். அடிமேல் அடியால்… எப்படி பிள்ளைகளைக் காப்பாற்றுவது என்ற குழப்பத்திலும் வேத னையிலும் என் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குழந்தைகளை உரிய வயது வரும் வரை காப்பாற்ற அரசு ஏதாவது ஒரு வேலை வழங்கி னால் பெரும் உதவியாக இருக்கும். இல்லையேல், சித்த மருத்துவம் தெரிந்த எனக்கு, அந்த மருத்துவம் செய்து பிழைத்துக்கொள்ள நிதிஉதவி செய்தால்கூட அதைக் கொண்டாவது வறுமையிலிருந்து மீளமுடியும். இதே நிலை நீடித்தால் எனது நிலையும் என் குழந்தைகள் நிலையும் என்ன ஆகுமோ என்று பரிதவித்துவருகிறேன். அரசு அதிகாரிகளைச் சந்தித்து எனது நிலை குறித்து விளக்கிக் கூறினால் நேரம் வரும்போது அரசு உங்களை அழைக்கும் என்று கூறி திருப்பியனுப்புகிறார்கள்.

அரசும், கருணைமிக்க மனிதர்களும்... மனைவி இறந்த பிறகு குழந்தையை பாதுகாப்பாக தமிழகம் கொண்டுவந்து சேர்த்தனர். தற்போது தினசரி எங்களுக்கு உணவு கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. மூத்த பையன் அகிலனை அரசுப் பள்ளிக்கு அனுப்பிவரு கிறேன். மற்ற நேரங்களில் சிறிய குழந்தையைப் பரா மரிப்பதற்கு நேரம் சரியாக உள்ளது. என் குடும்பத்தின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது''’என்று கூறி கலங்கிநிற்கிறார்.