Advertisment

காதல் ஜோடிகளை குறிவைத்த முக்கொம்பு காவலர்கள்! -அணிவகுக்கும் ஆபாச சாட்சியங்கள்!

dsfd

ட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பிக்க முயன்ற மாபாதகர்களுக்கு, அவர்கள் அரங்கேற்றிய கொடூரங்களே சாட்சியமாக மாறி வருகின்றன.

Advertisment

திருச்சி அருகே உள்ள சுற்றுலாத்தலமான முக்கொம்பில், தொடர்ந்து இளம் காதலர்களுக்கும் இளம்பெண்களுக்கும் சமூக விரோதிகளால் நடந்துவந்த கொடூரங்களை யாராலும் மறந்துவிட முடியாது. அதில் ஒன்றுதான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அரங்கேற்றப்பட்ட அந்த சம்பவம்.

Advertisment

ff

சுற்றுலாத்தலமான முக்கொம்புக்கு தன்னுடைய 19 வயதுக் காதலனோடு, அந்த 17 வயது சிறுமி சென்றாள். நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் அந்த காதல் ஜோடி சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது.

அப்போது, அந்த சிவப்பு நிற கார் அவர்கள் அருகே வந்து நின்றது. அதிலிருந்து நான்கு போலீஸ்காரர்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு இறங்கினர்.

அவர்களைக் கண்டதும் காதல் ஜோடி மிரண்டு பின்வாங்கியது. எனினும் அந்த போலீஸ்காரர்கள் அவர்களை நெருங்கினர். அருகில் இருந்த இன்னொரு காதல் ஜோடி, அவர்களைக் கண்டு ஓடிவிட... இந்த ஜோடி மட்டும் சிக்கிக்கொண்டது.

"டேய், யார்ரா நீ? இங்க என்ன கஞ்சா விக்கிறியா? இந்தப் பொண்ணு யாரு?''’என்று கடுமையான குரலில் அவ

ட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பிக்க முயன்ற மாபாதகர்களுக்கு, அவர்கள் அரங்கேற்றிய கொடூரங்களே சாட்சியமாக மாறி வருகின்றன.

Advertisment

திருச்சி அருகே உள்ள சுற்றுலாத்தலமான முக்கொம்பில், தொடர்ந்து இளம் காதலர்களுக்கும் இளம்பெண்களுக்கும் சமூக விரோதிகளால் நடந்துவந்த கொடூரங்களை யாராலும் மறந்துவிட முடியாது. அதில் ஒன்றுதான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அரங்கேற்றப்பட்ட அந்த சம்பவம்.

Advertisment

ff

சுற்றுலாத்தலமான முக்கொம்புக்கு தன்னுடைய 19 வயதுக் காதலனோடு, அந்த 17 வயது சிறுமி சென்றாள். நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் அந்த காதல் ஜோடி சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது.

அப்போது, அந்த சிவப்பு நிற கார் அவர்கள் அருகே வந்து நின்றது. அதிலிருந்து நான்கு போலீஸ்காரர்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு இறங்கினர்.

அவர்களைக் கண்டதும் காதல் ஜோடி மிரண்டு பின்வாங்கியது. எனினும் அந்த போலீஸ்காரர்கள் அவர்களை நெருங்கினர். அருகில் இருந்த இன்னொரு காதல் ஜோடி, அவர்களைக் கண்டு ஓடிவிட... இந்த ஜோடி மட்டும் சிக்கிக்கொண்டது.

"டேய், யார்ரா நீ? இங்க என்ன கஞ்சா விக்கிறியா? இந்தப் பொண்ணு யாரு?''’என்று கடுமையான குரலில் அவர்கள் ஆளாளுக்கு விசாரிக்க...

"இல்லைங்க சார், நாங்க லவ்வர்ஸ். சும்மா இங்க வந்தோம்''’என்று அந்தக் காதலன் மிரட்சி விலகாமல் சொன்னான்.

அந்தக் காதலனை அங்கிருந்து அடித்து விரட்டிய அவர்கள், "நீ கார்ல ஏறும்மா... உங்கிட்ட விசாரிக்கணும்''’என்றபடி அதட்டி, அந்த சிறுமியை தங்கள் காரில் ஏறவைத்தனர். கார் குபுக்கென அங்கிருந்து நகர்ந்தது.

dd

கொஞ்ச தூரம் சென்றதுமே, அந்த காக்கி நபர்கள், அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் இறங்க, அவள் அழுது அடம்பிடித்தாள்.

முரண்டு பிடித்து அழுத அவளை சமாளிக்க முடியாத அந்த காவலர்கள், அவளை பாதிவழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றார்கள். அதற்குமுன் அவளின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டனர். "நாங்கள் எப்போது அழைத்தாலும், தவிர்க்காமல் பேசவேண்டும், கூப்பிடும் இடத்துக்கு வரவேண்டும்'' என்று அவர்கள் மிரட்டவும் செய்தனர். மேலும், அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டு, அவள் பதில் சொல்வதை வீடியோ பதிவும் செய்திருக்கின்றனர்.

இதனால் ரொம்பவே மிரண்டு போனது அந்த காதல் ஜோடி. இதைத் தொடர்ந்து அந்த சிறுமியும், அந்த இளைஞனும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்ததைச் சொல்லி புகார் கொடுத்தனர்.

விசாரணையில் இறங்கிய ஜீயபுரம் போலீஸார், காதல் ஜோடியை மிரட்டியதோடு, சிறுமியிடம் அத்துமீறியவர்கள் பற்றி விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி ரோந்து எண் 6-ல் பணிபுரியும் முதல்நிலைக் காவலரான சங்கர், ராஜாபாண்டியன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கை பதிவு செய்ததோடு, அவர்களைக் கைது செய்தனர்.

இந்த வில்லங்க விவகாரத்தில் எஸ்.ஐ.யே ஈடுபட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இவர்கள் 4 பேரும் திருச்சி மாவட்ட எஸ்.பி. அமைத்த தனிப்படை குழுவின் மூலம் நண்பர்களாகியிருக் கின்றனர். அதன்பிறகுதான் இவர்கள் தங்களுடைய ஏடாகூடங்களைத் தொடர்ந்து அரங்கேற்றியுள்ளனர். இவர்கள் அடிக்கடி இணைந்து வெளியே செல்வதும், மது அருந்திவிட்டு, கல்லூரி மாணவிகள் உட்பட கண்ணில்பட்ட பெண்களிடமும் காதல் ஜோடிகளிடமும் அத்துமீறுவதுமாக இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 4 காக்கி களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் 4 பேரையும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தற்போது அவர்கள் சிறையிலிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி மண்டல டி.ஐ.ஜி.யோ இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் படி பொருளாதார குற்றவியல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. ரவிச்சந்திரனை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் களோ, "அவர் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தியதால், வேறு ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி.யிடம் பலமுறை வலியுறுத்தினோம். அவர் எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை. நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எனவே, வேறு ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும்''’என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்காகவும் வழக்கறிஞர் ஜமீல் அரசு ஆஜரானார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, "இது ஒரு சீரியசான கேஸ். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் கொடூரமானது. அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கும் பட்சத்தில், ஏன் வேறு ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்கக்கூடாது?'’என்று கேள்வி எழுப்பியதோடு, "வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், அதே சமயம் முதலில் இருந்து இதில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தேவையில்லை. விடுபட்ட இடத்தில் இருந்தே விசாரணை நடத்தலாம்' என்றும் டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கத்தை டி.ஐ.ஜி. நியமித்து உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து புதிய விசாரணை அதிகாரி, தனது விசாரணையையும் தொடங்கியிருக் கிறார்.

இந்த சூழலில், இப்போது அந்த 4 காவலர்களும் செய்த அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பல பெண்களுடன் அவர்கள் போட்ட ஆட்டங்கள்... என அனைத்தும், ஆபாச சாட்சியங்களாக சமூகவலைத் தளங்களில் அணிவகுத்து பரபரப்பை ஏற்படுத்த... அவற்றைக் காவல்துறை கைப்பற்றி யுள்ளது. மேலும் இந்த காவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்களின் அறிக்கையையும் வாக்குமூலங்களை யும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

"முக்கொம்பு கொடூரங்களுக்கு இந்த வழக்கின்மூலம் முற்றுப்புள்ளி விழும்' என்ற நம்பிக்கை, பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

fdd

nkn070824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe