தொழில்வளத்தைப் பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகமான சிப்காட்டை 1971-ல் தொடங்கியது கலைஞர் ஆட்சிக்கால தமிழக அரசு. தொழில்முனைவோருக்கான புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வரவேற்றார் 1996-ல் முதல்வராக இருந்த கலைஞர். இதையடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்கு படையெடுத்ததில், மிகப்பெரிய தொழிற்புரட்சி நடந்தது. ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்து உச்சத்தை எட்டியது. இதன்மூலம், தமிழகம் தொழில்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தது.
இன்றைய நிலவரமோ அப்படியில்லை. இங்குள்ளவர்களுக்கு தங்குதடையற்ற வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்ததோடு, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி சக்கையான பின்னர் தூக்கியெறியவும் துணிந்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள். தட்டிக்கேட்பவர்களை டிஸ்மிஸ் செய்யவும் தயங்குவதில்லை. இதைத் தடுக்கவேண்டிய தொழிலாளர் நலத்துறையோ, தொழில்துறையோ கண்டுகொள்வதுமில்லை.
தொழிலாளர்கள் பொம்மைகளைப் போல கையாளப்படும் அவலம் குறித்து சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் முத்துக்குமாரி
தொழில்வளத்தைப் பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகமான சிப்காட்டை 1971-ல் தொடங்கியது கலைஞர் ஆட்சிக்கால தமிழக அரசு. தொழில்முனைவோருக்கான புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வரவேற்றார் 1996-ல் முதல்வராக இருந்த கலைஞர். இதையடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்கு படையெடுத்ததில், மிகப்பெரிய தொழிற்புரட்சி நடந்தது. ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்து உச்சத்தை எட்டியது. இதன்மூலம், தமிழகம் தொழில்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்தது.
இன்றைய நிலவரமோ அப்படியில்லை. இங்குள்ளவர்களுக்கு தங்குதடையற்ற வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்ததோடு, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி சக்கையான பின்னர் தூக்கியெறியவும் துணிந்துவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள். தட்டிக்கேட்பவர்களை டிஸ்மிஸ் செய்யவும் தயங்குவதில்லை. இதைத் தடுக்கவேண்டிய தொழிலாளர் நலத்துறையோ, தொழில்துறையோ கண்டுகொள்வதுமில்லை.
தொழிலாளர்கள் பொம்மைகளைப் போல கையாளப்படும் அவலம் குறித்து சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, “""எம்.எஸ்.ஐ. ஆட்டோமோட்டிவ் எனப்படும் தென்கொரிய நிறுவனத்தில் பணிபுரியும் முழுநேர ஊழியர்கள் 150 பேர் மட்டுமே. ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு கார் மேல்பாடி தயாரித்துக்கொடுக்கும் இந்த நிறுவனத்தில், 30 மாதங்களாக சம்பள உயர்வே செய்யப்படவில்லை. தொழிற்சங்கம் அமைத்த 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து செப் 5-ஆம் தேதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒருமாதமாக போராடி வருகின்றனர்.
தைவான் நாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட், நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. நோக்கியா மூடப்பட்டதால் இதுவும் மூடப்பட்டது. இதே வளாகத்தில் இயங்கிவரும் பாக்ஸ்கானின் சகோதர நிறுவனமான ரைசிங் ஸ்டாரில் நான்காயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்தே வேலை வாங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களே கிடையாது.
டோங்சான் எனப்படும் தென்கொரிய நிறுவனம் தொழிலாளர்களின் 11 ஆண்டுகால உழைப்பைச் சுரண்டிவிட்டு, கடந்த மார்ச் 12-ல் மூடப்போவதாக அறிவித்தது. தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலைபார்த்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்க நிறுவனமான ஹனிவெல், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஊழியர்களை வீதியில் விட்டுவிட்டு ஆகஸ்ட் 11-ல் மூடப்பட்டது. இந்திய நிறுவனமான கனிஷ்க் கோல்டு கடன் முறைகேட்டால் மூடப்பட்டது. இதுவரை தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி தரப்படவில்லை''’என நிறுவனங்களின் மோசடிகளை விவரிக்கிறார்.
ஒரகடத்தில் இயங்கிவரும் ஜப்பானின் யமஹா இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தில், 800 நிரந்தர பணியாளர்களும் 2500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, தரமான உணவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சி.ஐ.டி.யூ.-உடன் இணைந்து தொழிற்சங்கம் அமைத்தனர். இதனால் வெறுப்படைந்த நிர்வாகம் சங்கத்தலைவர் பிரகாஷ், பொருளாளர் ராஜமணிகண்டனை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்தது. இதுகுறித்து சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கந்தன் பேசுகையில், ""தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் அமைதியான முறையில் போராடியவர்களை கைதுசெய்ய போலீசார் குவிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை முயற்சியில் இறங்கியதால் கைது முயற்சி கைவிடப்பட்டது. நீதிமன்ற ஆணைப்படி ஆலையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் போராட்டம் நடந்துவருகிறது. இதுவரை ஊழியர்களின் எந்தவிதமான கோரிக்கைகளுக்கும் செவிமடுக்கவில்லை. இதுகுறித்து செப்டம்பர் 28-ல் முதல்வரிடம் புகார்மனு கொடுக்கச்சென்ற ஏ.ஐ.டி.யூ.சி.வைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தோழர்களை போலீசார் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர்'' என்றார் அவர்.
யமஹா நிறுவனம் நேரடியாக அடக்கினால், ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் நிறுவனம் ஊதியத்தைக் குறைத்துத்தர தனிப்பட்ட பாணியைக் கையாள்கிறது. இதுபற்றிப் பேசிய காஞ்சி தீனன், ""இங்கு அதிக சம்பளம் வாங்கும் கார் உற்பத்தி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, இதன் தகவல் தொழில்நுட்பப் பிரிவான ஆர்.என்.டி.பி.சி.ஐ-ன் ஊழியர்கள் குறைவான சம்பளத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் -அதுவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக''’என்றார்.
பெயர்சொல்ல விரும்பாத தொழிலாளர் ஒருவர், ""இந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாடு அதிகாரியான டேவிட் ஜெயக்குமார் ஒரு சர்வாதிகாரி. மதரீதியாக செயல்படுவார். பவுன்சர்களை வைத்து தொழிலாளர்கள் தாக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. பன்னிரண்டாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில் டேவிட் ஜெயக்குமாரை மீறி ஒரு துரும்பும் அசையாது. ஒரு மரணம் உட்பட பல மர்மங்களுக்கு விடை இல்லை'' என்கிறார் விரக்தியுடன்.
ஊழியர்களின் வேலை உத்தரவாதம் குறித்து வழக்கறிஞர் அசோக்குமாரிடம் கேட்டபோது, ""குறிப்பிட்ட காலஅளவு பணிபுரிந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டியது கட்டாயம். ஊழியரின் குற்றம் நிரூபிக்கப்படாமல் சஸ்பெண்ட் செய்வது சட்டப்படி குற்றம். மேலும், தொழிலாளர்களிடம் வேலையை விட்டு நின்றுவிடுவதாக மிரட்டி எழுதி வாங்குவது கிரிமினல் குற்றம்''’என்றார் அழுத்தமாக.
ஊழியர்களின் தொடர் போராட்டம் பற்றி தொழிலாளர் நலத்துறை துணைஆணையர் விமலநாதனிடம் கேட்டால், ""பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முடியாத பட்சத்தில் லேபர் கோர்ட்டுக்குப் போகலாம்''’என்கிறார்.
ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியும் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கபில் எதிலும் தலையிடவில்லை. அவரை எத்தனைமுறை தொடர்புகொண்டாலும் உதவியாளரை மட்டுமே பேசவிடுகிறார்.
-அரவிந்த்