ந்துத்வ அமைப்புகள் திருப் பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோமென்ற மதவெறி முழக்கத் தோடு குறிவைத்த விவகாரத்தில் தற்போதுவரை திருப்பரங்குன்றம் பகுதி பதட்டமாக இருந்துவரும் சூழலில், தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபமேற்ற தர்கா நிர்வாகத் துக்கு ஆட்சேபணை ஏதுமில்லை எனக்கூறியதாக ஒரு போலியான கடிதத்தை வெளியிட்டு, சமூக வலைத்தளத்தில் இந்துத்வவாதிகள் பரபரப்பை ஏற்படுத்திவருகிறார்கள். 

Advertisment

இந்நிலையில், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா செகரட்டரி ஆரிப்கான், தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருப்ப தாகக் கூறினார். அவரிடம் விசாரித்தபோது, "தற்போதுள்ள பதட்டமான சூழலில், வரும் 21ஆம் தேதி, சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழா வருகிறது. அன்றைய தினம் தர்காவில் கொடியேற்றுவோம். அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி, இறுதி நாளில் சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, இந்து, முஸ்லீம் அனைத்துமத மக்களும் நேர்த்திக்கடனை செலுத்துவதாக மிக விமரிசையாக விழா நடக்கும். அதுபோல் இந்த முறையும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடக்குமா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது. தர்கா வாசலில் தீபமேற்றவிடாமல் செய்துவிட்டு இப்ப நீ மட்டும் சந்தனக்கூடு நடத்திடுவியா? என்று இந்து அமைப்புகள் மிரட்டல்விடத் தொடங்கிவிட்டார்கள்.

Advertisment

tpk1

திருப்பரங்குன்றத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். இதை சீர்குலைப்பதற் காக திட்டமிட்டு காய்நகர்த்துகிறார்கள். இப்படியெல்லாம் பிரச்சனை பூதாகரமாகு மென்று நினைக்கவில்லை. உயிர்ப்பயத்தில், எங்கள் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள், இங்கிருந்து வெளியூர்களுக்கு இடம்பெயரத் தயாராகிவிட்டார்கள். இது மிகுந்த மன வேதனையை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகையன்று இந்து அமைப்புகள் சிறிய அளவில் போராட்டம் செய்வதோடு முடிந்துபோகும். கார்த்திகை நிகழ்ச்சியில் முருகனுக்கு நாங்கள் சந்தனம் கொடுப்போம். அதேபோல், இந்து சகோதரர்களின் மாட்டுவண்டியில் தான் சிக்கந்தர் அவுலியாவின் சந்தனமும், அங்கு சாத்தக்கூடிய மாலைகளும் எடுத்துவரப்படும். இந்த ஒற்றுமையை சிதைக்கத்தான் சதி நடக்குதுன்னு புரியுது. 

தர்காவிற்கு சொந்தமான இடத்திலுள்ள எல்லைக்கல்லில் தீபமேற்ற இந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம.ரவிக்குமார் போட்ட வழக்கை கையிலெடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி, தர்கா தரப்பு நிர்வாகிகள் யாரிடமும் விசா ரணை நடத்தாமல், தர்கா அருகிலுள்ள தூணில் தீபம் ஏற்றலாமென உத்தரவிட்டுவிட்டார். இவ்விவகாரத்தில் எங்களுக்கு அவகாசமே வழங்கவில்லை. இந்நிலையில், அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குப் போக, நாங்களும் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். 

Advertisment

இந்நிலையில், தர்கா அருகிலுள்ள தூணில் தீபமேற்ற நாங்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையென்று ஒரு போலியான கடிதத்தை நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா போன்றோர் சமூக வலைத்தளத்தில் பதிவிடு கிறார்கள். அதில் தர்காவின் தலைவர் கையெ ழுத்து இல்லை, தர்கா முத்திரையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றத்தில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எவ்விதப் போராட்டத்திலும் இறங்க மாட்டோம். சட்டப் படியான நடவடிக்கைக்காக நீதிமன்றத்தையும், அரசையும் நம்பியுள்ளோம். எங்கள் அமைதி தான் அவர்களை உறுத்துகிறது. வம்புக்கிழுக்கப் பார்க்கிறார்கள்.

என் தாத்தாவிற்கு தாத்தா அலிகான் சையது காலத்திலிருந்து வழிவழியாக வரு கிறோம். தற்போது சிக்கந்தர் தர்காவின் செக ரட்டரியாக இருக் கிறேன். தர்காவிற்கு அருகில், பின்புறமுள்ள தூணை மையப்படுத்தி 2022ஆம் ஆண்டு ஒன்றிய தொல்லியல் துறையில்  தகவல் உரிமை சட்டத்தின்கீழ் விவரம் கேட்டு கேள்வி எழுப்பியிருந்தோம். அதன்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே  Geometrical trigonometry Station (GT Station) என்று அழைக்கப் படுகிற இரண்டு நில அளவைத்தூண் கற்கள், சுமார் 216 ஆண்டுகள் பழமையானவை என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட இரண்டு நில அளவைக்கல்லில் ஒரு கல் சிதைந் துள்ளது. நல்ல நிலையிலுள்ள நில அளவைக் கல்லில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டு மென மதவாத சக்திகள் மல்லுக்கட்டுகின்றன. அவை இரண்டும் நில அளவைக் கற்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சிதைந்த நில அளவைக்கல் இருந்த இடத்தில் பாறை யின் மீது வட்டமிட்டு நடுவில் ஒரு புள்ளி வைக்கப்பட்ட குறியீடு காணப்படுகிறது. 1899ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தில் வெளியிடப்பட்ட The Great Trigonometrical Survey of India, Volume XXIX நூலில், திருப் பரங்குன்றம் மலை, சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது நில அளவைக் கற்கள் என்பதை உறுதிசெய்கிறது. இந்த நூலின் நகல் சமூக வலைத்தளத்தில் டிஜிட்டல் வடிவில் கிடைக் கிறது. அதில் பக்கம் 298-ல், மதுரை மாவட் டம், திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதி சிக்கந்தர் மலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தொலைவுகளை Yards-ல் குறிப்பிட்டுள்ளனர். வஹழ்க்ள் என்றால் கெஜம் என்று நாம் அழைக்கிறோம். 1 கெஜம் 3 அடியாகும். 

ஆக, சிக்கந்தர் தர்காவுக்கு வடமேற்கில் 150 அடி தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென்கிழக்கில் 159 அடி தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில் மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது. இந்த நூலின் முகப்பு படத்தின் நகலையும், அந்நூலின் 298ஆம் பக்கத்தின் நகல் போன்ற ஆதாரங்களை வழக்கிற்கு சமர்ப்பித்துள்ளோம். தர்கா சார்பாக வழக்கறிஞர் மோகன் வாதாடுகிறார். மேலும், தர்கா வில் நடந்த நேர்த்திக்கடனுக் காக ஆடு, கோழி பலியிட்டு விருந்தளிக்கும் புகைப்படங் கள், அதேபோன்று, நேர்த்திக் கடனாக ஆடுகளை அறுத்து, கறி வெட்டிக்கொடுக்கும் பரம சிவம், பாண்டி போன்றோரின் வாக்குமூலம், அவர்கள் ஆடு அறுப்பது போன்ற புகைப்பட ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கவிருக்கிறோம்" என்றார். 

மேலும் அவர், "இந்த முறை நடக்கவுள்ள திருப்பரங் குன்றம் சிக்கந்தர் தர்காவின் சந்தனக்கூடு, எந்தவித அசம் பாவிதமும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டி ருக்கிறோம். தற்போது நடக்கும் மிரட்டல் சம்பவங்களை வைத்துப் பார்த்தால் அதுதான் எங்களுக்கு பயமாக இருக் கிறது. இப்ப அடுத்த பிரச் சினையாக கோரிப்பாளையம் தர்கா, இந்து கோயிலை இடித்துவிட்டுத்தான் கட்டப் பட்டுள்ளது என்று சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு "கோயிலை மீட்போம்' என்கிறார்கள். மதுரையை குறி வைத்திருக்கிறார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை" என்றார் கவலையாக. 

தமிழக அரசைத்தான் இஸ்லாமிய மக்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

___________________
அண்ணாச்சியின் அன்பளிப்பு! அகம் மகிழும் அருப்புக்கோட்டை!


tpk2

பொதுவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அரசியலுக்குள் வந்துவிட்டால் ‘மக்கள் மனதில் இடம் பிடித்தாகவேண்டும்’ என்ற தவிப்பு தானாக ஏற்பட்டுவிடும். 76 வயதிலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச் சந்திரன் அப்படியொரு தவிப்புடனே வாழ்ந்து வருகிறார்.  

இளம்வயதில் விருதுநகரில் தங்கக் கலசம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தில்  துடிப்புடன் செயல்பட்டவ ருக்கு,   28 வயதில் சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து எம்.எல்.ஏ. ஆனார். சாத்தூர், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை தொகுதிகள் மூலம்  9 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 6 முறை அமைச்ச ராகவும் இருந்துவரும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், அரசியலுக்கு அப்பாற்பட்டு தொகுதி மக்கள் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தி வருபவராக இருந்துவருகிறார்.  

அமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், தன் சொந்தச் செலவில் அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு வருடம்தோறும் நலத்திட்ட உதவிகள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தும்கூட, இந்த வழக்கத்தை அவர் கைவிட்டதில்லை. கடன் வாங்கியாவது நலத்திட்ட உதவிகளை வழங்கிவிடுவார். 

அரசியலில் நண்பர்களோ, எதிரிகளோ, யாராக இருந்தாலும், சந்திக்கும் தருணங்களில் எல்லாம்  முகம் மலர "வாங்க.. வாங்க.. நல்லா இருக்கீங்களா?'’என்று புன்சிரிப்புடன் வரவேற்கும் பண்புள்ளவர் என்பதால், தொகுதி மக்களும் வாஞ்சையாக  “"அண்ணாச்சி'’என்று உரிமையுடன் அழைத்து அந்த பந்தத்தைத் தொடர்பவர்களாகவே இருக்கின்றனர். 

தற்போது அருப்புக்கோட்டை தொகுதி முழுவதும் வார்டு, வார்டாக மக்களைச் சந்தித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட பரிசுப் பொருள் களை வழங்கிவருகிறார். அருப்புக்கோட்டை வாசிகளும் அவருடைய அன்பில் திளைக்கின்றனர்.   

மக்களிடம் செல்வதுதானே அரசியல்!

-அண்ணல்