"ஹலோ தலைவரே, நாடாளு மன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், டெல்லியின் அடாவடி டெக்னிக்குகளும் ஆரம்பித்துவிட்டன.''

Advertisment

"ஆமாம்பா, அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டு வர எந்த எல்லைக்கும் போக, பா.ஜ.க தயாராகிவிட்டதே?''

eps-ops

"உண்மைதாங்க தலைவரே, எங்கள் பக்கம் வந்தே தீரவேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலமே அ.தி.மு.க.வை நிர்ப்பந்தித்துப் பார்த்தார்கள். பிறகு, நீங்கள் எங்கள் அணிக்கு வந்தால், எங்க ளுக்கு 8 சீட்டுக்களை மட்டும் கொடுத்துவிட்டு, மற்ற சீட்டுகளை நீங்களே நிர்வகித்துக்கொள்ள லாம். இல்லை எனில் உங்கள் கட்சியே இல்லாமல் போய்விடும் என்கிற ரேஞ்சுக்கு பா.ஜ.க. அதிரடி மிரட்டல்களில் இறங்கிவிட்டதாம். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே மீடியேட்டராக ஓடி ஓடிப் பேசிய த.மா.கா. வாசன், ஒரு கட்டத்தில் களைத்துப்போய், எடப்பாடி எதற்கும் மசிய மறுக்கிறார், அதனால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று பா.ஜ.க.விடம் சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது டெல்லி, ராஜ்பவன் மூலமும் அ.தி.மு.க. தரப்பை கடுமையாக மிரட்டி அனுப்பியிருக்கிறதாம்.''

Advertisment

"என்னப்பா சொல்றே? கடந்த 10 ஆம் தேதி கூட எடப்பாடி கவர்னரை சந்தித்து தி.மு.க. அரசு மீது புகார் வாசித்ததாக செய்தி வந்ததே?''

"ஆமாங்க தலைவரே, கவர்னரை எடப்பாடி, சந்தித்தது உண்மைதான். ஆனால், அவர் ராஜ்பவனுக்கு புகார் சொல்வதற்காகப் போகவில்லை. டெல்லி மூலம் ராஜ்பவன் அழைத்ததால்தான் தனது சகாக்களான மாஜி மந்திரிகள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்களோடு எடப்பாடி அங்கே போயிருக்கிறார். இந்த சந்திப்பே தங்கள் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.வை கடைசி தடவையாக எச்சரித்து மிரட்ட, டெல்லி செய்த ஏற்பாடுதான் என் கிறார்கள். அந்த சந்திப் பின்போது, பா.ஜ.க. கூட்டணிக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்பது டெல்லியின் விருப்பம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு எடப்பாடி, "எங்கள் நிலைப்பாட்டை அமித் ஷாவுக்கே தெரிவித்துவிட் டோம்' என்று சொல்லியிருக்கிறார். உடனே, "உங்க ளுக்கு நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை. உங்கள் மீதும் உங்கள் கட்சியினர் மீதும் கடுமையான ஊழல் புகார்கள் இருக்கின்றன. கொடநாடு விவகாரமும் உங்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல; இப்போது நினைத்தாலும் டெல்லியால் உங்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியும்' என்றும் எச்சரிக்கைக் குரலில் மிரட்ட லாக சொல்லப்பட்டிருக் கிறது. இதனால்தான் இறுக்கமான முகத்தோடு எடப்பாடி தரப்பு ராஜ்பவனில் இருந்து வெளியேறியதாம்.''”

rr

Advertisment

"இரட்டை இலையை முடக்கும் முயற்சியிலும் பா.ஜ.க. தீவிரம் காட்ட ஆரம்பிச்சிடுச்சே?''

"ஆமாங்க தலைவரே, டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் அப்படித்தான் சொல்கின்றன. தங்கள் கூட்டணியில் சேரமறுக்கும் அ.தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருக்கும் டெல்லி, இரட்டை இலையை முடக்க, பல்வேறு திட்டங்களில் இறங்கியிருக்கிறதாம். இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். அதேபோல், தேர்தல் சின்னத்திற்கான விண்ணப்பப் படிவத்தில், எடப்பாடி கையெழுத்திடக்கூடாது என்கிற எதிர்ப்பு மனுவும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த மனுவை சமாளிப்பதற்காக, ஈரோடு இடைத்தேர்தலின் போது, சின்னத்துக்கான படிவத்தில் கட்சியின் அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன் கையெழுத்து போட்டது போல், இப்போதும் அவரே போடட்டும் என்கிற முடிவை எடப்பாடி எடுத்திருக்கிறாராம். எனினும், மேற்கண்ட வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடக்கும்போது, தங்கள் வித்தைகளைக் காட்ட பா.ஜ.க. தயாராக இருக்கிறதாம். இது எடப்பாடி தரப்பை ரொம்பவே பதட்டத்தில் தத்தளிக்க வைத்திருக்கிறதாம்.''”

"அதெல்லாம் இருக்கட்டும்பா, தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் தி.மு.க., தன் தொகுதி உடன்பாடுகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் மனம் கோணாதவாறு, தொகுதி உடன்பாட்டை சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் முடித்திருக்கிறது தி.மு.க.. கடந்த 2019 தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட எவருக்கும் குறைவான தொகுதியைக் கொடுக்காமல், அவர்களின் மனதை அறிவாலயம் குளிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் 9 தொகுதியுடன் பாண்டிச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது காங்கிரஸ். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் தலா 2 சீட்டுகளை வாங்கியுள்ளனர். ம.தி.மு.க., முஸ்லீம் லீக், கொ.ம.தே.க, ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. கூட்டணியின் இந்த இணக்கமான தொகுதிப் பங்கீடு, அதன் வலிமையை உயர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.''”

rr

"நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா பதவி என்று ஒப்பந்தம் போடப் பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, கமல் தரப்பு, தி.மு.க.விடம் 2 லோக்சபா சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது. ஆனால், தி.மு.க. தலைமையோ, ஒரு லோக்சபா சீட். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றது. கமலோ, நாங்கள் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றார். ஒரு கட்டத்தில், இதற்கும் தி.மு.க. தலையை அசைத்தது. அதேபோல், கோவை, தென்சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நான்கில் ஒரு தொகுதியை கமல் கேட்க, சென்னையில் தி.மு.க.தான் நிற்கும். மற்ற தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளிடம் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஒதுக்க சம்மதித்தால் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றது தி.மு.க. ஆனால் கூட்டணிக் கட்சிகள், அந்த மூன்றையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதனால் அப்செட்டான கமலிடம், மேலும் சில தொகுதிகளை தி.மு.க. சுட்டிக்காட்டி, இவற்றில் ஒன்று ஓ.கே.வா? என்றது. ஆனால் கமலுக்கு அந்தத் தொகுதிகளில் திருப்தி ஏற்படவில்லை. அதனால், உங்களுக்கு சிக்கலே இல்லாமல் ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குகிறோம் என்றது தி.மு.க. வேறு கூட்டணியில் சேர விரும்பாத கமல், இதற்கு ஓகே. சொல்லி, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டிருக்கிறார் என்கிறார்கள்.''”

"வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் தி.மு.க. நடத்திவிட்டதே?''”

rr

"வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை ஒரே நாளில் நடத்தி முடித் திருக்கிறது தி.மு.க. இதிலும் அறிவாலயத் தரப்பு ஸ்பீடுதான். தி.மு.க.வின் நேர்காணலை கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் நடத்தி இருக்கிறார்கள். இந்த முறை நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின்தான் அதிக கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றிருக்கிறார். அப்போது பலரும், நம் கூட்டணியைத் தவிர எவரும் வெற்றிபெற முடியாது என்றே தெம்பாக சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணமாக, தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையே அவர்கள் குறிப்பிட்டார்களாம். சில தொகுதிகளின் நேர்காணலின்போது முக்கியமானவர்கள் தென்படாதபோது ஸ்டாலினே, அவர் எங்கே... ஆளைக் காணோம்? என்று விசாரித்திருக் கிறார். குறிப்பாக கடலூருக்கான நேர்காணலின் போது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன் இல்லாததைக் கண்டு, அவரை ஸ்டாலின் தேட, அமைச்சர் எம்.ஆர்.கே., அவர் பணம் கட்டவில்லை, அவருக்காக சிலர் கட்டியுள்ளனர். அதனால் அவர் வரவில்லை என்றாராம். நிறைவாகப் பேசிய ஸ்டாலின், "அனைத்துத் தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்துக்கொண்டு, அனைவரும் உண்மையாக உழைக்கவேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்.''”

"காங்கிரஸில் புதியவர்கள் களமிறக்கப் படலாம் என்கிற டாக் அடிபடுகிறதே?''”

"காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக் கப்பட்டிருக்கும் நிலையில், அந்த சீட்டுகளுக் கான போட்டியும் அதிகரித்திருக்கிறது. காங்கிரஸின் சிட்டிங் எம்.பி.க்கள், தங்கள் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு விடாப்பிடியாக முண்டியடிக்கிறார்கள். ஆனால், காங்கிரஸின் மாநில நிர்வாகிகளோ, 10-ல் 5 தொகுதிகளி லாவது புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராகுல்காந்திக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். அதேபோல், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தனது சிபாரிசில் 5 பேருக்கு சீட் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். புதியவர்களுக்கு வாய்ப் பளிக்காவிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள் என்ற ரீதியில் ராகுலுக்கு இங்கிருந்து ஏற்கனவே ஒரு ரிப்போர்ட் போயிருக்கிறதாம். எனவே, இந்தக் கோரிக்கை குறித்து ராகுல் ஆலோசித்துவருகிறார் என்கிறது சத்தியமூர்த்திபவன் தரப்பு.''”

"நெல்லை மாவட்ட காங்கிரஸில் சலசலப்பு கேட்கிறதே?''”

"மாநில காங்கிரஸின் புதிய தலைவரான செல்வப்பெருந்தகை, மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். அதன்படி, அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஆலோசனைக் கூட்டத்தை எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. காங்கிரஸில் எந்தக் கூட்டம் நடந்தாலும் மாவட்ட தலைவர்களை தவறாமல் அழைக்கவேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்த நிலையிலும், அங்குள்ள மாவட்டத் தலைவர் ஜெயக் குமாரை ரூபி மனோகரன் கூட்டத்திற்கு அழைக்கவில்லையாம். இருப்பினும் மாநில தலைவர் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால், அழைப்பில் லாமலே அதற்குப் போயிருக்கிறார் ஜெயக்குமார். எனினும் அவரை ரூபி ஆதரவாளர்கள் உள்ளே விடமறுத்துத் துரத்த, அவர் வேதனையோடு திரும்பிவிட்டாராம். இது தொடர்பான புகார்கள் இப்போது டெல்லிவரை புகைகிறதாம்.''”

"பா.ம.க.வில் என்னதான் நடக்கிறது?''”

"பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச பா.ம.க. அன்புமணி டெல்லி சென்றுவிட்டார் என்றும், இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துக்கொண்டது என்றும் அதற்கு 8 சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. தைலாபுரத் தரப்பில் அன்புமணி மட்டுமே பா.ஜ.க. கூட்டணி வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறாராம். ஆனால் பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸோ, பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் வெற்றிக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்று சொல்லி வந்ததோடு, அ.தி.மு.க. தரப்போடு பேச்சுவார்த்தை யையும் ஏறத்தாழ நடத்தி முடித்திருக்கிறாராம். இந்நிலையில் சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சர்களான பி.கே.சிங், மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர், ஓ.பி.எஸ்.ஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்றனர். அவர் தரப்புக்கு சென்னையில் ஒரு தொகுதி, தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் ஒரு தொகுதி, தென் மண்டலத்தில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 4 தொகுதிகளைத் தருவதாகப் பேசப்பட்டிருக்கிறதாம்.''”

"தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய் திருக்கிறாரே?''”

rr

"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அருண்கோயல் திடீரென ராஜினாமா செய்து, பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரும் இரண்டு ஆணையர்களும் இருப்பார்கள். இரண்டு ஆணையர்களில் கோயல் தவிர மற்றொரு பதவி காலியாகவே இருந்தது. இப்போது கோயலும் ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் ராஜீவ்குமார். அவருக்கும் அருண்கோயலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களால்தான், கோயல் ராஜினாமா செய்ததாகக் கூறுகிறார்கள். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விசயத்தில் பிரதமர் தலையிடலாம் என்று புதிதாக நாடாளு மன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் அடிப் படையில், பிரதமர் மோடி இந்த இரண்டு காலி இடங்களுக்கும், தன் விருப்பப்படி புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். இந்த சூழலில் இந்தியா தேர்தலை சந்திக்க இருப்பது எதிர்க்கட்சிகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறதாம்.''

rr

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக் கறேன். தமிழகத் தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமாரின் பதவிக் காலம் மார்ச் 9ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. இவருக்கு பதில் புதிய ஆணையர் ஒருவரை நியமிக்க, இந்நாள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் பெயரை பரிந்துரைத்து, முதல்வரிடம் கோப்பினை அதிகாரிகள் அனுப்பி யிருக்கிறார்கள். இந்த நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளராக இருக்கும் ஜோதிநிர்மலா சாமியை அந்தப் பதவியில் அமர்ந்த... கோட்டையில் உள்ள முக்கிய அதிகாரிகள் இருவர் தீவிரமாக காய் நகர்த்திவருகின்றனர். ''”