"ஹலோ தலைவரே… நீட் தேர்வு உயிர்ப்பலி ஆட்சி மாறியும் தொடருகிற சூழலில், சட்ட மன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து பல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியிருக்காரு.''”
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆதரவில்லாம நிறைவேறாதே? பா.ஜ.க. நீட்டுக்கு ஆதரவாகத்தானே இருக்குது.''”
"முதல்வரின் டெல்லி விசிட்டில், ஒன்றிய அரசிடம் இதை வலியுறுத்துவார்னும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமரை சந்திக்கிற வாய்ப்பு இருக்குதுன்னும் சொல்றாங்க. செப்டம்பர் 15-ல் தி.மு.க.வின் முப்பெரும் விழாவை சென்னையில் தொடங்கிவச்சிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதற்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அங்கே கட்டப்பட்டு வரும் தி.மு.க. அலுவல கத்தை தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் திறந்து வைக்க அவர் எண்ணியிருந்தார். ஆனால் அங்கே கட்டிடவேலை இன்னும் முழுமை பெறலையாம். அதோட சமூகநீதி நாளாக பெரியார் பிறந்த நாளை முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், சென்னையிலேயே இருந்து நடத்தனும்னு பெரியாரிஸ்டுகள் சிலர் கேட்டுக்கிட்டாங்களாம். அதனால், டெல்லிப் பயணம் தள்ளிப் போகலாம். அவர் டெல்லி போகும்போது, நீட் விவகாரமும் டெல்லி போகும்.''
"கலைஞரின் மூத்த மகளும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அக்காவுமான செல்வியின் பேத்தி திருமணம் சிம்பிளாவும் சிறப்பாவும் நடந்திருக்கே...''”
"செல்வியின் பேத்தி ஓவியா ஜோதிமணிக்கும், சாய் சந்தீப்புக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. குடும்ப சகிதமாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அங்கு மு.க.அழகிரி வருவதாகத் தகவல் வந்தது. ஸ்டாலினையும் அழகிரி
"ஹலோ தலைவரே… நீட் தேர்வு உயிர்ப்பலி ஆட்சி மாறியும் தொடருகிற சூழலில், சட்ட மன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து பல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியிருக்காரு.''”
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆதரவில்லாம நிறைவேறாதே? பா.ஜ.க. நீட்டுக்கு ஆதரவாகத்தானே இருக்குது.''”
"முதல்வரின் டெல்லி விசிட்டில், ஒன்றிய அரசிடம் இதை வலியுறுத்துவார்னும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமரை சந்திக்கிற வாய்ப்பு இருக்குதுன்னும் சொல்றாங்க. செப்டம்பர் 15-ல் தி.மு.க.வின் முப்பெரும் விழாவை சென்னையில் தொடங்கிவச்சிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதற்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அங்கே கட்டப்பட்டு வரும் தி.மு.க. அலுவல கத்தை தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் திறந்து வைக்க அவர் எண்ணியிருந்தார். ஆனால் அங்கே கட்டிடவேலை இன்னும் முழுமை பெறலையாம். அதோட சமூகநீதி நாளாக பெரியார் பிறந்த நாளை முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், சென்னையிலேயே இருந்து நடத்தனும்னு பெரியாரிஸ்டுகள் சிலர் கேட்டுக்கிட்டாங்களாம். அதனால், டெல்லிப் பயணம் தள்ளிப் போகலாம். அவர் டெல்லி போகும்போது, நீட் விவகாரமும் டெல்லி போகும்.''
"கலைஞரின் மூத்த மகளும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அக்காவுமான செல்வியின் பேத்தி திருமணம் சிம்பிளாவும் சிறப்பாவும் நடந்திருக்கே...''”
"செல்வியின் பேத்தி ஓவியா ஜோதிமணிக்கும், சாய் சந்தீப்புக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. குடும்ப சகிதமாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அங்கு மு.க.அழகிரி வருவதாகத் தகவல் வந்தது. ஸ்டாலினையும் அழகிரியையும் பேச வச்சிடணும்னு செல்வியும் உறவுகளும் ஆசைப்பட்டிருக்காங்க. முதல்வர் ஸ்டாலின் தன்னோட அலுவல் காரணமா சீக்கிரமா கிளம்பிட்டாரு. எதிர்பார்த்த சந்திப்பு நடக்கலை.”
"எதிர்பாராமல் நடப்பது தானே அரசியலில் விறுவிறுப்பு''”
"உண்மைதாங்க தலைவரே, ரெய்டில் சிக்கிய முன்னாள் மந்திரி வேலுமணி தொடர்பான கணக்கு வழக்குகளை, நூல் பிடிச்சிப் போய்க்கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகளுக்கு, அவர் பிரபல கம்பெனி மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய்களை டிரான்சாக்ஷன் செய்த விவகாரம் தெரியவந்திருக்கு. ஆதாரங்களை யும் உடனே எடுத்துட்டாங்க. இந்த நிறுவனம், ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரொம் பவும் செல்வாக்கோடு இருந்த நிறுவனமாம். கடந்த எடப்பாடி தலைமையிலான ஆட்சிக் காலத் தில் வேலுமணியை கைல வச்சிக் கிட்டு, சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் குப்பையை அள்ளும் காண்ட்ராக்ட்டுகளை எடுத்திருந்ததாம். இப்போது வேலுமணியால் இந்த நிறுவனமும் பெரும் சிக்கலில் சிக்கி இருக்குதாம்.''”
"ஓ.பி.எஸ் மீது கோபத்தில் இருக்காராமே எடப்பாடி?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் எடப்பாடியை சந்தித்து நீண்ட நேரம் விவாதிச் சிருக்கார் மாஜி தங்கமணி. அப்போது அவரிடம் எடப்பாடி, கொடநாடு விவகாரத்தை எனக்கு எதிராக தூண்டிவிடுவதே ஓ.பி.எஸ்.தான்னு புலம்பி யிருக்கார். அதுக்கு தங்கமணி, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னா, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்தாதான் உண்டுன்னு சொல்லி யிருக்கார். எடப்பாடியோ, நம்ம கட்சிக்குள் சசிகலா வந்துவிட்டால், கட்சியின் அதிகாரம் முழுதையும் அந்தம்மா பிடுங்கிக்கும். அப்புறம், முதற்கட்டமா என்னையும், எனக்கடுத்து உங்களையும்தான் அந்தம்மா தலையெடுக்க முடியாதபடி பண்ணிவிடும். நமக்கு நாமே கொள்ளி வச்சிக்க ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.''”
"கொடநாடு விவகாரத்தில் சசிகலா வாக்குமூலம் தரப்போறார்னு செய்தி வந்ததே?''”
"செய்தி வந்தது உண்மைதான். ஆனால் இப்போது அவர் மனநிலை வேறுமாதிரி இருக்கிறதாம். கொடநாடு கொலை -கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி வசமாக சிக்கவேண்டும் என்று நினைக்கிறாராம் சசிகலா. கொடநாடு விவகாரத்தில் நடந்ததை எல்லாம், சிறையில் இருந்தபோதே அவர் அறிந்து கொதிப்படைந்தாராம், அதனால், விசாரணையின் நெருக்கத்தில் எடப்பாடி மீதான வழக்கை டைட் பண்ணும் வகையில் அவர் வாக்குமூலம் கொடுப்பாராம். அதேபோல் 16-ஆம் தேதி தஞ்சையில் நடக்கும் தினகரன் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கும் சசிகலா, ‘விசேஷத்துல தலையைக் காட்டிட்டு, உடனே கிளம்பிடுவேன்னு சொல்லி இருக்காராம்.''”
"வேற தகவல்?''”
"கடந்த வாரம் சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான அறையில், எம்.எல்.ஏ.க்கள் 18 பேரில், பெரும்பலானவங்க இருந்தாங்க. அப்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ரூபி மனோகரனுக்கும் ராஜேஷ்குமாருக்கும் இடையே செம வாக்குவாதம் நடந்திருக்கு. அதாவது குறிப்பிட்ட ஒரு பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக தொடங்கிய பேச்சு வார்த்தை, தகராறா மாறியிருக்கு. அப்ப ரூபி, தெலுங் குப் பட வில்லன் ஸ்டைலில் டயலாக் அடிக்க, பதிலுக்கு ராஜேஷ்குமாரும் பஞ்ச் டயலாக் அடிக்க, இதைப் பார்த்துக்கிட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரும் பகீராயிட்டாங்களாம்.''”
"சட்டமன்றத்தில் காங்கிரசுக்குள் சுவாரஸ்யமான உரசலும் நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, சட்டமன்றத்தில் எந்த விவாதமா இருந்தாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி எழுந்து பதில் சொல்லிக்கிட்டு இருந் தார். இதனால் எரிச்ச லான அக்கட்சியின் சட்டமன்றத் தலை வரான செல்வப் பெருந்தகை, நான்தானே இங்கு தலைவர். என்னைப் பேச வே விடமாட்டேன் என்கிறீர் களே. நான், 2000 ஆண்டு காலமாக ஒடுக்கப் பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்திருக்கிறேன். என்னையும் பேசவிடுங்கன்னு சொல்லியிருக் கார். அதற்கு விஜயதாரணி, நீங்க 2000 ஆண்டுன்னா, நான் 20 ஆயிரம் 30 ஆயிரம் ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பெண் இனத்தைச் சேர்ந்தவள். அந்த பாவப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக என்னைப் பேச விடுங்கள்னு சொல்லியிருக்காரு. கட்சிகளுக்கிடையிலான விவாதத்துக்கிடையே கட்சிக் குள்ளான இந்த விவாதம் சுவாரஸ்யமா இருந்திருக்கு.''”
"அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. ஒருத்தர், மார்வாடி ஒருவரிடம் அடியாள் வேலை பார்க்கிறாராமே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னையைச் சேர்ந்த அந்த மார்வாடியிடம், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களின் சொத்துக்களை அடமானம் வைத்து, கடன் வாங்கி வருகிறார்களாம். அதில் சிலரால் குறித்த நாட்களுக்குள் தவணை கட்டமுடியாமல் போனால், மார்வாடிக்காக அவர்களிடம் வரிந்துகட்டுபவர் அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.வான, தி.நகர் சத்யாதானாம். அவரது அதட்டல் உருட்டலுக்கு பயந்து சம்பந்தப்பட்டவர்கள் வேறுபக்கம் கடன் வாங்கியாவது பணத்தை செட்டில் செய்துவிடு கிறார்களாம். ஆனாலும், மாஜி எம்.எல்.ஏ.வின் இதுபோன்ற அடா வடிகளை, உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறதாம்.''”
"புதிய கவர்னர் நியமனம் பற்றி தனி கட்டுரை நம்ம நக்கீரனில் வந்திருக்கு. உன்கிட்ட ஏதாவது தகவல் இருக்குதா?''”
"பன்வாரிலால் புரோஹித், அடிப்படையில் அரசியல்வாதி யாகவும் பத்திரிகையாளராகவும் இருந்தவர். இன்னும் சில மாதங்களில் பஞ்சாப்பில் தேர்தல் வரவிருப்பதால், அவர் அங்க இருந்தா தங்களுக்கு வசதியாக இருக்கும்ன்னுதான், பஞ்சாபுக்கு மாற்றியிருக்குது டெல்லி. அதேபோல், தமிழகத்துக்கு கவர்னராக அனுப்பப்பட்டிருக்கும் ரவீந்திர நாராயண் ரவி என்கிற ஆர்.என்.ரவி, பீஹாரைச் சேந்தவர். அடிப்படையில் அவர் ஒரு காவல் துறை அதிகாரி. ஐ.பி.யில் இருந்தவர். அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான இவர், அமித்ஷாவின் ரிமோட்டுக்கு ஏற்ப செயல்படக்கூடியவராம். ஆடம்பரப்பிரியரான அவர், ஸ்ட்ரிக்ட் டாவும் நடந்துக்கக் கூடியவராம். டெல்லியின் மைண்ட் வாய்ஸுக்கு ஏற்ப முடிவெடுக்கக் கூடியவராம். அதனால், புதுவை அரசின் சுதந்திரமான செயல்களுக்கு இடைஞ்சலா தமிழிசையை கவர்னராக உட்கார வச்சதுபோல், ஒன்றிய அரசின் சர்வதிகாரப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஸ்டாலினுக்கு, செக் வைக்கத்தான் அவரை இங்கே அனுப்பி வைத்திருக்கு மோடி அரசுன்னு சொல்றாங்க...''
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். ஆபாச சாட்டிங் விவகாரத்தால் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் பதவியை இழந்து, அசிங்கப்பட்டு, வெளியே தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த கே.டி.ராகவன், இப்ப கட்சிக்குள் நடக்கும் சலசலப்பைப் பார்த்து தைரியமாயிட்டாராம். காரணம், மாநிலத் தலைவரான அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்டிருந்த பவரை டெல்லி, பிடுங்கிடிச்சி. அதனால் மாநிலப் பொறுப்பாளர்களைக் கூட நியமிக்கமுடியாத அளவுக்கு ஆயிட்டார். இதை கவனிச்ச ராகவன், ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் 9-ந் தேதி சங்கரமடத்துக்குப் போயிருக்கார். நேரே விஜயேந்திரரிடம் போய், என்னை மட்டும் சதிவலையில் சிக்கவச்சிட்டாங்க. எனக்கு பா.ஜ.க.வில் பழைய பதவி கிடைக்கணும்னு சொல்லியிருக்கார், அதனால், சங்கரமடம், கே.டி.ராகவனுக்காக டெல்லியிடம் பேசும் முயற்சியில் இருக்குதாம்.''”