ஆயிரம்விளக்கு! மும்முனைப் போட்டியில் முந்தும் டாக்டர்!

tt

மு.க.ஸ்டாலின் 4 முறை வென்ற தொகுதி என்பதால் தி.மு.க.வின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம்விளக்கில் அ.தி.மு.க.வும் 4 முறை வெற்றிபெற்றிருக்கிறது. தற்போது அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க. வேட்பாளராக குஷ்பு நிற்பதால் தேசிய அளவில் கவனிக்கக்கூடிய தொகுதியாக மாறியிருக்கிறது.

தி.மு.க. சார்பில் கலைஞருக்கு மிக நெருக்கமான பேராசிரியர் நாகநாதனின் மகனும் கலைஞரின் டாக்டருமான எழிலன் களமிறக்கப் பட்டிருக்கிறார். "இளைஞர் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம் சமூகப் பணிகளை தமிழகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிறார் எழிலன்

ஆயிரம்விளக்கு தொகுதியின் கட்சி சீனியர்களுக்கு இம்முறையும் சீட் இல்லையா என்ற ஆரம்பக்கட்ட அதிருப்திகள் மெல்லத் கரைந்து, பகுதிச் செயலாளர்கள் அன்புதுரை, அகஸ்டின்பாபு இருவரின் மேற்பார்வையில் எழிலனை ஜெயிக்க வைக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள் உடன்பிறப்புகள். அத்துடன், மு.க.தமிழரசு. தயாநிதிமாறன் எம்.பி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஸ்டாலின் நண்பர் ராஜாசங்கர் ஆகியோர் தொடர்ச்சியான கண்காண

மு.க.ஸ்டாலின் 4 முறை வென்ற தொகுதி என்பதால் தி.மு.க.வின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம்விளக்கில் அ.தி.மு.க.வும் 4 முறை வெற்றிபெற்றிருக்கிறது. தற்போது அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க. வேட்பாளராக குஷ்பு நிற்பதால் தேசிய அளவில் கவனிக்கக்கூடிய தொகுதியாக மாறியிருக்கிறது.

தி.மு.க. சார்பில் கலைஞருக்கு மிக நெருக்கமான பேராசிரியர் நாகநாதனின் மகனும் கலைஞரின் டாக்டருமான எழிலன் களமிறக்கப் பட்டிருக்கிறார். "இளைஞர் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம் சமூகப் பணிகளை தமிழகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிறார் எழிலன்

ஆயிரம்விளக்கு தொகுதியின் கட்சி சீனியர்களுக்கு இம்முறையும் சீட் இல்லையா என்ற ஆரம்பக்கட்ட அதிருப்திகள் மெல்லத் கரைந்து, பகுதிச் செயலாளர்கள் அன்புதுரை, அகஸ்டின்பாபு இருவரின் மேற்பார்வையில் எழிலனை ஜெயிக்க வைக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள் உடன்பிறப்புகள். அத்துடன், மு.க.தமிழரசு. தயாநிதிமாறன் எம்.பி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஸ்டாலின் நண்பர் ராஜாசங்கர் ஆகியோர் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தெருப்பிரச்சாரங்கள் மற்றும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிக்கும் டாக்டர் எழிலன், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளையும் ஸ்டாலினின் 7 உறுதி மொழிகளையும் சொல்லி ஆதரவு திரட்டுகிறார். எழிலனின் தந்தை மற்றும் தாயார் ஒரு அணியாகவும், எழிலனின் மனைவி ஒரு அணியாகவும் பிரிந்து தொகுதிவாசிகளை சந்திக்கின்றனர்.

பிரச்சாரங்களில் பா.ஜ.க.வை விமர்சிப்ப தைக் குறைத்து, தொகுதியின் பிரச்சினைகளை மட்டுமே மக்களிடம் எழிலன் எடுத்துச் சொல்வது எடுபடுகிறது. அவரிடம் பேசியபோது, ’’""தொண்டர்களும் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைக்கின்றனர். சமுகசெயற்பாட் டாளரான நான், முன்பு சொல்கிற இடத்தில் இருந்தேன். இப்போ, செய்கிற இடத்திற்கு வந்துள்ளேன். இதனை மக்கள் அங்கீகரிப்பார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எனக்கு வெற்றியைத் தேடித்தரும்''’என்கிறார்.

tt

இளைஞர் இயக்கத்தின் கடவுள் மறுப்பு, ஆ.ராசாவின் எடப்பாடி பற்றிய ஒப்பீடு ஆகிய வற்றை தி.மு.கவுக்கு எதிராகப் பெண்களிடம் சேர்க்கும் வேலையை எதிர்த் தரப்பு மேற் கொண்டிருப்பதை களத்தில் காண முடிகிறது. இந்த சவாலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

குஷ்புவுக்கு தி.மு.க. மற்றும் காங்கிரசில் இருந்தபோது கிடைக்காத வாய்ப்பு பா.ஜ.க.வில் இணைந்ததும் கிடைத்திருப்பதால் முனைப்பாக பிரச்சாரம் நடைபெறுகிறது. சினிமா பிரபலம், பெண்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர் என்ற இமேஜுடன் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தொகுதியின் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தேர்தல் கால யுக்திகளை பயன்படுத்துவது குஷ்புக்கு வலிமை சேர்க்கிறது. மனைவியின் வெற்றிக்காக ராப்பகலாக சுழன்றுகொண்டிருக்கிறார் குஷ்புவின் கணவர் சுந்தர் சி.

குஷ்புவின் பிரச்சாரத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கொடிகளைவிட பா.ஜ.க. கொடி அதிகம் பறக்கிறது. பிராமணர்கள் உள்ளிட்ட உயர் வகுப்பினர் மற்றும் மார்வாடிகளிடம் பா.ஜ.க. ஆதரவு அதிகமிருக்கிறது. 40 சதவீதம் இருக்கும் தலித் சமூகத்தினரின் ஆதரவைப் பெற இறுதிக் கட்ட முயற்சியில் குதித்துள்ளார் குஷ்பு.

அவரிடம் பேசியபோது, ""இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் செய்யாத மக்கள் நலன்களுக் கான திட்டங்களை பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார். தி.மு.க.வுக்கு வாக்களித்து தொகுதி மக்கள் சோர்வடைந்து விட்டனர். மக்களுக்கு உண்மையாக உழைக்க நான் வந்துள்ளேன். நிச்சயம் எனக்குத்தான் வெற்றி'' என்கிறார் உறுதியாக. குஷ்பு பிரச்சாரத்துக்கு வரும்போது மட்டும் கூட வருகிற அ.தி.மு.க., பா.ம.க.வினர் அதன்பிறகு ஓடி ஒளிந்துகொள் வது குஷ்புவுக்கு மைனஸாக இருக்கிறது.

தி.மு.க. மற்றும் குஷ்புவுக்கு எதிராக மல்லுக் கட்டுவதில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதிக்குள் பரபரப்பாக தெரிகிறார். தொகுதியின் 239 பாகங்களிலும் அ.ம.மு.க. கமிட்டி அமைத்து களப் பணியாற்றுகிறது அ.ம.மு.க. வன்னியர் சமூகத்தை சேர்ந்த வைத்தியநாதன் தனது கட்சியுடன் தே.மு.தி.க., ஒவைசி கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகியவை கூட்டணியில் இருப்பதால் முஸ்லிம் வாக்குகளை ஈர்ப்பதில் முனைப்பு காட்டுகிறார்.

வைத்தியநாதனிடம் நாம் பேசியபோது,’’ ""போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை, சுகாதாரச் சீர்கேடு என ஏகப்பட்ட அடிப்படை பிரச்சினைகள்தான் மக்களை பயமுறுத்துகிறது. இவைகளை தீர்க்க இதுவரை தி.மு.க.-அ.தி.மு.க. எதையும் செய்யவில்லை; குஷ்பு எங்களுக்கு போட்டியாளர் இல்லை. தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் நேரடி போட்டி. தேர்தலுக் குப் பிறகு மத்தியில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளும் என்பதை சிறுபான்மை மக்களிடமும், பா.ஜ.க.-அ.தி.மு.க. அதிருப்தியிலுள்ள நடுநிலை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் வெற்றி எனக்குத் தான்''‘என்கிறார் வைத்தியநாதன்.

இந்த முக்கோண மோதலில் ம.நீ.ம.வும், நாம் தமிழர் கட்சியும் தொகுதிக்குள் பெரிதாக ஆளுமை செலுத்த முடியவில்லை. குஷ்புவின் வெற்றியை பா.ஜ.க. தேசிய தலைமை எதிர்பார்ப்ப தால் ஆயிரம்விளக்கிலும் சத்தமில்லாமல் பதட்டம் உருவாகி வருகிறது. இருப்பினும் "தி.மு.க. வின் கோட்டை என்பதை டாக்டர் எழிலன் மீண்டும் நிரூபிப்பார்' என்பதே கள நிலவரம்!

-இரா.இளையசெல்வன்

nkn030421
இதையும் படியுங்கள்
Subscribe