Advertisment

தூத்துக்குடி... ஜெ. மர்ம மரணம்... அடுத்து கொடநாடு கொலை வழக்கு? அதிர்ச்சியில் எடப்பாடி!

ss

றுமுகசாமி கமிஷன், அருணா ஜெகதீசன் ஆகிய ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீது, அடுத்த ஆயுதத்தை தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

eps

அதில் முக்கிய இடம் பெறுவது கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன. திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இந்த ரவுடிகள், சசிகலாவின் உத்தரவுக்கேற்றவாறு ராமஜெயத்தை கொலை செய்தார்கள் என்பதை உறுதிசெய்ய இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது என்க

றுமுகசாமி கமிஷன், அருணா ஜெகதீசன் ஆகிய ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீது, அடுத்த ஆயுதத்தை தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

eps

அதில் முக்கிய இடம் பெறுவது கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன. திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இந்த ரவுடிகள், சசிகலாவின் உத்தரவுக்கேற்றவாறு ராமஜெயத்தை கொலை செய்தார்கள் என்பதை உறுதிசெய்ய இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

இந்த விசாரணையை இறுதி செய்ய திருச்சிக்கு வரும் ஷகில்அக்தர் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் இருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என்று சொல்லப்படுகிறது. சாமி ரவி தரப்பில் "எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ராமஜெயம் கொலை நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்' என பதில் கூறுகிறார். நக்கீரன்தான் என்னை இந்த கொலைவழக்கில் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகிறது என அலறிய அவரிடம், அவர் இந்த கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார் என, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை போலீசார் முன்வைத்துள்ளனர்.

Advertisment

ஆக, ராமஜெயம் கொலைவழக்கு 2012ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு அனுமதிக்கப்பட செய்யப்பட்ட பரிகாரக் கொலை என சி.பி.சி.ஐ.டி. விசாரணை நகர்கிறது. இதிலும் ஆறுமுகசாமி அறிக்கை போல சசிகலா வெளியேற்றம், அவர்களுக்குள் நடந்த சண்டை, ராமஜெயம் கொலை நடந்த அன்று சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டது போன்ற விவரங்கள் விரிவாக வெளியே வரும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

epss

ராமஜெயம் கொலை வழக்கைப் போலவே கொடநாடு வழக்கிலும் ஜெ.வின் அந்தரங்க விஷயங் கள் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா எப்பொழுது கொடநாட்டுக்கு வரு வார். வெளிப்படையாக எத்தனை முறை வருவார்? யாருக்கும் தெரியாமல் கொடநாட்டுக்கு எத்தனை முறை வந்து செல்வார்? அங்கு அவர் ரிலாக்ஸாக எப்படி இருப்பார்? கொடநாட்டில் இயங்கும் ஒரு மினி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும்? கொட நாட்டில் அமர்ந்து ஜெ.வும் சசியும் எப்படி வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பார்கள். கோடி கோடியாகக் கொட்டப்படும் லஞ்சப்பணம் கண்டெய்னர் கண்டெய்னராக எப்படி கொட நாட்டுக்கு வரும்? அவை எப்படி பிரித்தளிக்கப் படும்? கொடநாட்டில் ஜெயலலிதா தனது ரக சியங்களை பூட்டி வைத்திருந்த அறைகள் எத்தனை? அங்கு வைக்கப்பட்டிருந்த ssஆவணங்கள் என்ன? அங்கிருந்த பணம் எவ்வளவு? அவை கொட நாடு கொள்ளையில் எப்படி சம் பந்தப்பட்டிருக்கிறது? என விரி வாக கொடநாடு மேனேஜர் நட ராஜன் சாட்சியமளித்திருக்கிறார்.

போலீஸ் விசாரணையின் போது, விரிவாகப் பேசிய நடராஜன், தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சொத்து களை சம்பாதித்திருக்கிறார். அவரை வெளியே விட்டால் ஆபத்து என சசிகலா தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். நடராஜன் மட்டுமல்ல, கொடநாட்டில் கார்பென்டர் வேலை செய்த சஜீவன், ஜெ.வின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக சாட்சியமளித்திருக்கிறார்.

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஜெ.வைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். அனுபவ் ரவி, எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகி யோருக்கும், கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.

ssஇவை அனைத்தையும் சசிகலாவிடம் கேள்வி களாக கொடநாடு விசாரணை டீம் முன்வைத்து அவரிடமும் வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. இந்த வாக்குமூலங்கள் அனைத்தையும் கோர்ட்டில் பதிவு செய்ததுடன் கொடநாடு விசாரணை டீம், வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக எடப்பாடி பழனிச்சாமி சேர்க்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி, சசிகலா ஆகியோரை மையப்படுத்தி சுழலப் போகும் ராமஜெயம் மற்றும் கொடநாடு வழக்குகளில் பல புதிய கைதுகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி எங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கிய தனது சம்பந்தியை மீட்கத்தான் பேசினார். எங்களுக்கு தி.மு.க. அரசு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. எங்களைக் காப்பாற்ற எடப்பாடி எதுவும் செய்யவில்லை, என கோபத்திலிருக்கும் வேலுமணி, தங்கமணி குரூப், கொடநாடு வழக்கில் எடப்பாடியை வலுவாக சிக்க வைக்க தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள்.

nkn261022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe