தூத்துக்குடி எம்.பி.சீட்! சொர்ணாக்காவாக மாறிய சசிகலா புஷ்பா!

ss

முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா வீட்டினை சேதப் படுத்தியதாக தூத்துக்குடி மாநகர தி.மு.க. .கவுன் சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, அதிர்ஷ்ட மணி, பகுதிச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீஸார் வழக்கினைப் பதிவுசெய்த நிலையில், இதற்கு எதிர்வினையாக அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பா மீது வழக்கினைப் பதிவுசெய்துள்ளனர் மாவட்ட போலீஸார்.

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதியன்று கோவில் பட்டி சாலைப்புதூரில் பா.ஜ.க. கட்சியின் அனைத்து அமைப்புகள், பிரிவுகள் சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நடைபெறுவதாக அறிவித்திருந்தது "தூத்துக் குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. ‘கூட்டத்தில் கலந்து கொள்வது பெரிய விஷயமல்ல. நான் கலந்துகொள் ளும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவனுக் கும், மேயர் ஜெகனுக்கும் இடை யில் சிக்கித் தவிக்கும் அதிருப்தி கவுன்சிலர்களை அழைத்து வாருங்கள். அவர்களை மேடையேற்றுங்கள். அப்பொழுதுதான் மாநாடு பெரியளவில் பேசப்படும்'’என்றார் அண்ணாமலை.

அதிருப்தி கவுன்சிலர்களைத் தேடிப்பிடித்து பா.ஜ.க.விற்கு அழைத்துச் செல்லவிருப்பதாக உளவுத்துறை தரப்பு குறிப்பு எழுத, அவசர அவசர மாக தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் 30 நபர் களை குற்றாலத்திற்கு அனுப்பி வைத்தார் அமைச் சர் கீதாஜீவன். இதனால் கோபமடைந்த அண்ணா மலை, மாநாட்டு மேடையில்... "அடுத்தமுறை கனிமொழி தூத்துக்குடியில் வெற்றிபெற முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பார்கள். அதில், 5 பேர் கேபினட் அமைச்சர்களாவது உறுதி'’என கொளுத்திப்போட்டார். அதுதான் இந்தளவிற்கு பிரச்சனையை கொண்டுவந்திருக்கின்றது'' என நம்மிடம் பேசினார் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.

இதனை மனதில்வைத்து, இதற்குப் பதிலடியாக விளாத்தி குளத்தில் நடைபெற்ற பேராசிரி யர் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவனோ, "மத்தியில் இருப்ப வர்கள் அறவே நம்மை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அவர் கள் அரசியல் என்னவென்றே தெரி யாமல் இன்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது'' என்றார். இதேவேளை யில், தூத்துக்குடி மாநகராட்சி பா.ஜ.க.வின் வடக்கு மண்டல தலை வர் வினோத் தலைமையிலான மண்ட லச் செயலாளர் ரவிச்செல்வம், இளைஞ ரணித் தலைவர் அஜித்குமார், ராமேஸ் வரன், பாலா, சூர்யா உள்ளிட்ட 30 பா.ஜ.க. நிர்வாகிகளை தி.மு.க.வில் இணைத்து பா.ஜ.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அமைச்சர் கீதாஜீவன்.

இதற்குப் போட்டியாக அவசர அவசரமாக, தூத்துக்குடி ஆண்டாள் தெருவிலுள்ள தனியார் மண்டபத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறவுள்ள தாகவும், அதில் ஏராளமான நலத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது எனவும் அறிவித்தது தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக் கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கடந்த 21-ஆம் தேதி நடை பெற்ற கிறிஸ்துமஸ்விழா கூட்டத்தில் பேசிய சசிகலாபுஷ்பா, "நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது. தூத்துக் குடியில் மாற்றம் வரப்போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது, தூத்துக்குடியில் தி.மு.க. தோற்கப்போகிறது, பி.ஜே.பி. வெற்றி பெறப்போகிறது''’என சொர்ணாக்கா வாக பேசிவைத்தார். இது மேடையிலிருந்த நயினார் நாகேந்திரனையே நெளியவைத்தது.

ss

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தபால் தந்தி காலனியிலுள்ள சசிகலா வின் வீட்டின்முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரையும், வீட்டின் முகப்பிலுள்ள பூந்தொட்டி நாற்காலிகளையும் சேதப் படுத்திச் சென்றது மர்ம கும்பல். இரண்டு ஆட்டோக்களில் வந்திறங்கி தாக்குதலை நடத்திய கும்பல் யாரெனத் தெரியாம லேயே தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பேச்சாளர் பிரிவு தலைவர் ரத்தினராஜ் கனியின் புகாரில், வழக்கினை பதிவுசெய்தது சிப்காட் போலீஸ். தாக்குதலை நடத்தியவர்கள் இன்னாரென புகாரில் கொடுக்கப்பட்டது ஐந்து நபர்களை மட்டுமே! போலீ ஸாரோ 13 நபர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர். அடுத்த நாளில் தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென சுமார் 400-க்கும் அதிகமான பா.ஜ.க.வினர் அமைச்சர் கீதாஜீவனின் இல்லத்தை முற்றுகையிட சென்றனர். சமாதானமாக பேசிப்பார்த்த காவல்துறை வேறுவழியில்லாமல் லேசான தடியடி நடத்தி கைதுசெய்து மண்டபத்தில் வைத்தது.

எதற்காக இந்த அமளிதுமளி.? என கேள்வியெழுப்பி னால், "அதிருப்தி கவுன்சிலர்களை மேடைக்கு கொண்டுவரு வேன் என அண்ணாமலையிடம் சவால்விட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் சசிகலா புஷ்பா. அதன் மூலமாவது தூத்துக்குடியில் தனக்கு பெரும் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டை வாங்கிவிட வேண்டுமென்பது அவரின் கணக்கு. அது நடைபெறாமல் அண்ணாமலையிடம் மூக்குடைபட்ட வேளை யில், அவரின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவரான மாநக ராட்சி வடக்கு மண்டல தலைவர் வினோத்தை தி.மு.க.வில் இணைத்தார் அமைச்சர் கீதாஜீவன். அனைத்தும் எதிராகத் திரும்பிய நிலையில் காட்டுமிராண்டித்தனமான பேச்சை கையில் எடுத்தார் சசிகலா புஷ்பா. இது அவருக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. எனினும் அவரால் பரிந் துரைத்து நியமிக்கப்பட்ட மற்ற மூன்று மண்டல தலைவர் களும் தி.மு.க.விற்கு நடையைக் கட்டவுள்ளனர்'' என்றார் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர்.

-நா.ஆதித்யா

படங்கள்: மூர்த்தி

nkn281222
இதையும் படியுங்கள்
Subscribe