"ஒரு தொழிலதிபர் விருப் பத்திற்காகவே காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் விசாரணை கவலைக் குரியது. நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினர் சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண் டும்'' என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது சென்னை உயர் நீதிமன்றம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது 2018- மே 22, 23 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களை பலிகொண்டது எடப்பாடியின் காவல்துறை. இதுகுறித்து துவக்கத்தில் சி.பி.சி.ஐ.டி.யும் பின்னர் சி.பி.ஐ.யும் விசாரணையை மேற்கொண்டன. எனினும் மக்களுக்கு ஒற்றை நம்பிக்கை நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கையே!
இதில் தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு கொலைகளுக்காக 31-12-2019 அன்று 27 நபர்களையும், 21-09-2020 அன்று 44 நபர்களையும் மொத்தமாக காவல்துறை அல்லாத 71 பொது மக்களே குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. குற்றவாளியாக டி.எஸ்.பி. திருமலையை மட்டும் பின்னாட் களில் காண்பித்தது. நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையோ, "அன்றைய (2018-ல்) தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கர், எஸ்.பி.ம
"ஒரு தொழிலதிபர் விருப் பத்திற்காகவே காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் விசாரணை கவலைக் குரியது. நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினர் சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண் டும்'' என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது சென்னை உயர் நீதிமன்றம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது 2018- மே 22, 23 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களை பலிகொண்டது எடப்பாடியின் காவல்துறை. இதுகுறித்து துவக்கத்தில் சி.பி.சி.ஐ.டி.யும் பின்னர் சி.பி.ஐ.யும் விசாரணையை மேற்கொண்டன. எனினும் மக்களுக்கு ஒற்றை நம்பிக்கை நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கையே!
இதில் தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு கொலைகளுக்காக 31-12-2019 அன்று 27 நபர்களையும், 21-09-2020 அன்று 44 நபர்களையும் மொத்தமாக காவல்துறை அல்லாத 71 பொது மக்களே குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. குற்றவாளியாக டி.எஸ்.பி. திருமலையை மட்டும் பின்னாட் களில் காண்பித்தது. நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையோ, "அன்றைய (2018-ல்) தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கர், எஸ்.பி.மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், இன்ஸ்பெக் டர்கள் ஹரிகரன், பார்த்தீபன், திருமலை (இன்று டி.எஸ்.பி.), எஸ்.ஐ.க்கள் ரென்னீஸ் மற்றும் சொர்ணமணி மற்றும் போலீஸார் சுடலைக்கண்ணு (3200), ராஜா (1160), சங்கர், டி.ஐ.ஜி.யின் காவலர் தாண்டவமூர்த்தி (1158), சதீஷ்குமார், ஏ.ராஜா (மஞ்சள் கலர் டீசர்ட்), கண்ணன், மதிவாணன் (அண்ணா நகரில் சுட்டவர்) உள்ளிட்ட 17 நபர்களே பொதுமக்களை கொன்ற கொலையாளிகள்'' என்றது.
"அன்றைய மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், மாவட்டம் முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க, எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன், "தூத்துக்குடி மையப்பகுதியில் உள்ள தென்பாக காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைக்கு மட்டும்' 144 உத்தரவினை பிறப்பித்தது தான் எங்களுக்கு காவல்துறை மீது முதல் சந்தேகம் ஆரம்பித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் போராட்டக்காரர்கள் ஐவர் இறந்திருக்கின்றனர். அவர்களின் கையில் எவ்வித ஆயுதமுமில்லை. காவல்துறையினருக்கு கொடுங்காயம் விளைவிக்கும் அளவிற்கு எவ்வித அச்சுறுத்தலிலும் ஈடுபடவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஸ்டெர்லைட் குடியிருப்புப் பகுதிகளில் மட்டும் வாகனங்கள் வரிசையாக அடுக்கி வைத்தது போல் தீ வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கினர். தீ வைத்தனர். நிலைமையை சரி செய்ய துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தாயிற்று என்கின்றனர். சரி... அவர்கள் வாதத்திற்கே வருவோம். தீ வைத்தது யார்? என்பதனை இன்றுவரை கண்டுபிடிக்க வில்லையே? உயர்நீதிமன்றம் கூறியதுபோல் அப்பாவி பொதுமக்கள் திட்டமிடப் பட்டே சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்'' என்கின்றார் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட் டத்தில் பங்கெடுத்துவரும் மெரினா பிரபு.
நீதிபதி அருணா ஜெகதீசனோ, "காவல்துறையினர் தங்களுக்குள் எதனையும் கலந்து ஆலோசிக்கவில்லை. மக்கள் முன்னேறி மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் வரும் பொழுது அங்கிருந்த டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கர், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன் துணை கொண்டு உச்சபட்ச துப்பாக்கிச்சூட்டினை ஆரம்பித்து வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவிடம் கலந்துகொள்ளவில்லை. அதுபோல், இன்றைய டி.எஸ்.பி. திருமலை, எஸ்.ஐ. ரென்னிஸ் ஆகியோர் நடத்திய துப்பாக்கிச்சூடும் ஐ.ஜி.க்கு தெரியவில்லை. ஐ.ஜி. லிங்கதிருமாறனிடமும், சுடலைக் கண்ணுவிடமும் சுட உத்தரவிட்டது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இத்தனைக் கும் ஐ.ஜி. அங்கிருந்தும், அவரிடம் அனுமதி பெறாமலேயே தான் தோன்றித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி யிருக்கின்றார் டி.ஐ.ஜி. மதியம் 1.30 மணிவாக்கில் எதுவுமே தெரியாதது மாதிரி ஸ்பாட் டிற்கு வந்தார் எஸ்.பி. மகேந்திரன். அதன்பின்னர் அவரும் "துப்பாக்கிச்சூடு நடத் தியது கொடுமை' என தன்னுடைய விசாரணை அறிக்கையில் கூறி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
தூத்துக்குடி கலவரத்தின் போது போராடிய, முன்னின்று வழிகாட்டிய போராளிகளின் உயிருக்கு குறிவைத்த போலீஸார், போராளிகளின் புகைப்படத்தை ஏறக்குறைய மனனம் செய்த வேளையில், கூடுதலாக அடையாளம் காட்ட நன்க்ஷ ஙஹழ்ந்ங்ழ் எனக்குறிப்பிடப்பட்டு முழுக்கை வெள்ளை சட்டை போட்டு போராளிகள் பக்கத்தில் நின்று அடையாளம் காட்டியுள்ளனர் சிப்காட், வடக்கு, தெற்கு மற்றும் சென்ட்ரல் காவல் நிலையப் போலீஸார்கள். இந்த நன்க்ஷ ஙஹழ்ந்ங்ழ்கள் அடையாளம் காட்டியதன் அடிப்படையிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள னர் பலர் என்றது நக்கீரனின் கள ஆய்வு.
"இனி எவனும் ஆலைக்கெதிராக போராடினால் இதுதான் கதி என்பது போல் ஸ்டெர்லைட் ஆலை முதலாளி விரும்பி யிருக்கக்கூடும். அவருடைய எண்ணத்திற்கு உதவ வந்தவர்தான் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிஹரன். அவருடைய மனைவியான தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாராணி மற்றும் தனிப்பிரிவு எஸ்.ஐ. முத்து ஆகியோர். துப்பாக்கிக் குண்டால் பலியான வர்களின் வீட்டிற்கே சென்று, "விபத்தில்தான் செத்தார்' என கடிதம் கொடுங்கள், ரூ.30 லட்சம் வாங்கித் தருகின்றேன்' என ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக கேன்வாஸ் செய்தவர். துவக்கத்தில் இவர் மாவட்ட உயரதிகாரிக்கும், ஆலைக்கும் இடையில் தரகராய் செயல்பட்ட நிலையில், அதன்பின்னரான நாட்களில் ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆகியோர் திட்டத்திற்குள் வந்தனர். போராட்டம் மிகப்பெரிய அளவில் செல்ல இருக்கின்றது என உளவுத்துறை அறிக்கை கொடுத்தும் அதனை குப்பைத் தொட்டியில் வீசியவர்கள் இவர்கள்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே தூத்துக்குடி வந்து ஆளாளுக்கு எல்கையை பிரித்துக் கொண்டு, ஆலையின் முதலாளிக்காக நர வேட்டையாடி னார்கள். போராட்டத்தில் இன்னார்கள் ஊடுருவிவிட்டனர் என்றவர்கள்... அவர்களை கைது செய்திருந்தாலே இத்தனை பலிகள் வந்திருக்காதே? காக்கிகளின் எண்ணம் பொதுமக்களைக் கொல்வதே! முதலாளிக்காக அதனை செய்துள்ளனர் காக்கிகள். தற்பொழுது உயர் நீதிமன்றத்தின் செயல் பாராட்டுக்குரியதே. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காக்கிகளில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்றுள்ள னர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அத்தனை காக்கிகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்தும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முதல் நிலை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து அவர்களுடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டுமென்பது எங்களின் கோரிக்கை'' என்கின்றார் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம்.
படங்கள்: விவேக்
__________
விளக்கம்!
மே 25-28 தேதியிட்ட நக்கீரன் இதழில், "இடிக்கப்பட்ட வீடு, பரிதவிப்பில் குடும்பம்' என்ற தலைப்பில் வெள்ளக்கால் கிராமத்தில் குடியிருந்த சுப்பிரமணியன் அவரது சகோதரி சுப்புலட்சுமி குடியிருந்த வீடு இடிக்கப்பட்ட செய்தியை வெளி யிட்டிருந்தோம். அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த சுடலையாண்டித் தேவர் குறித்து அவரது துவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, அவர் காலமாகிவிட்டார் என்று தெரிவித்ததை பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சுடலையாண்டித்தேவர், தான் உயிருடன் இருப்பதாகவும், தன்னைப் பற்றி வந்துள்ள செய்தி தவறு என்றும் அவர் தெரிவித்ததை இங்கே விளக்கமாக அளிக்கிறோம்.
-ஆர்.