(19) சினிமா வேண்டாம்... கணவரின் கட்டளை
என் கணவர் நல்ல வேலையில் இருந்திருந்தால், நல்ல சம்பளம் வாங்குகிறவராக இருந்திருந்தால், நான் சினிமாவுக்கு வந்திருக்கமாட்டேன். எனக்கு இது ஒரு பக்கம் வேதனையாகவும், மற்றொருபுறம் புரியாத புதிராகவும் இருந்தது. இப்படியே இருந்தால் எதிர்காலம் என்னாவது? எப்படி வாழ்க்கை வண்டியை ஓட்டுவது என்ற கவலை வந்தது. மாணவியாக இருந்தவரை எந்த கவலையும் பெரிதாக இல்லை, நல்லா படிக்க வேண்டும் என்பது தவிர.
கல்யாணமானதும் புதிய உறவு, புதிய கவலை... நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக மாமியார் மெச்ச நடக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் ஒரு தாயாக கூடுதல் கவனம் வந்து விடுகிறது. குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும், நல்ல உணவு, நல்ல உடை, நல்ல கல்வி தரவேண்டும் என்ற கவலை கூடுதலாக வந்துவிடுகிறது. வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். அதற்கு வசதி வாய்ப்புகள் வேண்டும். வருமானம் தரக்கூடிய நல்ல உத்தியோகத்திற்குப் போகவேண்டும். இப்படியான சிந்தனை சிறகு விரித்து பறந்து போகும்போது, சட்டென மனதில் மின்னலாய் ஒரு எண்ணம் குறுக்கே பாய்ந்து வந்தது.
என் தங்கை கிருஷ்ணாவே சினி மாவில் நடிக்கப் போகும்போது, நானும் சினிமாவில் சேர்ந்து நடித்தால் என்ன? என் மன தில் தோன்றிய எண்ணத்தை என் கணவரிடம் தெரி வித்தேன். அவர் அலட்டிக்கொள்ளா மல் சொன்னார்.
"நம்மைப் போன்றவர்களுக்கு சினிமா சரிப்பட்டு வராது ஜானகி. வேண்டு மானால் நீ பின்னணிப் பாடகியாகப் போக முயற்சி செய். அதில் தவறு எதுவும் இல்லை'' என்
(19) சினிமா வேண்டாம்... கணவரின் கட்டளை
என் கணவர் நல்ல வேலையில் இருந்திருந்தால், நல்ல சம்பளம் வாங்குகிறவராக இருந்திருந்தால், நான் சினிமாவுக்கு வந்திருக்கமாட்டேன். எனக்கு இது ஒரு பக்கம் வேதனையாகவும், மற்றொருபுறம் புரியாத புதிராகவும் இருந்தது. இப்படியே இருந்தால் எதிர்காலம் என்னாவது? எப்படி வாழ்க்கை வண்டியை ஓட்டுவது என்ற கவலை வந்தது. மாணவியாக இருந்தவரை எந்த கவலையும் பெரிதாக இல்லை, நல்லா படிக்க வேண்டும் என்பது தவிர.
கல்யாணமானதும் புதிய உறவு, புதிய கவலை... நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக மாமியார் மெச்ச நடக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் ஒரு தாயாக கூடுதல் கவனம் வந்து விடுகிறது. குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும், நல்ல உணவு, நல்ல உடை, நல்ல கல்வி தரவேண்டும் என்ற கவலை கூடுதலாக வந்துவிடுகிறது. வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். அதற்கு வசதி வாய்ப்புகள் வேண்டும். வருமானம் தரக்கூடிய நல்ல உத்தியோகத்திற்குப் போகவேண்டும். இப்படியான சிந்தனை சிறகு விரித்து பறந்து போகும்போது, சட்டென மனதில் மின்னலாய் ஒரு எண்ணம் குறுக்கே பாய்ந்து வந்தது.
என் தங்கை கிருஷ்ணாவே சினி மாவில் நடிக்கப் போகும்போது, நானும் சினிமாவில் சேர்ந்து நடித்தால் என்ன? என் மன தில் தோன்றிய எண்ணத்தை என் கணவரிடம் தெரி வித்தேன். அவர் அலட்டிக்கொள்ளா மல் சொன்னார்.
"நம்மைப் போன்றவர்களுக்கு சினிமா சரிப்பட்டு வராது ஜானகி. வேண்டு மானால் நீ பின்னணிப் பாடகியாகப் போக முயற்சி செய். அதில் தவறு எதுவும் இல்லை'' என்றார். என் முயற்சிக்கும் அதன் வேகத்திற்கும் அந்தப் பதில் அப்போதைக்கு ஒரு ஸ்பீடு பிரேக்காக, முட்டுக்கட்டையாக இருந்தது.
"நான் நடிகையாக வேண்டும் என்றேன், பாடகியாகு அதுதான் சரி' என்கிறார் என் கணவர் என்ன செய்ய? சினிமாவில் சேரும் என் எண்ணத்தை இதயத்தில் ஆழப்போட்டு புதைத்து விட்டு, வழக்கமான வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.
நாட்கள் விரைந்து ஓடியது. எங்கள் கையிலிருந்த பணமும் கரைய ஆரம்பித்தது. சில நூறு ரூபாய் தாள்கள் மட்டும் எஞ்சியிருந்தன. அதுவும் கரைவதற்குள் வருமானத்திற்கு ஏதாவது வழிசெய்தாக வேண்டும். குடும்ப நிலை, பொருளாதாரம் பற்றி என் கணவர் எந்தக் கவலையும் படவேயில்லை. அவருக்கு என்ன நம்பிக்கையோ? மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ, எங்கள் எதிர்காலம் பற்றி அவர் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொண்டுவந்து கொடுத்ததோடு அவரது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்.
அந்த 2500 ரூபாயை வைத்து எத்தனை ஆண்டுகள் வாழ முடியும் என்கின்ற நினைப்பும் அவருக்கு வரவில்லை. என்னால் இப்படி வெட்டியாக சும்மா இருக்க முடியாது. நான் ஒருத்தி இல்லை, இப்போது என்னை நம்பி இன்னொரு ஜீவனும் வந்துவிட்டது. என் குழந்தை... அதை நான் காப்பாற்றியாக வேண்டும்.
மறுபடியும் என் கணவரிடம் பேசினேன். என் நிலையை விளக்கிச் சொல்லி, "நான் சினிமாவில் முயற்சிக்கப்போகிறேன்'' என்று அழுத்தமாகச் சொன்னேன். என்னை உங்களுக்கு அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைக்க காரணம் என்ன தெரியுமா? எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததுதான். நானும் ஆசையாக வீட்டில் வந்து சொன்னதும், என் அண்ணா என்னை பெல்ட்டால் அடித்தான். "ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்துவிட்டு உனக்கு சினிமா கேட்கிறதா?' என்று கேட்டுக் கேட்டு அடித்தான். அம்மாவும் தன் பங்கிற்கு மொத்தினார்... திட்டினார். "இனி இவளை ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷன் பக்கம் அனுப்பக் கூடாது. ஏதோ பாட்டு, டிராமா என்று போறா போகட்டும்னு விட்டால், இப்போது சினிமாவில் நடிக்கப்போறேன்னு வந்து நிக்கிறா..' என்று அம்மா சத்தம் போட்டாள். எனக்கு அப்படிச் சொன்னவர்கள், என் தங்கை கிருஷ்ணாவை சினிமாவில் சேர்த்துவிடத் துடிக்கிறார்கள்'' என்று நடந்த உண்மையை என் கணவரிடம் எடுத்துச் சொன்னேன்.
இதன்பிறகு அவர் இறங்கி வந்தார். வேண்டாம் என்று சொல்லித் தடுக்கவும் முடியா மல், சரி என்று முழு மனதோடு ஒப்புதல் தரவும் மனசு வர வில்லை. ஏதோ சப்பைக்கட்டு கட்டுவது போல பேசி சம்மதித்தார். "ம்... எனக்கு ஒண்ணும் தப்பாகப்படவில்லை. நாம் சரியாக நடந்துகொண் டால், தவறு ஏன் ஏற்படப் போகிறது, முயற்சிசெய்து பார்க்கலாம்'' என்று திருவாய் மலர்ந்தார்.
இது என் மனதிற்கு கொஞ்சம் தெம்பாகவும், நிம்மதியாகவும் இருந்தது. கணவரின் சம்மதத்துடன் வேலைக்குச் செல்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டது. சினிமாவில் சேர முயற்சிக்கலாம் என்று முடிவு செய்ததும், என் நினைவில் முதலில் வந்துநின்றவர் வாஹினி ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி அவர்கள்தான். அதற்குக் காரணமும் இருந்தது. 1946, 47ஆம் ஆண்டுகளில் நான் ரேடியோவில் தெலுங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மெல்லிசைப் பாட்டு பாடுவது, ரேடியோ டிராமாவில் நடிப்பது என்றிருந்தேன்.
ஒரு சமயம் நான் ரேடியோ நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள ஸ்டேஷனுக்கு சென்றிருந்தேன். அப்போது ரேடியோ ஸ்டே ஷன் எக்மோர் மார்ஷல் தெருவில் இருந்தது. அங்குதான் பி.என்.ரெட்டி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன். ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபல தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு அவர்கள், அப்போது "ரெட்டி மல்லீஸ்வரி' என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டி ருந்தார். அந்தப் படத்தின் கதை அமைப்பு விஷயமாக புச்சி பாபு அவர்களை சந்திக்க அடிக்கடி வருவார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/19/sowcarjanaki1-2025-12-19-11-31-19.jpg)
புச்சி பாபு என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுமே, "ஓ..! நீ தானா அந்த ஜானகி? நீ நடித்த பல ரேடியோ டிராமா கேட்டிருக்கிறேன், உன் பாட்டும் கேட்டிருக்கிறேன். உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. சினிமாவில் நடிக்க உனக்கு ஆசையிருக்கா?'' என்று கேட்டார்.
நான் சிறிதும் எதிர்பாராத கேள்வி... இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என் பாட்டு, என் டிராமா கேட்கிறதா சொன்னது கேட்டு உள்ளபடியே எனக்கு பெருமையாகவும், ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அடுத்து, அவரது பெரிய நிறுவனம் தயாரிக்கிற படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டது கூடுதல் மகிழ்ச்சியைச் கொடுத்தது.
எனக்குத் தெரியாமலே அப்படி ஒரு ஆர்வம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்குள் துளிர்விட்டிருந்தது. அது ஒரு காலம். ஆனால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய தும், எனக்கு கல்யாணம் செய்து வைப்பதில் படுமும்முரமாக இருந்ததால், என் சினிமா ஆசை துளிர்விட்ட சில நிமிடங்களிலேயே தூக்கி வீசப்பட்டது. நான் சினிமாவில் நடிப்பதற்கு தடை போட்டதுமில்லாமல் எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துவந்தார்கள். அதனால்... நான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவில்லை, உடனே பி.என்.ரெட்டி "அப்படியானால் வேண்டாம், நீ சினிமாவுக்கு வர வேண்டாம், கல்யாணம் செய்துகொண்டு நல்லா இரு'' என்று அப்போது சொல்லி அனுப்பி விட்டார்.
அன்றைக்கு எனக்கும் பி.என்.ரெட்டிக்கும் நடந்த பேச்சையும், அந்த நிகழ்ச்சி யையும் நினைவுபடுத்தி என் கணவரிடம் சொன்னேன்.
"ஓ... அப்படியா? இது எனக்கு எப்படி தெரியும்?'' என்றார்.
எனவே அவர் மூலம் சினிமா வில் சேர அவரது உதவியை பெற லாம் என்ற என் எண்ணத்தையும் கணவரிடம் சொன்னேன்.
பி.என். ரெட்டியை சந்திக்க நேரம் கேட்டு பெற்றுக்கொண்டோம். அப்போது அவர் சென்னை தியாகராய நகர் விஜயராகவாச்சாரி தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்.
1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு நாள் காலை 10:30 மணிஅளவில் பி.என் .ரெட்டியை நானும், என் கணவரும் கைக்குழந்தையுமாக சந்தித்தோம். என் கணவரை அவருக்கு அறி முகம் செய்து வைத்தேன். எங்களை வரவேற்று ரொம்பவும் கௌரவமாக நடத்தினார். ரொம்ப பண்பாக அன்பாக பேசினார்.
நான் சினிமா வாய்ப்பு கேட்டு வந்திருப்பதாக சொன்னதும், "சினிமா உனக்கு வேண்டாம், நீ போய் குடும்ப வாழ்க்கை நடத்து'' என்று சொல்ல... நான் திடுக்கிட்டேன்.
அப்புறம் என்ன நடந்தது?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us