(28) நான் பிரச்சினை இல்லாத நடிகையா?
என் திரையுலகப் பயணத்தில் 1959ஆம் ஆண்டு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் பார்வையில் ஒரு நல்ல நடிகை என்ற பெயர் வந்ததும் என்னை நோக்கி படங்கள் வர ஆரம்பித்தன. இந்த ஆண்டில் நான்கு படங்களில் கதை நாயகியாக நடித்தேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற வெற்றிப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த ஏ.கே. வேலன் சென்னை அருணாசலம் ஸ்டுடியோ அதிபர்) கதை எழுதி, தயாரித்து, இயக்கிய படம் "காவேரியின் கணவன்'. 1959 செப்டம்பரில் வெளியான இந்த படத்தில் "காவேரி' என்கின்ற டைட்டில் ரோலில் நடித்தேன். சின்ன வயதில் ஒரு காதல். பக்குவப்பட்ட வயதில் ஒரு காதல். என இரண்டு காதல் கதைகள் இணைந்து தண்டவாளம் போல் செல்லும் திரைக்கதை. காவேரி என்ற கதாபாத்திரத்தில் நான், எனக்கு ஜோடியாக முத்துகிருஷ்ணன். "வளையாபதி' புகழ் சௌகார் ஜானகி என்று விளம்பரப்படுத்தப் பட்டன. மற்றும் தங்கவேலு. சி.கே.சரஸ்வதி. அங்கமுத்து, குசலகுமாரி, பக்கிரிசாமி, சூரியகலா ஆகியோர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசைக்கு உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், பி.கே.முத்துசாமி பாடல்கள் எழுதினர்.
"மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே...
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே'
இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டி யெங்கும் ஒலித்தது. கல்யாண வீடுகளில் அதிகமாக ஒலித்தன. படத்தில் நான் பாடுவதுபோல் அமைந்த பாடல் இது. அதே 1959ஆம் ஆண்டு மீண்டும் என்.டி.ஆர். ஜோடியாக "ராஜ சேவை' படத்தில் ராஜா ராணி கதையில் இளவரசியாக தோன்றி னேன். எஸ்.வி.ரங்காராவ் -கண்ணம்பாவின் மகனாக எ
(28) நான் பிரச்சினை இல்லாத நடிகையா?
என் திரையுலகப் பயணத்தில் 1959ஆம் ஆண்டு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் பார்வையில் ஒரு நல்ல நடிகை என்ற பெயர் வந்ததும் என்னை நோக்கி படங்கள் வர ஆரம்பித்தன. இந்த ஆண்டில் நான்கு படங்களில் கதை நாயகியாக நடித்தேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற வெற்றிப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த ஏ.கே. வேலன் சென்னை அருணாசலம் ஸ்டுடியோ அதிபர்) கதை எழுதி, தயாரித்து, இயக்கிய படம் "காவேரியின் கணவன்'. 1959 செப்டம்பரில் வெளியான இந்த படத்தில் "காவேரி' என்கின்ற டைட்டில் ரோலில் நடித்தேன். சின்ன வயதில் ஒரு காதல். பக்குவப்பட்ட வயதில் ஒரு காதல். என இரண்டு காதல் கதைகள் இணைந்து தண்டவாளம் போல் செல்லும் திரைக்கதை. காவேரி என்ற கதாபாத்திரத்தில் நான், எனக்கு ஜோடியாக முத்துகிருஷ்ணன். "வளையாபதி' புகழ் சௌகார் ஜானகி என்று விளம்பரப்படுத்தப் பட்டன. மற்றும் தங்கவேலு. சி.கே.சரஸ்வதி. அங்கமுத்து, குசலகுமாரி, பக்கிரிசாமி, சூரியகலா ஆகியோர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசைக்கு உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், பி.கே.முத்துசாமி பாடல்கள் எழுதினர்.
"மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே...
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே'
இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டி யெங்கும் ஒலித்தது. கல்யாண வீடுகளில் அதிகமாக ஒலித்தன. படத்தில் நான் பாடுவதுபோல் அமைந்த பாடல் இது. அதே 1959ஆம் ஆண்டு மீண்டும் என்.டி.ஆர். ஜோடியாக "ராஜ சேவை' படத்தில் ராஜா ராணி கதையில் இளவரசியாக தோன்றி னேன். எஸ்.வி.ரங்காராவ் -கண்ணம்பாவின் மகனாக என்.டி.ஆரும், பாலையாவின் காணாமல்போன மகளாக, இளவரசியாக நானும் நடித்தேன். கொடுங்கோல் அரசனாக பி.எஸ்.வீரப்பாவும், அவரது மந்திரியாக ஓ.ஏ.கே.தேவரும், கலகலப்புக்கு டி.ஆர். ராமச்சந்திரனும் நடித்தார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழியில் தயாரான இந்தப் படத்திற்கு தமிழில் -திரைக்கதை -வசனம் -பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ் எழுத, எம்.ஏ.ரஹ்மான் ஒளிப்பதிவு செய்தார், கே.காமேஸ்வர ராவ் படத்தை இயக்கினார்.
"ராஜ சேவை' படத்திற்காக நான் ஒருவார காலம் குதிரை ஏற்றம் பழகிக்கொண்டேன். அப்போது தினமும் குதிரையை தடவிக் கொடுப் பது, கொள்ளு கொடுப்பது என்று குதிரையிடம் அன்பாகப் பழகியதால் அந்தக் குதிரை அன்பாக இருந்தது. படத்தில் எனக்கும் என்.டி.ஆருக்குமான முதல் சந்திப்பே... நான் குதிரையில் சவாரி செய்து வரும்போதுதான். அடுத்து இதே வருஷம் "உலகம் சிரிக்கிறது' படம் வந்தது. லட்சுமி கிருஷ்ணன் எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து ஆர்.ராம மூர்த்தி டைரக்ட் செய்தார் ஆர்.டி.கோவிந்தன் (பிரபு பிலிம்ஸ்) தயாரித்தார். எம்.ஆர்.ராதா, பிரேம்நசீர், நான், (சௌகார் ஜானகி) முத்துராமன், வி.கே.ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், லட்சுமி காந்தம், கண்ணையா ஆகியோர் நடித்தனர். லுங்கி வியாபாரம் செய்யும் செல்வந்தர் வி.கே. ராமசாமியின் மகளாக நானும், அவரது தங்கை மகனாக பிரேம் நசீரும் காதலர்கள். எங்கள் காதலை பிரிக்க சூழ்ச்சி செய்யும் வேடத்தில் முத்துராமனும், எம்.ஆர்.ராதா அவருக்கு புத்திமதி சொல்லும் நல்ல நண்பராகவும் தோன்றினார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பண்டரி பாய், எஸ்.வி.ரங்காராவ், நான், மாலினி, என்.ஆர். சந்தியா, டி.ஆர்.ராமச்சந்திரன், சகஸ்ரநாமம் ஆகியோர் நடிப்பில் அதே ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி "அவள் யார்?' படம் வந்தது. ஒரு நீதிபதியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப் பட்டதாகவும், சிவாஜியை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் இந்தக் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிய கே.எம்.மகாதேவன் சொல்லியிருந்தார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் முத-ல் வக்கீலாகவும், பிறகு... நீதிபதியாகவும் பாத்திரம் ஏற்றிருந்தார். அதே சமயத்தில் அவருக்கு இன் னொரு முகமும் இருந்தது. சந்தேகப் பேர்வழி என்கின்ற முகம்தான் அது. கதையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரத்தில் நான் தோன்றினேன். முதல்முறையாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பை நேரில் கண்டு பிரமித்தேன். அப்போதே எனக்கும் நடிப்பு குறித்து சில டிப்ஸ்களை அவர் கொடுத்தார். அடுத்து வந்த காலகட்டங்களில் அவர் படங்களில் நடிக்கும்போது அவரால் எனது நடிப்பு மெருகேறியது.
1959ஆம் ஆண்டு நான்கு படங்களில் பிஸியாக நடித்தேன். அடுத்த ஆண்டு அதேபோல நான்கு படங்கள் என்னை நட்சத்திர அந்தஸ்துக்கு நகர்த்திய படங்கள். "ஒரு படம் வெற்றி பெறுவதால் மட்டும் ஒரு ஹீரோயினைத் தேடி புதுப் பட வாய்ப்பு வருவதில்லை. அவருடைய தொழில் பக்தி, பிரச்சினை செய்யாத நடிகை என்ற பெயர், குறித்த நேரத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வது, அன் றைய வேலையை இருந்து முடித்துக் கொடுப்பது, சம்பள விஷயத்தில் கறாராக இல்லாமல் மிதமாக நடந்துகொள்வது... இதெல்லாம்தான் ஒரு நடிகை யை டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் படங் களில் ஒப்பந்தம் செய்யக் காரணமாக அமைகின்றன என்று என் பத்திரிகை நண்பர் சொன்னார். ஒருவகையில் அவர் சொன்னது உண்மைதான்.
"உங்களைத் தேடி வாய்ப்புகள் வரக்காரணம், நீங்கள் பிரச்சினை செய்யாத நடிகை, நேரம் தவறுவதில்லை, சம்பளம் விஷயத்தில் விட்டுக் கொடுத்து போகிறீர்கள், கொடுத்த கதாபாத்திரத் திற்கு நேர்மையாக உழைக்கிறீர்கள், இதனால்தான் உங்களைத் தேடி தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வருகிறார்கள்'' என்றார் அந்த பத்திரிகையாளரான நண்பர்.
1960ஆம் ஆண்டு எனது திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. நான்கு படங் களில் நடித்தேன் நான்கும் வெற்றி பெற்றது. திரையுல கினர், ரசிகர்கள் பார்வை என் பக்கம் திரும்பியது. புதுப்புது படங்கள் வந்தன. நாவல்களை, நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வந்த காலகட்டம் அது. அப்போது ஜே.ரங்கராஜு எழுதிய "சந்திரகாந்தா' என்ற நாவல் முதலில் நாடகமாக வடிவம் பெற்று நடத்தப்பட்டது அந்த நாடகத்தைப் பார்த்த எம்.ராதாகிருஷ்ணன், அதன் உரிமையை வாங்கி "சவுக்கடி சந்திரகாந்தா' என்ற பெயரில் அவரே திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கினார். இந்த படத்தில் நான் (சௌகார் ஜானகி) டி.எஸ்.பாலையா. டி.கே.ராமச்சந்திரன், வீரப்பா, தாம்பரம் லலிதா, வனஜா மற்றும் பலர் நடித்தனர். தயாரிப்பாளருக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது, எனக்கும்தான்.
1934ல் ஆங்கிலத்தில் "டெத் டேக்ஸ் ஏ ஹாலிடே' என்று ஒரு காமெடி கலந்த கலகலப்பான படம் வந்தது. அதனுடைய பாதிப்பில் பல படங்கள் வந்ததாக சொல்லப்பட்டது. வங்காளத்தில் அதன் பாதிப்பில் "ஜமாலியா ஜிபந்த்' வந்தது. அதன் பாதிப்பில் 1958ல் வந்து வெற்றியும் பெற்ற கலகலப்பான நகைச்சுவை படம்தான் "நான் கண்ட சொர்க்கம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார். சி.புல்லையா திரைக்கதை அமைத்து தயாரித்து இயக்கினார்.
அவர் நாடகங்கள் நடத்துபவர். அவருக்கு ஜோடியாக நடிக்கக் கூப்பிடுவார். நான் மறுத்து விடுவேன். என்னை கல்யா ணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டு லெட்டர் எழுதுவார். அதை ஒரு காளை மாட்டின் கழுத்து பெல்ட்டில் வைத்து அனுப்புவார். என் தந்தைக்குத் தெரியாமல் அந்தக் கடிதத்தை எடுத்து நான் வாசிப்பேன். தந்தையிடம் வந்து பெண் கேட்பார். "உன்னைப் போன்ற ஒருவனுக்கு பெண் தரமாட்டேன்' என்று அவர் சொல்ல, "இனிமேல் என் பொண்ண மறந்திடு' என்பார் "ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை திட்ட மறந்தாலும். நான் உங்க பெண்ணை மறக்கமாட்டேன்' என்று தங்கவேலு சொல்வது ரசிக்க வைத்தது. ரொம்ப கலகலப்பான படம். இது அந்த காலத்தில் பெரிதாக ரசிக்கப்பட்டது.
அடுத்து அதே 1960ல் சிவாஜியுடன் நடித்த "பாவை விளக்கு.' இதனை "கல்கி' வார இதழில் அகிலன் தொடராக எழுதிவந்தார். அது தொடராக வரும்போதே கதையை வாங்கி ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத, கே.சோமு இயக்கினார். கதாநாயகன் தணிகாசலம் (சிவாஜி கணேசன்) ஒரு எழுத்தாளர். அவரை நாலு பெண்கள் காதலிக்கிறார்கள். பண்டரிபாய், குமாரி கமலா, நான் (சௌகார் ஜானகி) அவரது முறைப்பெண்ணான என்னை திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகும் அவருடைய ரசிகையாக வருகின்ற எம்.என். ராஜம் காதலிப்பார். இந்தப் படத்தில் அமைந்த அருமையான பாடல்களை இன்றளவும் கேட்டு ரசிக்கிறார்கள். அடுத்து, அதே ஆண்டில் 'படிக்காத மேதை' வந்தது. இதில் சிவாஜி ஜோடியாக நடிக்கும்போது, நடிப்பின் பல நுணுக்கங்களை அவரிடம் தெரிந்துகொண்டேன். என்னை ஆச்சர்யப்பட வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவருடன் நடித்த போது பல சிறப்புகள் வந்தன.
அவையென்ன.?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us