(32) ஒளி விளக்கில் வாய்ப்பு கொடுத்த எம்.ஜி.ஆர்!
"ஒளி விளக்கு' படத்தில் டைட்டில் கார்டு பிரச்சினை பற்றி இரண்டு அத்தியாயங்களுக்கு முன்னால் சொல்-யிருந்தேன். அப்போது நடந்த சம்பவத்தை கொஞ்சம் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன்.
"ஒளி விளக்கு' பட டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெய லலிதா பெயரும் மூன்றாவதாக என் பெய ரும் வந்திருந்தன. இதெல்லாம் எனக்கு தெரியாது, டைட்டில் கார்டு பார்த்து எனக்கு பயங்கர ஷாக். எஸ்.எஸ்.வாசன் சார்கிட்ட போய் கேட்டேன்.
"அவங்க மகள் பெயர்தான் முதல்ல வரணும்னு அவங்க பிடிவாதமாயிருந்து கைப்பட எழுதி வாங்கிட்டாங்க, என்னை தப்பா நினைக்காதீங்க சௌகார்'' என்றார். பிறகு என்னை ஆற்றுப்படுத்தும் விதமாக டைட்டில்ல அவங்க (ஜெயலலிதா) பேர் உங்க பேருக்கு முன்னால வந்திருக்கலாம், ஆனால் படம் பார்த்துவிட்டு உங்க கேரக்டர்தான் பேசப்படும் என்று எனக்கு வாசன் சார் சொல்லியனுப்பினார். அவர் சொன்னது போலவே நடந்தது. என் நடிப்பும், என் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டது, பத்திரிகை களும் பாராட்டி எழுதின.
"இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கை ஒளி விளக்கு'
என்ற பாடலில் நான் உருக்கத்தோடு பாடி நடிக்கும் காட்சியாக அ

என்ற பாடலில் நான் உருக்கத்தோடு பாடி நடிக்கும் காட்சியாக அது அமைந்ததால், குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் நான் பெரிய அளவில் பேசப்பட்டேன். அன்று முதல் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இதயங்களில் நல்ல இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன்.
"ஒளி விளக்கு' படத்தில் நடிப்பதற்காக நான் வாய்ப்பு கேட்ட அந்த சம்பவம் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது. ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்கும் ஒரு லட்சிய கதாபாத்திரம் மனதில் இருக்கும். அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல அப்போது எனக்கும் ஒரு கதாபாத்திரத்தின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது.
ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற "பூல் அவுர் பத்தர்' படம் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்தது. அந்தப் படம் சென்னையில் ரொம்ப நாட்கள் ஓடியது. அந்தப் படத்தை யாராவது தமிழில் தயாரித்தால், அதில் மீனாகுமாரி நடித்த வேடத்தில் நான் நடிக்கவேண் டும் என்று ஆசைப்பட்டேன். "அந்தப் படத்தின் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கி, தமிழில் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார்கள்' என்ற தகவல் கிடைத்தது. மீனாகுமாரி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப்போகிறதோ என்று என் மகளிடம் முன்பு ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தேன்.
"ஏம் மம்மி இந்தக் கேரக்டரில் நடிக்க அவ்வளவு ஆசையா உனக்கு?'' என்று கேட்டாள்.
"ஆமாம்'' என்றேன்.
"அப்போ நீயே ஜெமினி வாசன் சாரை போய் கேட்டுப்பாரேன். ஹாலிவுட் நடிகர்கள் இப்படித்தான் வலிய போய் நல்ல கேரக்டர்கள கேட்டுப்பெறுவார்கள். அதில் ஒன்றும் தரக் குறைவோ, தவறோ கிடையாது என்று நெருங்கிய பிரண்ட்ஸ் சொல்வாங்க'' என்றாள் என் மகள்.
உடனே ராமாபுரம் தோட்டத்திற்கு போன் செய்தேன். மறுமுனையில் வி.என்.ஜானகி அக்கா. "என்னம்மா ஜானகி நல்லா இருக்கியா? என்ன விஷயம்? ஏதாவது தேவையா'' என்று கேட்டார்.
"அண்ணன் இருக்கிறாரா?'' என்றேன். அடுத்த நிமிடமே சின்னவர் எம்.ஜி.ஆர். பேசினார்.
"என்ன ஜானகி ஏதாவது உதவி தேவையா?'' என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
"நீங்க நடிக்கப்போகிற நூறாவது படத்தில், ஹிந்தியில் மீனாகுமாரி செய்த இளம் விதவை வேடத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன். அது எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம்'' என்றேன்.
"அப்படியா... நல்லது நீயே அந்த வேஷத்தை செய்'' என்று பட்டென்று சின்னவர் எம்.ஜி.ஆர். சொன்னதும் சந்தோஷத்தில் மிதந்தேன். அந்த சந்தோஷம் மறுநாள் இரட்டிப்பானது. நம்மு டைய குறையோ, ஆசையோ எம்.ஜி.ஆரிடம் சொன் னால் போதும் அது 100% நிறைவேறின மாதிரி.
அப்படித்தான் அப்போதும் நடந்தது. மறுநாள் காலையில் ஜெமினி நிறுவனத்திலிருந்து கார் வந்தது. "ஒளி விளக்கு' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்றுச் சென்றனர். இதுதான் எம்.ஜி.ஆர். செல்வாக்கு. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை கண்டு சிலிர்த்துப் போனேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் "பணம் படைத்தவன்', "பெற்றால்தான் பிள்ளையா' படங்களில் நடித்திருந்தாலும் "ஒளி விளக்கு' எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எம்.ஜி.ஆர். தமக்குள்ள எல்லையை நன்கு புரிந்தவர். நல்ல டெக்னீஷியன். மனிதாபிமானம் மிக்கவர். சினிமா மீடியாவின் பலத்தை நன்றாக உணர்ந்தவர். அதை சரியாகப் பயன்படுத்தி வரலாறு படைத்தவர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டும்தான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/sowcarjanaki1-2026-02-02-16-09-05.jpg)
"ஒளி விளக்கு' படத்தின் படப்பிடிப்பு சிறப்பாகவும் நிறைவாகவும் நடந்து முடிந்தது. அதில் அவர் குண்டடி பட்டு சிகிச்சைபெற்று வந்த காட்சிகளும் இடம்பிடித்தன. படத்தின் வெற்றிக்கு அவை பலமாக அமைந்தன. அப்போது எம்.ஜி.ஆர். ஒரு நினைவுப்பரிசும் எனக்கு வழங்கினார். "சிறப்பாக நடித்து அந்த வேடத்திற்கு உயிர் கொடுத்தீர்கள்' என்று பாராட்டினார். அவருடைய காரில் இருந்த எமர்ஜென்சி விளக்கை எடுத்து எனக்குப் பரிசாக கொடுத்தார். அதை நான் என் வீட்டில் பொக்கிஷம்போல பாதுகாத்து வருகிறேன். அந்த விளக்கைப் பார்க்கும்போதெல்லாம் லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் அவர் ஏற்றிய நினைவு... சுடர்விட்டு இன்னமும் பிரகாசித்துக்கொண்டிருக் கிறது என்று நினைத்துக்கொள்வேன். எம்.ஜி.ஆர். அமெரிக் காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சமயத்தில், தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் மட்டுமல்ல... தமிழர்கள் வாழ்கின்ற இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற இடங்களிலெல்லாம் "ஒளி விளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர். நலம்பெற வேண்டி நான் பாடும்...
ஆண்டவனே உன் பாதங்களை
நான் கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழவைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்
முருகையா...
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு...
இறைவா நீ ஆணையிடு...! பாடல் ஒலித்தது.
முதல்வர் எம்.ஜி.ஆர். நலம்பெற்று நாடு திரும்பிய பிறகு அவரைச் சென்று பார்த்தேன். "நீ நடித்த பாடல் எங்கும் ஒலிக்குதேம்மா... ரொம்ப நன்றிமா'' என்று நெகிழ்ந்தார்.
எம்.ஜி.ஆரின் அன்பு உள்ளம் கண்டு கலங்கினேன். அதேபோல வி.என்.ஜானகி அக்கா கூட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லி நெகிழ்ந்தார். இருவருக்கும் எத்தனை பெரிய மனசு பாருங்க. திரையுலகில், தானே ஒரு சரித்திரமாகிவிட்ட எம்.ஜி.ஆர். பற்றி நினைக்கும்போது இன்னும் சில விஷயங்கள் நினைவுத் திரையில் வருகின்றன.
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us