Advertisment

நான் பட்டு மாமி பேசுறேன்...! சௌகார் ஜானகி லைஃப் ரிலே.. -எழுத்தாக்கம்  "கலைமாமணி' சபீதா ஜோசப் (30)

sowcarjanaki2

(30) எம்.ஜி.ஆருக்கு அடுத்து சௌகார் ஜானகியா?  -ஜெயலலிதா போட்ட சண்டை!  


டிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை நான் பெரிதும் ரசித்துப் பார்ப்பேன். "படிக்காத மேதை'யில் அவருக்கு  வித்தியாசமான வேடம். வெளியுலகமே தெரியாத, சூதுவாது அறியாத வெள்ளை மனம் கொண்ட ரங்கன் எனும் கதாபாத்திரம். "உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சாதான் நீயும் உலகத்தைத் தெரிஞ்சுக்க முடியும்' என்று பெரியவர் ரங்காராவ் சொல்லும்போது, ரங்கனாக நடிக்கும் சிவாஜி குழந்தைத்தனமாக "இப்ப எனக்கு மட்டும் சோறு  போடுறீங்க, கல்யாணம் செஞ்சு வச்சா நீங்கதான் எங்க ரெண்டு பேருக்கும் சோறு போடணும்' என்று கூறும், அவருடைய அந்த வெகுளித்தனமான பேச்சும், சிரிப்பும், நடிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

Advertisment

"பாலும் பழமும்' படத்தில் கவியரசு கண்ண தாசனின் தத்துவப் பாடல்களுடன் நடிகர் திலகத் தின் குணச்சித்திர நடிப்பும் ஒன்றுசேர்ந்து படத்தை தூக்கி நிறுத்தியது. "எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா' என்று சிவாஜி துயரக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பாடி நடித்தபோது, கரையாத உள்ளமும் கரைந்து கண்ணீர் சிந்தும் நிலையை உருவாக்கிக் காட்டியிருந்தார்.

Advertisment

"பாலும் பழமும்' போலவே "பார்த்தால் பசி தீரும்' படத்தில் இடம்பெற்ற  கவியரசு கண்ணதாசனின் பாடல்களும் மனதுக்கும் காதுக்கும் இனிமை சேர்த்தன. குறிப்பாக... 

"உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது 
ஊமை'
"கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் 
கொடியசைந்ததா?'

"அன்று ஊமைப் பெண்ணல்லோ'

"யாருக்கு மாப

(30) எம்.ஜி.ஆருக்கு அடுத்து சௌகார் ஜானகியா?  -ஜெயலலிதா போட்ட சண்டை!  


டிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை நான் பெரிதும் ரசித்துப் பார்ப்பேன். "படிக்காத மேதை'யில் அவருக்கு  வித்தியாசமான வேடம். வெளியுலகமே தெரியாத, சூதுவாது அறியாத வெள்ளை மனம் கொண்ட ரங்கன் எனும் கதாபாத்திரம். "உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சாதான் நீயும் உலகத்தைத் தெரிஞ்சுக்க முடியும்' என்று பெரியவர் ரங்காராவ் சொல்லும்போது, ரங்கனாக நடிக்கும் சிவாஜி குழந்தைத்தனமாக "இப்ப எனக்கு மட்டும் சோறு  போடுறீங்க, கல்யாணம் செஞ்சு வச்சா நீங்கதான் எங்க ரெண்டு பேருக்கும் சோறு போடணும்' என்று கூறும், அவருடைய அந்த வெகுளித்தனமான பேச்சும், சிரிப்பும், நடிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

Advertisment

"பாலும் பழமும்' படத்தில் கவியரசு கண்ண தாசனின் தத்துவப் பாடல்களுடன் நடிகர் திலகத் தின் குணச்சித்திர நடிப்பும் ஒன்றுசேர்ந்து படத்தை தூக்கி நிறுத்தியது. "எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா' என்று சிவாஜி துயரக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பாடி நடித்தபோது, கரையாத உள்ளமும் கரைந்து கண்ணீர் சிந்தும் நிலையை உருவாக்கிக் காட்டியிருந்தார்.

Advertisment

"பாலும் பழமும்' போலவே "பார்த்தால் பசி தீரும்' படத்தில் இடம்பெற்ற  கவியரசு கண்ணதாசனின் பாடல்களும் மனதுக்கும் காதுக்கும் இனிமை சேர்த்தன. குறிப்பாக... 

"உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது 
ஊமை'
"கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் 
கொடியசைந்ததா?'

"அன்று ஊமைப் பெண்ணல்லோ'

"யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ..?'

போன்ற பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரிதும் பயன்பட்டன. 

இந்தப் படத்திற்கு சிவாஜி கணேசனின் ஆஸ்தான  இயக்குனரான திருலோகசந்தர் கதை எழுத, ஆரூர்தாஸ் வசனத்தில், திரைக்கதை அமைத்து பீம்சிங் இயக்கினார். 

sowcarjanaki

இந்த மூவரும் சிவாஜியின் இனிய நண்பர்கள். அவரது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் என்பது நான் சொல்லித் தெரியவேண்டும் என்பதில்லை. "பார்த்தால் பசி தீரும்' 1962ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்தது. சி.ஆர்.பசவராஜ் தயாரித்தார். ஏவி.எம். நிறுவனம்  படத்தை வெளியிட்டது. அதன் வெற்றிக்குப்  பின்னால் ஏவி.எம்.மின் விளம்பர யுக்தி இருந்தது என்றால் மிகையாகாது.  இதில் ஜெமினிக்கு ஜோடியாக நானும், சாவித்திரியும், சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி, தங்கவேலுக்கு ஜோடியாக எம்.சரோஜா ஆகியோர் நடித்தோம். இதில் குட்டிப்பையன் கமலஹாசன் சாவித்திரிக்கும், எனக்கும் மகனாகத் தோன்றினார். அப்போதே அவர் நடிப்பில் படுசுட்டி. அவருடைய முதல் இரட்டை வேட படம் இதுதான். ராணுவ வீரர்களின் வாழ்க்கையை, காதலைச் சொல்லும் குடும்பச் சித்திரமான "பார்த்தால் பசி தீரும்' மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. 

அதே ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் "பவித்ர பிரேமா' என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து அங்கும் வெற்றி பெற்றது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது என்பார்கள். அப்படித்தான் சினிமா அமைதி யாக இருந்தாலும் சர்ச்சைகள் சும்மா இருக்கவிடாது.  "பார்த்தால் பசி தீரும்' படத்திலும் ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது. அதற்கு காரணம் நடிகைகளான நாங்கள்தான். இந்தப் படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள். சாவித்திரி, நான், சரோஜாதேவி. நல்ல அமைப்பான திரைக்கதை என்பதால் மூவரும் சேர்ந்து நடித்தோம். ஆனால் டைட்டில் கார்டில் யாருடைய பெயர் முதலில் வரவேண்டும் என்கின்ற சர்ச்சை அங்குதான் ஆரம்பமானது. 

இதற்கு திரையுலக ஜாம்பவான் ஏவி.எம்.செட்டியார் நூதனமான முறையில் "உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று  டைட்டில் கார்டு போட்டார். முதலில் சிவாஜி, அடுத்து சரோஜாதேவி, மூன்றாம் இடத்தில் ஜெமினி -சாவித்திரி படம், நான்காவதாக என் படம், அடுத்து தங்கவேலு -எம்.சரோஜா, கமல் இரட்டை படம் என்று எங்கள் புகைப்படங்களைப்  போட்டிருந்தனர். "பார்த்தால் பசி தீரும்' படத்தின் டைட்டில் கார்டு தகராறு குறித்து, அப்போது சாவித்திரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நான்தான் சரோஜாதேவியை விட சீனியர். ஆனால் அவர் எனக்கு அடுத்த இடத்தில் தனது பெயரை போட்டுக்கொள்ள ஏதாவது மறுப்பு சொல்லியிருப்பார் போலிருக்கிறது.   என்னுடைய பெயரை தொடர்ந்து சரோஜாதேவி பெயர் அப்புறம் சௌகார் ஜானகி பெயர் இருந்திருந்தால் சரியாக இருக்கும்.  "எங்க வீட்டு மகாலட்சுமி' படத்தில் கண்ணம்பா பெயரைத்தான் முதலில் காட்டினார்கள். அப்போதும் நான் முன்னணி நடிகை என்றாலும் என் பெயரை கண்ணாம்பா வுக்கு அடுத்ததாக போட ஒப்புக்கொண்டேன்.  "பார்த்தால் பசி தீரும்' பட டைட்டில் பகுதியில் எல்லோருடைய படத்தையும் ஒருங்கே காட்டி மதிப்பளிக்கப்பட்டது ஆனால், அது சென்னையில் மட்டும்தான் அப்படிக் காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயரே மேலே இருந்ததாகக் கேள்விப்பட்டேன். எந்தப் படமானா லும் நடிப்புதான் முக்கியம். பெயர் போட்டுக்கொள் வதில் நீ முந்தி, நான் முந்தி என்று சண்டை போடு வது எனக்கு பிடிக்கவில்லை. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன்'' என்று சாவித்திரி தனது மனக்குமுறலை  வெளிப்படுத்தியிருந்தார்.

sowcarjanaki1

என் பெயர்தான் டைட்டில் கார்டில் முதலில் வரவேண்டும் என்கின்ற சர்ச்சை 1958-ல் "வஞ்சிக் கோட்டை வாலிபன்' படத்தில் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.   வைஜயந்தி மாலாவும் பத்மினியும் போட்டி போட்டு நடனம் ஆடும்போது "சபாஷ் சரியான போட்டி' என்று பி.எஸ்.வீரப்பா சொல்வார் அல்லவா! அப்படித்தான் அந்த படத்தில் பத்மனிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் யார் பெயர் முதலில் வரவேண்டும் என்று போட்டி தலையெடுத்தது.

"தமிழ்நாட்டில் என்னுடைய மகள் பத்மினி தான் முன்னணி நடிகை. அதனால் அவள் பெயர் தான் முதலில் வரவேண்டும்' என்று பத்மினியின் தாயாரும்  "தமிழ் சினிமாவிலும்  இந்தி சினிமாவி லும்  என் பேத்திதான் முன்னணி நடிகை, எனவே வைஜயந்திமாலா பெயர்தான் முதலில் வரவேண்டும்' என்று அவரது பாட்டியும் சொல்ல...  இதனால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எஸ்.எஸ். வாசன் சாருக்கு பெரிய தலைவலியாக போய்விட்டது. இந்த போட்டா போட்டியால் படத்தின் வெளியீடு தள்ளிப் போகுமோ என்கின்ற அச்சமும் அவருக்கு. அது மட்டுமல்ல, வஞ்சிக் கோட்டை வாலிபன் படம் ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும்  எடுத்தார் எஸ்.எஸ்.வாசன். இரண்டு மொழியிலும் இவர் கள்தான் கதாநாயகிகள். 

இந்தப் பிரச்சினை ஓரிரு நாள் நீடித்தது.  பிறகு பத்மினியின் அம்மாவும், வைஜெயந்திமாலாவின் பாட்டியும் ஒரு முடிவுக்கு வந்தனர். தமிழில் பத்மினி பெயரை முதலில் போடுவது,  அதேபோல ஹிந்தியில் வைஜெயந்திமாலா பெயர் முதலில் போட்டுக் கொள்ள லாம்'' என்று பத்மினியின் தாயார் சொல்ல, இரு தரப்பும் ஏற்றுக்கொண்டது.

இதை எதற்கு இங்கு சொல்கிறேனென்றால், என்னுடைய வாழ்க்கையிலும் இதேபோல ஒரு டைட்டில் கார்டு பிரச்சினை வந்தது. இதே ஜெமினி நிறுவனம் தயாரித்த எம்.ஜி.ஆரின் நூறாவது பட மான "ஒளி விளக்கு' படத்தில் அந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத் திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா என்றாலும் மிகமிக முக்கியமான கதாபாத்திரம் என்னுடையது. பாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து கதை பின்னப்பட்டிருந்தது.  கதையின் நாயகி நான்தான். என்னை முன்னிட்டுதான் கதை நகரும்.  எனவே ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆர்., அடுத்து சௌகார் ஜானகி என்று என் பெயரை டைட்டில் கார்டில் போட முடிவு செய்திருந்தது. ஜெயலலிதாவும் அவ ருடைய அம்மாவும் பெரிய பிரச்சினை பண்ணிட் டாங்க. "எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா. அவருடைய பெயர்தான் முத-ல் வரவேண்டும்.  எம்.ஜி.ஆருக்கு அடுத்து சௌகார் ஜானகி பெயரை எப்படிப் போடலாம்...? மூன்றாவதாகத்தான் சௌகார் பெயர் இடம் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் சார்கிட்ட சண்டை போட்டார்கள்.

ஹிந்தி கதையில் ஜெயலலிதா கதாபாத்திரம் இல்லை, தமிழில் கமர்சியலுக்காகவும் எம்.ஜி.ஆருக்கு ஒரு ஜோடியாகவும் ஜெயலலிதா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. 

அப்புறம் நடந்தது என்ன?

(பேசுறேன்...)

படங்கள் உதவி: ஞானம்

nkn280126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe