ர் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு அரசியல் களம் 33 ஆண்டுகளாகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 1992ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆட்சி செய்த அந்த கொடுங்காலத்தில், ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள் மீதும், அதிகார துஷ்பிரயோகத்திற்கு உதவாதவர்கள் மீதும் ஆளுங்கட்சியினரால் கடும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றன.

Advertisment

நக்கீரன் தனது பிரிண்டர் அய்யா கணேசனை சிறை சித்ரவதைகளால் பலி கொடுத்தது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் வீட் டிற்கு ஆட்டோவில் சென்ற அடியாட்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டார். வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றுயிராக சிதைக்கப் பட்டு மீண்டெழுந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தங்கியிருந்த இடத்தை அ.தி.மு.க.வினர் தாக்கினர். கவர்னராக இருந்த சென்னாரெட்டியும் ஜெயலலிதாவின் அடியாள் கூட்டத்தி லிருந்து தப்ப முடியாமல் திண்டிவனத்தில் சிக்கிக் கொண்டார்.

Advertisment

அந்தக் கொடூர காலத்தில் தாக்குதல் களிலேயே மிகக் கொடுமையானது ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தை சிதைத்த ஆசிட் வீச்சுதான். ஸ்பிக் நிறுவனத்தில் அரசு சார்பிலான பங்குகளை குறைந்த விலையில் விற்பதற்கு ஜெயலலிதா முடிவெடுத்த போது, அதை கவனிக்கும் துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சந்திரலேகா, சட்டவிதி களை சுட்டிக்காட்டி சம்மதிக்கவில்லை. அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லி மறுத்தார். கோபம் கொண்ட ஜெயலலிதா தனது பரிவாரங்கள் மூலம் பழிவாங்க பக்கா ப்ளான் போட்டார்.

chandralekha1

1992ஆம் ஆண்டு எழும்பூரிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து காரில் வெளியே வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் உயிர் பிழைத்ததே பெரும்பாடானது. பெண் அதிகாரி யின் முகம், பெண் முதலமைச்சரின் ஆட்சியில் கொடூரமாக சிதைக்கப்பட்டது. இப்படியெல் லாம் ஒரு கொடூரம் நடக்குமா என்று தமிழ்நாட்டையே அதிர வைத்த அந்த ஆசிட் வீச்சு கொடூரத்தின் பின்னணியை 5-11-1992 இதழில் அம்பலப்படுத்தியது நக்கீரன்தான்.

Advertisment

மும்பையிலிருந்து சுர்லா என்ற ரவுடியை அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் மூலம் அழைத்து வந்து ஆசிட் தாக்குதலை நடத்தியதை, ரவுடி சுர்லா படத்துடன் அட்டைப்படக் கட்டுரையாக 14-1-93ல் நக்கீரன் வெளியிட்டது. சந்திரலேகா மீது தாக்குதல் நடத்தச் சொன்னவர்கள் யார் என்பதை சுர்லா நக்கீரனிடம் வெளிப்படை யாகத் தெரிவித்திருந்தான். அதுமட்டுமல்ல, நீண்ட புலனாய்வு போராட்டத்திற்குப் பிறகு, ஆசிட் வீச்சால் தாக்கப்பட்ட சந்திரலேகாவின் புகைப்படத்தையும் அட்டைப்படமாக நக்கீரன் வெளியிட்டபோது தமிழ்நாட்டுப் பெண்கள், "அடிப்பாவி.. ஜெயலலிதா'’என்று அதிர்ந்தனர்.

இவ்வளவும் நடந்த போதும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தன் மீதான ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு யார் காரணம் என் பதை வெளிப்படை யாக சொல்வதை தவிர்த்தே வந்தார். ஆசிட் வீசப்பட்ட 4 ஆண்டுகள் கழித்து 1996 சென்னை மேயர் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக அவர் போட்டியிட்டுத் தோற்றார். 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சந்திரலேகா பொறுப்பு வகித்த சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி பங்கேற்றது.

அரசியல் அழுத்தங்கள் எதுவும்  இல்லாத நிலையில், தன் மீதான ஆசிட் வீச்சு என்பது ஜெயலலிதாவின் பழிவாங்கும் செயல்தான் என்று சந்திரலேகா தற்போது ஒரு வீடியோ பேட்டியில் முதன்முறையாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். 

அந்தப் பேட்டியில் அவர்... "ஜெயலலிதாவுக்கும் எனக்கும் பர்சனலா ஒரு இஷ்யூ இருந்தது, அது வேற விஷயம். ஜெயலலிதாவுக்கு தன்னை எதிர்க்கிறவங்க யாரையும் புடிக்காது. "என்னை எதிர்த்துப் பேசினா, நான் சொல்ற ஸ்கீமுக்கு எதிரா பேசுனா எனக்குப் புடிக்காது" அவ்வளவுதான். இன்மென்சூர்டு... பக்குவம் இல்ல. ஒரு ஸ்கீம்தான்... அந்த ஒரு ஐட்டத்துலதான் பிரச்சினையே வந்தது. ஸ்பிக் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட்லதான் பிராப்ளம் வந்தது. நான் சொன்னது புடிக்கல. நான் சொன்னேன், "குறைச்ச விலைக்கு விக்கிறீங்க, அது தப்பு... கவர்மெண்ட் பணம்'னு. அந்த நேரத்துல மத்த அதிகாரிகள்லாம் எதுத்துப் பேச பயப்பட்டாங்க. ஜெயலலிதா பண்ணுனத யாரும் மன்னிக்க முடியாது.''

பாதிக்கப்பட்டவரே உண்மையைச் சொல்வதற்கு 32 ஆண்டுகள் தேவைப்பட்டிருக் கிறது. ஆனால், அப்போதே உண்மையை உரக் கச் சொன்னது நக்கீரன். பாதிக்கப்பட்டவர் களே பயந்தாலும் அவர்களின் குரலாக, பய மின்றி ஒலிப்பதே நக்கீரன் பாணி. இதைத்தான் முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர், ‘"நக்கீரனிசம்'’ என்றார்.  நக்கீரனின் ஒவ்வொரு புலனாய்வும் ஒரு வரலாற்று ஆவணம்!


-ஆசிரியர்